TerrorisminFocus

Wednesday, May 19, 2010

பத்திரிகையாளர்களை தாக்கும் சி ஆர் பி எப் பொறுக்கிகள் மற்றும் பல செய்தி துணுக்ஸ்!!

துணுக்ஸ் 1:

மேற்கு வங்கம் மேற்கு மிதான்பூரில் நேற்று பத்திரிகையாளர்களை சி ஆர் பி எப் பொறுக்கிகள் கொடூரமாக தாக்கியுள்ளனர். விடியோ இங்கு காணக் கிடைக்கும். எவ்வளவு திமிருடன் அடிக்கிறார்கள் பாருங்களேன்?




பத்திரிகையாளர்களுக்கே இதுதான் நிலையெனில் மேற்கு மிதான்பூர், லால்கர், நந்திகிராம், சிங்கூர், கலிங்காநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இந்த பன்னாட்டு கம்பனிகளின் கூலிப்படை அங்குள்ள அப்பாவி மக்களுக்கு என்னென்ன அட்டுழியங்களை செய்திருக்கும்?

அப்புறம் ஏன் அவன் திருப்பி அடிக்க மாட்டான்? செய்வதையும் செய்துவிட்டு 75 பேர் செத்துட்டான், 50 பேர் செத்துட்டான் என வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? வினை விதைத்தவன் வினைதான் அறுப்பான்.

இந்தப் பகுதிகளில் அரசு பயங்கரவாதப் படைகள் நூற்றுக்கணக்கில் அப்பாவி பழங்குடியினரை சுட்டுக் கொன்றுள்ளனர். பெண்களை வன்புணர்வு செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டில் மட்டும் மாவோயிஸ்டுகளின் செல்வாக்குள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் 589 சிவிலியன் மக்களை அரசுப் படைகள் கொன்று போட்டிருக்கின்றன; சிறுவர்களின் விரல்களை வெட்டிப் போட்டுள்ளனர்; பெண்ணின் மார்பகத்தை அறுத்து வீசியுள்ளனர்; இதைவிடக் கொடூரம் காட்டுமிராண்டித்தனம் என்ன இருக்க முடியும்! சட்டிஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் மட்டும் வீடுகளைச் சூறையாடியும் இடித்துத் தள்ளியும் தீயிட்டுக் கொளுத்தியும் 700பழங்குடி கிராமங்களைச் சுடுகாடுகளாக்கி விட்டனர். 3 லட்சம் பழங்குடியினரை விரட்டியடித்து வீடுகளை, கிராமங்களை கொளுத்தியுள்ளனர். இத்தனை செய்தாலும், சி ஆர் பி எபிடம் அடிவாங்கினாலும் இந்த பன்னாட்டு கூலிப் படைகளின் அராஜகங்களை வன்முறை என்றோ, பயங்கரவாதம் என்றோ ஊடகங்கள் எழுதப் போவதில்லை. அரசுக்கு மட்டுமே தனது மக்களை கொல்லும் உரிமை உள்ளது போலும்.

ஏனேனில், முதுகெலும்பை அடகு வைத்த ஊடகத்துறைதான் இந்தியாவில் உள்ளது. அடிக்கின்ற எஜமானனிடம் பிஸ்கெட் வாங்கித் தின்று கொண்டு நத்திப் பிழைக்கும் கேவலமானவர்களாகவே ஊடகங்கள் உள்ளன.

இதை விட கூத்து டைம்ஸ் ஆப்பு இந்தியாவின் ஊடகவியலாளர் அடி வாங்கியதை கொண்டாடி, சி ஆர் பிஎப்பை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர் சில இந்தியர்கள் (வேறு யாருமல்ல அமெரிக்க வாழ் இந்தியர்கள்தான் அவர்கள்).
பேசாம, நாடு கடந்த அரசு என்ற நடைமுறையை இந்திய அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிடலாம். ஜனநாயகம் ஜெகக்ஜோதியா செழிக்கும்.


துணுக்ஸ் 2:

தெஹல்காவோட மேனேசிங் எடிட்டர் சோமா சௌத்ரி, கொஞ்ச நா முன்ன வேதாந்தா கம்பனி முன்னாள் மேனேசிங் டைரக்டர் ப. சிதம்பரத்திடம் சில கேள்விகள கேட்டாங்க,


சோமா சௌத்ரி:
மணிப்பூர்ல இந்த வருசம் மட்டும் 285 போலி என்கௌண்டர்கள் நடந்திருக்கு.
அதுல ஒன்ன தெஹல்காகூட போட்டொவோட அம்பலப்படுத்திருக்கோம். நக்சலைட்டுகளை எதிர்க்கிறோம்ங்கிற பேரில் அப்பாவி பழங்குடிகளை சித்திரவதை செய்வதை காந்தியவாதி ஹிமன்ஸு குமார் அம்பலப்படுத்தியிருக்கிறார். பழங்குடியின மக்கள் இந்த அமைப்பின் மீது மொத்தமாக நம்பிக்கையிழந்துள்ளனர். அவர்களால் குற்றங்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையைக் கூட பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. மனித உரிமை அமைப்புகள் என்ன சொல்கின்றன என்றால், பழங்குடியின மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்காமல் அமைதிப் பேச்சுவார்த்தை என்று சொல்வதெல்லாம் சுத்த வேஸ்ட்னு. இந்நிலையில் இது போன்ற அரசு வன்முறைகளை கட்டுப்படுத்த ஒரு வலுவான செய்தியை ஒன்றை அரசுக்கு தெரிவிப்பீர்களா? குற்றம் சாட்டப்பட்டுள்ள சல்வா ஜூடம் அதிகாரிகளில் சிலரை கைது செய்வீர்களா....

பா. சிதம்பரம் அதுக்கு சொன்னாரு: "I’m glad you think I have so much power and authority. Law and order is a state subject. All that you have spoken about in the last couple of minutes falls under the jurisdiction of the State governments, the Chief Minister and Home Minister of the state. You must take up cudgels with them. If I interfere too much they are likely to throw List II of the Constitution at me."

அதாவது, 'எனக்கு அந்தளவுக்கு அதிகாரம் கிடையாது. லா அண்டு ஆர்டரு மாநிலத்தோட மேட்டரு. கொஞ்ச முன்ன நீங்க பேசின எல்லாமே அவிங்க சட்டத்துக்குள்ள வற்றது. நீங்க அவிங்ககிட்டதான் கேக்கனும். நான் இந்த விவகாரங்களில் நெம்ப தலையிட்டாக்க அரசியலமைப்புச் சட்டப் பட்டியல் IIயை எனக்கு எதிரா வீசிறிவாய்ங்க' என்கிறார் பா. சி.

இதுக்கு சோமா சௌத்ரி சொன்னது: நீங்க எஸ்கேப்ஸ் ஆப் இண்டியா ஆவுறீங்க

நமக்கு சில கேள்விகள் வருது. இன்ன தேதி வரை அரசுப் படைகள்(அல்லது பன்னாட்டு கம்பனிகளின் கூலிப் படைகள்) பழங்குடியின மக்களை கொன்றொழிப்பது தொடர்கிறது. இந்த மாதம் மட்டும் இதுவரை பல தாக்குதல்களை அப்பாவி மக்கள் மீது நடத்தி மக்களை கொன்றொழித்துள்ளார்கள். இரு நாள் முன்பு கூட இருவரை போலீசு சுட்டுக்கொன்றது. இன்னிலையில் அரசின் இந்த கோடூரச் செயல்களை கண்டிக்க வக்கில்லாத, கட்டுப்படுத்த வக்கில்லாத பா. சிதம்பரம். அதனை எதிர்த்து மக்கள் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து போராடினால் மட்டும் தலையிடுகிறாரே ஏன்? அத்தையும் கண்டுக்காம போக வேண்டியதானே?

லா அண்டு ஆர்டரெல்லாம் மாநில அரசோட வேலைன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதானே?

அரசு வன்முறையைச் சொல்லி கேள்வி கேட்டாக்க 'ஒரு அளவுக்கு மேல என்னால தலையிட முடியாது' என்று எஸ்கேப் ஆகும் பா. சி. அதே போல மக்களின் எதிர்வன்முறையின் போதும் எஸ்கேப்ஸ் ஆக வேண்டியதுதானே? ஏன் வாண்டட்டா கூலிப் படைய அனுப்புறாரு?

அடுத்து சோமா சௌத்ரி கேட்ட கேள்வி:
காந்தியவாதி ஹிமன்ஸு குமார் என்ன சொல்றாருன்னாக்க, நீங்க நக்சலைட்டுகளுடன் பேச வேண்டாம். அந்தப் பகுதி மக்கள்ட போயி பேசுங்க. அதுவே மாவோயிஸ்டுகளை இல்லாததாக்கி அரசை பலப்படுத்தும்.

பா. சி. அதுக்கு சொன்னாரு: சிரி சிரி ரவிசங்கர்னு ஒருத்தங்கீறான். அவனோட கொள்கைல்லாம் எனக்குப் பிடிக்காது ஆனாக்கூடி அவன் அந்தப் பகுதிகள்ள வேலை செய்யத் தயார்னாக்க நான் உதவுறேன்னு சொன்னேன். என்னால என்ன முடியுமோ அவ்வளவையும் செய்வேன். நானே வந்து கூட பேசத் தயார். ஆனா அவிங்கதான்(பழங்குடியினர் மற்றும் மனித உரிமை அமைப்புகள்) யாருமே இன்ன வரைக்கும் பேசுறதுக்கு வரல.

ஆஹ, பா. சி நெம்ப நல்லவனாட்டம் யார்ட்டயும் பேசுவதற்கு காத்திருக்க மாதிரி பிலிம் காட்டிருக்கான் இந்த பேட்டீல. ஏதோ ஹிமன்சு குமார் வந்தாக்க உக்கார வைச்சி பேசி அனுப்புறா மாதிரியே பேசிருக்கான் இந்த மழுங்கான் மண்டையன். ஆனா உண்மையிலேயே என்ன நடந்திச்சி? இந்தப் பேட்டி வந்த சில நாட்களில் ஹிமான்சு குமாரின் மொத்த ஆசிரமும் அடித்து நொறுக்கி தரை மட்டமாக்கப்பட்டு அவர் விரட்டியடிக்கப்பட்டு விட்டார். ஏண்டா அவர் உங்களுக்கு நல்லதுதானே செஞ்சாரு? மாவோயிஸ்டுகள் ஒழிக்கறதுக்குத்தான அவர் ஐடியா கொடுத்தாரு? நீ செஞ்ச அயோக்கியத்தனத்த பேசின ஒரே காரணத்தாலதான் அவர அடிச்சி விரட்டிருக்க?

ஆஹ மொத்தத்தில் உன்னோட நோக்கம் மாவோயிஸ்டை ஒழிப்பதோ, மக்களின் நல்வாழ்வை காப்பதோ இல்லை. உன்னோட ஒரே நோக்கம் பன்னாட்டு கம்பனிக்கு அந்த இடங்களை பட்டா எழுதிக் கொடுப்பது. அதுக்கு இடைஞ்சலா இருக்குறவனப் பூறாம் மாவோயிஸ்டுன்னு ஸ்டாம்பு குத்தி கொல்றது, அதானே?

இதுக்கு ஏண்டா நீ பாரின்ல போயில்லாம் படிக்கனும்? கொஞ்சோண்டு இனிப்பு மிட்டாய எடுத்து மூஞ்சி புல்லா அப்பிட்டு நாக்கால நக்கி பழகினாலே போதுமே? நல்லா பூட்ஸ் நக்குற திறம வந்துறுமே?

இந்த பேட்டியப் படிச்சாக்க, பா. சி யோட டுபாக்கூர்த்தனம் நிறைய அம்பலமாகியிருக்கும். அந்த மக்களுக்கு ஏன் 60 வருசமா எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லைனு கேட்டாக்க அது இந்த சிஸ்டத்தோட பெயிலியர்னு சொல்றாரு பா. சி. அப்போ இந்த சிஸ்டம் வேண்டாம்னு அந்த மக்கள் தூக்கியெறியறதுல என்ன தப்புன்னு கேட்டாக்க, அப்படிலாம் விட முடியாது. நான் ஆளு அனுப்பி அடிப்பேன்னு சொல்றாரு.

ஒரே மோசடீஸ் ஆப் இண்டியாவாக்கீது...



துணுக்ஸ் 3:


இரு நாட்கள் முன்பு சி என் என் ஐபிஎன்ல் பி. சிதம்பரம் செட்டியாரிடமும், ஜெட்லியிடமும் காரசாரமாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். அவர் கேள்விகளின் சாராம்சம் இவைதான்

அஜ்மீர் முதல் பல்வேறு குண்டு வெடிப்புகளில் மாட்டிக் கொண்டுள்ள ஆர். எஸ். எஸ். பயங்கரவாதிகளை எப்படி பயங்கரவாதிகள் என்று நீங்கள் சொல்லப் போயிற்று?

அவ்வாறு சொல்வது மைனாரிட்டியை குளிர்விக்கும் அரசியல்.

ஆர். எஸ்.எஸ்.தான் செய்தது என்று எப்படி சொல்லப் போயிற்று?

இவ்வாறு கேள்விகள் எழுப்பி குதித்துக் கொண்டிருந்தான் ஒரு வெள்ளை மண்டையன்.

வெகு தெளிவாக இந்த குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.ன் தொடர்பு இருப்பதை ஜெட்லி குறிப்பிடுகிறார். ஆயினும் மழுங்கா மண்டையன் சிதம்பரத்தின் மழுங்கத்தனமான மழுப்பலை வைத்து ஜெட்லியின் கருத்துக்கு எதிர்வாதம் வைக்கிறது சி என் என். அதுவும் குறிப்பாக ஆர் எஸ் எஸ் குண்டு வெடிப்புகளை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளது என்பது இங்கு கூடுதலாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. மேலும், 2009 தீபாவளிக்கு முந்தைய நாள் கோவா குண்டு வெடிப்பு சதித் திட்டத்தில், இந்துக்கள் கூட்டமாகக் கூடிக் கொண்டாடும் இடத்தில் குண்டு வைத்து அதன் மூலம் முஸ்லீம் வெறுப்பை உருவாக்கி குளிர் காயும் திட்டத்தில் குண்டு வைக்க சதி செய்துள்ளனர் ஆர். எஸ். எஸ். பயங்கரவாதிகள். ஆயினும் அவர்களை பயங்கராவாதிகள் என்று சொல்லக் கூடாது என்கிறது சி என் என் ஐபிஎன்.

நல்ல பத்திரிகை தர்மம்.

'எல்லா முஸ்லீமும் பயங்கரவாதி இல்லையாம், ஆனா பயங்கரவாதி எல்லாம் முஸ்லீம்தானாம்' - இந்த முழக்கம் இன்று எங்கே போச்சின்னே தெரியல. குறிப்பாக அஜ்மீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் டைம்ஸ் ஆப் இந்தியா முதல் உள்துறை அமைச்சர் வரை எல்ஈடி, பாகிஸ்தான் என்ற வழக்கமான புலம்பல்களை கொட்டி நிரப்பினர். கடைசியில் செய்தது காவி உடை பயங்கரவாதி. மாலேகானிலும் மாட்டிக் கொண்டது காவி உடை என்றவுடன் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் சொல்கிறார்கள்: 'பயங்கரவாதத்திற்கு மதங்கள் கிடையாது' என்று. இந்த வசனத்தையே தனது புதிய முழக்கமாக ஆர்.எஸ்.எஸ். மறுவாந்தி எடுத்து வருகிறது. ஏண்டா இதே வசனத்தை நியாயமா நீ முஸ்லீம் பயங்கரவாதி குண்டு வைச்ச போதே சொல்லிருக்கனுமே? இல்லையே? மாறாக சிறுபான்மையினரை அச்சுறுத்தத்தி தனிமைப்படுத்தும் வேலையைத்தானே செய்தாய் அப்போது?

நல்ல அரசியல் தர்மம். ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் காங்கிரசிலும் இருக்காங்களாம். இது அபீசியல் கிசு கிசு. அன்-அபீசியல் உண்மை, இந்திய ஆளும் வர்க்கமே ஆர்.எஸ்.எஸ்.தான் இதிலென்ன காங்கிரசு, பிஜேபி, சிபிஎம் என்று பாகுபாடு?


துணுக்ஸ் 4:


கலிங்காநகரில் 2006லிருந்து போராடும் பழங்குடியின மக்களை அரசுப் படைகள் டாடா ரவுடிப் படையுடன் கூட்டுச் சேர்ந்து கோடூரமாக வதைப்பது குறித்தும், கடந்த மே 12ல் நடந்த துப்பாக்கிச் சுடில் ஒருவர் பலியானது குறித்தும் பதிவு எழுதப்பட்டிருந்தது. அந்த பதிவில் வந்த பின்னூட்டம் ஒன்றின் தமிழ் மொழிபெயர்ப்பு.

#####
//Chidambaram is pained by the wanton killings by Maoists//

I don't know why he didn't get pained by the wanton killings by police and green hunt forces in Kalinganagar and other parts of India, where people are staging peacefull protests?

May be after some time when those protests become armed Violent reactions of people against the State he may get pained again.


//மாவோயிஸ்டுகளின் வரைமுரையற்ற படுகொலைகளால் வேதனையுற்றுள்ளார் பா. சிதம்பரம்//

கலிங்காநகரிலும் இந்தியாவின் இன்னப் பிற பகுதிகளிலும் அமைதியான முறையில் போராடி வரும் மக்களை வகைதொகையின்றி போலீசும், ஆபரேசன் கிரீன் ஹண்டு படைகளும் கொன்று வருவது பா. சிதம்பரத்துக்கு வேதனையளிப்பதில்லையே ஏன்?

ஒருவேளை இன்னும் சிறிது நாட்களுக்குப் பிறகு இந்த அமைதி வழி மக்கள் போராட்டங்கள் அரசு வன்முறையை எதிர்க்கும் எதிர் வன்முறையாக உருமாறும் பொழுதுதான் அவர் மீண்டும் வேதனையுறுவார் போல.
####

ஏனோ, எந்த ஊடகமும் அரசின் இந்தத் தொடர் வன்முறையை பயங்கரவாதம் என்றோ படுகொலை, கொலைபாதகம் என்றோ கூறி கண்டிக்கவில்லை.


துணுக்ஸ் 5:

சில மாதங்கள் முன்பு, மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்கள். அரசு சொன்னது நக்சல்பாரிகள் தங்களது ஆயுதங்களை 72 மணிநேரத்தில் கீழே போடுவதென்றால் பேச்சுவார்த்தை பற்றி அரசு யோசிக்கும் என்று.

உடனே பத்திரிகைகள் எழுதின - 'மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தையை நிராகரிக்கிறார்கள்' என்று. நிராகரித்தது என்னவோ அரசுதான்.

பிறகு 75 பன்னாட்டு கூலிப் படையினரை பரலோகத்திற்கு அனுப்பிய பிறகும் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டார்கள் மாவோயிஸ்டுகள். அப்பொழுதும் அரசு மிகத் தெளிவாக மாவோயிஸ்டுகள் சரணடைந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என்றது(ரெண்டு பேரும் துப்பாக்கியை மூஞ்சிக்கு நேரா வைச்சி மிரட்டிக்கிட்டு இருக்குற சூழலில், ஒருத்தன் மட்டும் துப்பாக்கியை கீழே வைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அர்த்தம் சரணடைவது என்பதுதான்).

இப்பயும் நிராகரித்தது அரசுதான்.

இந்த காலகட்டம் முழுவதும் மாவோயிஸ்டுகள் ஒரேயோரு கோரிக்கைதான் வைத்தார்கள்,
அரசு தனது ஆபரேசன் கிரீன் ஹண்டு எனும் மக்கள் மீதான போரை 72 மணிநேரத்தில் அல்ல 72 நாட்களில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தால் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்று.

இதைச் செய்வதில் அரசுக்கு என்ன கஸ்டமென்று தெரியவில்லை.

இரண்டு நாள் முன்பு பேரூந்தில் சென்ற கூலிப் படையினர்(பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்) தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, அதே பழைய பேச்சுவார்த்தை புலம்பலை முன் தள்ளினார் பா. சிதம்பரம்.

அதாவது, ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வா என்று. மாவோயிஸ்டுகள் இதற்கு பழைய பதிலையே சொன்னார்கள், ஆபரேசன் கிரின் ஹண்டை நிறுத்திய பிறகுதான் பேச்சுவார்த்தை சாத்தியமென்று. அதாவது இருவருமே ஆயுத்தத்தை கீழே போட்டால்தான் சாத்தியமென்பதே இதன் பொருள்.

ஆனால் இந்த முறையும் ஊடகங்கள் மாவோயிஸ்டுகள் மீதுதான் பலி போடுகின்றன.

பிடிக்காதா மாமியார் கை வைத்தால் குற்றம் கால் வைத்தால் குற்றம் என்று இதைத்தான் சொல்வார்கள்.

பேரூந்தில் சென்ற போலீசு கூலிப் படையினரை தாக்கியழிக்கப்பட்டதை ஒட்டி டைம்ஸ் ஆப்பு இந்தியா(ஆப்பு இந்தியாவுக்கு)வின் வெறிநாய் காம்பியர் ஒருத்தன் ஒரு டிஸ்கசனில் வாள் வாள் என்று கத்திக் கொண்டிருந்தான்.

அவன் கத்திக் கொண்டிருந்ததன் பொருள் இதுதான், 50 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனரே (50 என்பதே மிகைப்படுத்தப்பட்டது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்) இப்போவாவது மாவோயிஸ்டுகளை கொலைகாரர்கள் என்று ஒத்துக்கொள்ளுங்கள் என்பதே ஆகும். இதற்கு எதிர்வினை புரிந்த கவிதா(பேர் இதுதானா?) என்ற மனித உரிமைக்காரர் சிம்பிளா ஒரேயொரு கேள்வியைக் கேட்டார்கள், பல நூறு பேரை அந்தப் பகுதியில் இதுவரை கொன்றழித்துள்ளீர்கள், 3 லட்சம் பழங்குடியினரை விரட்டியடித்துள்ளீர்கள் இதை நீங்கள் பயங்கரவாதம் என்று சொல்லியுள்ளீர்களா இதுவரை? என்று.

இதுக்கும் டைம்ஸ் ஆப்பு இந்தியாவின் வெறிநாய் காம்பியர் வள் வள் என்றே பதில் சொன்னான். சரிதான், மனிதனின் பாஷை நாய்களுக்கு எந்த காலத்தில் புரியப் போகிறது, அதுவும் வெறிநாய்களுக்கு?


அசுரன்


Thursday, May 13, 2010

ஒரிஸ்ஸாவில் பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் சண்டை!!

ரிஸ்ஸா கலிங்காநகரில் இரண்டு நாள் முன்பு(13 மே 2010) நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயது முதிர்ந்த ‘பயங்கரவாதி’ ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சில குடும்பப் பெண் ‘பயங்கரவாதி’களும் படு காயம் பட்டுள்ளார்கள். காயமுற்ற 'பயங்கரவாதி'களுக்கு எந்த மருத்துவ வசதியும் போய்ச் சேர்ந்து விடக் கூடாது என்று தடுத்து வருகிறது போலீசு.


கலிங்காநகர் என்ற பெயர் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும் என்று தெரியவில்லை. 2006 ஆண்டு ஜனவரி மாதம் டாடா/பாஸ்கோ நிறுவனத்தினர் இரும்பு தொழிற்சாலைத் திட்டங்களுக்காக பழங்குடியின மக்களை விரட்டியடிப்பதை எதிர்த்து போராடிய மக்கள் மீது பன்னாட்டு நிறுவனக் கூலிப் படைகளும், காக்கிச் சட்டை பயங்கரவாதிகளுமான ஒரிஸ்ஸா போலிசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14பேர் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து இன்றைய தேதி வரை அது ஒரு அறிவிக்கப்படாத யுத்த பிராந்தியமாகவே இருந்து வருகிறது. இந்த காலகட்டம் முழுவதும் அது நாட்டு எல்லை பிராந்தியம் போலவே பதட்ட நிலையில் உள்ளது.

கலிங்காநகரில் போராடி வரும் மக்களின் வீடுகளை போலீசு ரவுடிகள் இடித்து தள்ளியதை எதிர்த்த பொழுதுதான் இந்த துப்பாக்கிச் சுடு நடந்துள்ளது. தற்போது நடந்துள்ள துப்பாக்கிச் சூடு கூட புதிது அல்ல. கடந்த மார்ச் மாதம் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மேலும் கிராமக் கிணறுகளில் பெட்ரோல் ஊற்றுவது, வீடுகளை கொளுத்துவது போன்ற நல்ல காரியங்களிலும் போலீசு மற்றும் டாடா ரவுடிகள் ஈடுபட்டுள்ளனர். கலிங்காநகர் பகுதி பல மாதங்களாக டாடா ரவுடிப் படை மற்றும் டாடா ஆதரவு போலீசு ரவுடிப் படைகளின் முற்றுகையின் கீழ் ஏதோ வெளி நாட்டு எல்லை போல மூடி வைக்கப்பட்டுள்ளது. ஈராக்கை அமெரிக்கா 8 வருடங்கள் முற்றுகையிட்டு 5 லட்சம் குழந்தைகளை மருத்துவ வசதி கிடைக்க விடாமல் கொன்றதை போலவே இங்கும் சில பல உயிர்களைக் கொல்லக் கொடுத்துள்ளது அரசு. மே 10 ஆம் தேதி கிராம மக்களை லத்தியால் அடித்துள்ளது போலீசு. ஏப்ரல் 30ல் பலருடைய வீடுகளை இடித்து தள்ளியுள்ளனர். மார்ச் 30ல் ஆரம்பித்து இன்றைய தேதி வரை தொடர்ந்து மக்கள் மீது அரசு தாக்குதல் தொடுத்துள்ளது, அதாவது ஒரிஸ்ஸாவில் மிகச் சரியாக ஆபேரேசன் கிரீன் ஹண்ட் ஆரம்பித்தும் இதே காலத்தில்தான். ஏற்கனவே 2006 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் ரத்தக் குழாய்களை போலீஸ் ரவுடிகள் வெட்டிக் கொன்றுள்ள கோடூரம் சமீபத்தில் அம்பலமானது. இந்த பச்சைப் படுகொலையை மறைப்பதற்காக இறந்தவர்களின் கைகளை பிரேத பரிசோதனையின் போது துண்டித்துள்ளனர் அழகிய குழந்தைகளும், குடும்பமும் வாய்க்கப் பெற்ற போலீசார்.

டாடா-போஸ்கோ தியாகிகள் கம்பனிக்கு ரோடு முதலான வசதிகள் செய்து கொடுப்பதை எதிர்த்துப் போராடும் கலிங்காநகர் மக்களின் அமைப்பு (VVJM) ஜன்மஞ்ச். ஜன் மஞ்சின் முன்னணியாளர்கள் 40 பேரை சமீபத்தில் சிறையிலடைத்துள்ளது போலீசு. ஆயிரக்கணக்கில் விதவிதமான போலீசு ரவுடிகளைக் குவித்து முற்றுகையிட்டுள்ளது போலீசு. இன்னிலையில் போராடுவதற்கு கூட வழியில்லாமல் மொத்தமாக தற்கொலைதான் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ளோம் என்கிறார் ஜன்மஞ்சின் தலைவர் ஜரிக்கா. இவர்களின் கோரிக்கை சரியான நிவாரனம் கொடு என்பதுதான். நிலத்தை எடுத்துக் கொள்வாய் எனில் எனக்கு நிவாரணமாக வேறொரு இடத்தில் நிலம் கொடு என்பதுதான் மக்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வைத்த மறுநாளே போலீசை அனுப்பி மக்களை அடித்துள்ளது அரசு. இதே நேரத்தில் வேறு பல நிறுவனங்களுக்கு நிலங்களை அரசு தானமாக அள்ளிக்கொடுப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

யுத்த பிராந்தியம் என்று சொல்லும் பொழுது சும்மா வசதிக்காக அவ்வாறு சொல்லவில்லை. ஒரு பிராந்தியத்தின் மக்களுக்கு அடிப்படை தேவையானவற்றை கிடைக்க விடாமல் திட்டமிட்ட வகையில் முற்றுகையிட்டு தாக்குதல் தொடுப்பது சர்வதேச வரையறைகளின் படி யுத்தம் என்றே அறியப்படுகிறது. எப்படி ஈழத்தில் மக்கள் முற்றுகையிடப்பட்ட படுகொலை செய்யப்பட்டனரோ அது போல. கலிங்காநகரும் அவ்வாறான முற்றுகையில்தான் பல மாதங்களாக அரசு மற்றும் டாடா பயங்கரவாதிகளின் கொலைக்கரங்களின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

விசயம் இப்படியிருக்க சுட்டுக் கொல்லப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டவர் என்று டாடாவின் ஆசி பெற்ற பத்திரிகைகள் எழுதியுள்ளன. மேலும் இன்ன தேதி வரை ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட் நாயக்கும் துப்பாக்கிச் சூடை மறுத்து வருகிறார். சுட்டுக் கொன்ற போலிசுக்காரர்கள் மற்றும் அதற்கு ஆணையிட்ட கொழுத்த முதலாளிகளைப் போலவே கொல்லப்பட்டவர்களுக்கும் அழகான குழந்தைகள், குடும்பங்கள் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன் (அதெல்லாம் யாருக்கு வேண்டும்).

சுட்டவர்களையும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களையும் சேர்த்தே பயங்கரவாதி என்று குறிப்பிட்டதற்கு ஒரு காரணம் உள்ளது. நம்மைப் போல நகரத்தில் வாழும் நாகரிக கனவான்களுக்கு வன்முறை என்பது அறவே விரும்பத்தகததாக இருக்கிறது. நமது நல்ல உள்ளங்களுக்கு, மனிதாபிமான அபிலாசைகளுக்கு பேதங்கள் கிடையாது. எனவே அடித்தவனையும், அடி வாங்கி திருப்பி அடிப்பவனையும் வேறுபடுத்தி பார்க்காமல் வன்முறையை பிரயோகித்தவர்கள் என்ற அறநெறி ஒழுக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் ‘எடை போட்டு’ பார்ப்பதே தர்மம் என்பதாலும், அவ்வாறு ‘குறிப்பிடு’வதோடு நம்மை வரம்பிட்டுக் கொண்டு வேறு எதுவும் செய்யாமல் பீட்ஸா பர்கர் சாப்பிட்டுக் கொண்டு எப்படி போராடுவது என்று ஆலோசனை கூறுவதுதான் நமது அறநெறிக் கோட்பாடு என்பதாலும் இவ்வாறு குறிப்பிடுகிறேன்.

இந்த மோதல்களில் இரு பக்கமும் மனிதர்கள் மடிவது குறித்து வினவு தளத்தில் செந்தழல்ரவி வருத்தப்பட்டிருந்தார். அவரது மனிதாபிமானம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். நகரத்தில் வாழும் நம்மைப் போன்றவர்கள் இது போன்ற மனிதப் படுகொலைகளை தடுப்பதற்கு செந்தழல் ரவி விருப்பப்பட்டது போல சில எளிய வழிகளை பரிந்துரைக்க விரும்புகிறேன். இங்கு நாம் வீதியில் இறங்கி மக்களை திரட்டி போராடினால், இந்தக் கோடூரங்களை விரிவாக மக்களிடம், நண்பர்களிடம் என எங்கும் பிரச்சாரம் செய்தால், அரசை தனிமைப்படுத்தினால் அங்கு அவர்கள் துப்பாக்கி தூக்குவதற்கு அஞசுவார்கள். இதுதான் அந்த எளிய வழி. இதற்கு நமது நேரத்தில் ஒரு சிறு பகுதியை தியாகம் செய்ய வேண்டும் அவ்வளவுதான். நமது நேரம் முக்கியமா அல்லது அங்கு மடியும் உயிர்கள் முக்கியமா என்பதை அவரவரின் மனசாட்சியின் முடிவுக்கே விட்டு வைக்கிறேன்.

அசுரன் என்ற பயங்கரவாதி

(ஏதோ சட்டம் போட்டிருக்காங்களாம் இது மாதிரி விசயங்களை ஆதரிச்சா தண்டனைன்னு. தண்டனைய கொடுங்கப்பா அவார்டு மாதிரி ஏத்துக்கிறோம்)

தொடர்புடைய பதிவுகள்:

ஒரிசா:மறுகாலனியாதிக்கத்தின் கோரம் பழங்குடி மக்களின் யுத்தம்


Wednesday, April 28, 2010

பின்னுட்டம்

நேற்று மாலையிலிருந்து எனது பதிவில் நானே பின்னூட்டம் இட முடியவில்லை. கீழ்வரும் தகவல் வந்து மன்னிப்பு கேட்கிறது. (test என்று பின்னூட்டமிட்டால் வருகிறது)

""
We're sorry, but we were unable to complete your request.

When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

* Describe what you were doing when you got this error.
* Provide the following error code and additional information.

bX-6rscy0
""

எனவே, எனது பின்னூட்டங்களுக்காக ஒரு பதிவு. இந்தப் பதிவில் உ.த. அண்ணாச்சிக்கான எனது பதிலின் 3வது பாகம் மற்றும் சுகுணாவுக்கான பதில்கள் இடம்பெறுகின்றன.

இந்தப் பதிவு ஏன் என்று பிற்கால சந்ததியினர் குழம்பிவிடக் கூடாது என்பதால் இந்த பின்னூட்டப் பதிவுக்கான மூலத்தை இங்கு கொடுக்கிறேன் "வினவை அவதூறு செய்யும் அராஜகவாதிகளின் புனிதக் கூட்டணி!!"

முதலில், உ.த.வுக்கான 3வது பாகம்:

//ஆனால் கை கலப்பும், நேரடித் தாக்குதலும் மட்டும் கூடவே கூடாது..!
//

மீண்டும் மீண்டும் உ.த. பொய் சொல்கிறாரே? யாருடன் கைகலப்பு நிகழ்ந்தது, யாரை நேரடியாகத் தாக்கினார்கள்?


//இதைத்தான் தப்பு என்கிறோம். இதைச் செய்ய நீங்கள் யார்? யார் உங்களுக்கு இந்த அனுமதியைக் கொடுத்தது...? இந்திய அரசா..? தமிழக அரசா..? இந்திய அரசியலமைப்புச் சட்டமா..? மொதல்ல அதைச் சொல்லுங்க..! அரசுகளையும், சட்டத்தையும் நம்பித்தான் இங்கே மக்கள் வாழ்கிறார்களே தவிர.. உங்களை நம்பி அல்ல.. உங்களுக்காகவும் அல்ல.! உங்களிடம் இது பற்றி விளக்க வேண்டிய அவசியமும் மக்களுக்கில்லை..!
//

தமிழச்சியை வெளியே அனுப்பு என்று சொன்னவர், தியேட்டரில் படம் பார்க்க வந்த அப்பாவி ரசிகர்களை 'டேய்' 'நாய்' என்று கத்தி ரவுடித்தனம் செய்து கலவரப்படுத்தியவர் கேட்கும் கேள்விதான் இது. உ.த இவ்வாறு ரவுடியிசம் செய்துள்ளது குறித்து அவரது கேள்வியை அவருக்கே திருப்பிக் கேட்டால் எப்படியிருக்கும்? இதோ: இதச் சொல்ல/செய்ய நீ யாருயா? யார் உங்களுக்கு இந்த அனுமதியைக் கொடுத்தது...? இந்திய அரசா..? தமிழக அரசா..? இந்திய அரசியலமைப்புச் சட்டமா..? மொதல்ல அதைச் சொல்லுங்க..!


உ.த. அவர்களே, எதைச் செய்யனும்னு நீங்கள் சட்டப் புத்தகத்த பாத்து கண்டுபிடியுங்கள், எங்களுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை/அவசியமில்லை. எது ஜனநாயகத்திற்கு பொருத்தமானதோ அதை செய்வோம். அதில் ஒன்று கூட்டத்தில் கேள்வி கேட்கும் உரிமை.

நேத்து வரைக்கும் 'கருத்துரிமை' என்ற புனித வார்த்தைகளின் பின்னே ஒழிந்து கொண்டு கல்லெறிந்தவர் அந்த புனித கோவனம் கிழிந்தவுடன், சட்டவாதம் என்ற புதருக்குப் பின்னே ஒழிந்து கொள்ள முயற்சிக்கிறார். வாழ்த்துக்கள் உ.த. இவ்வாறே தொடர்ந்து எழுதுங்கள்...

மேலும், இவரது இந்த பிதற்றலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட பதில்

@@@@
உண்மைத்தமிழனோ, அய்யனாரோ இது சார்ந்து பதிவு போட்டதாக தெரியவில்லை. அவர்களது அதிகபட்ச கருத்துரிமை எதிரிகள் கள்ள டிக்கெட் விற்பவன், சூடு வைத்த ஆட்டோ மீட்டர், போன் கனெக்சனுக்கு கமிசன் கேட்பவன், அப்புறம் லீனாவை எதிர்க்கும் வினவு போன்றோர். லீனாவின் யோனிக் கவிதையில்தான் உனது கருத்துரிமை கொப்புளிக்கிறது என்றால், ஆப்புரேசன் கிரின் ஹண்டு போன்றவற்றில் கருத்துரிமை பறி போவது பற்றி நீட்டி முழக்க நீ தயாரில்லை எனில், உன்னுடைய கருத்துரிமை என்ற பெயரிலான அராஜகவாத பிதற்றலை யோனி மசிராகக்கூட நான் மதிக்க வேண்டிய அவசியமில்லை.
@@@@



//"அவர்களுக்கு எதிரான கூட்டம் என்று தெரிந்தும், வந்திருந்து கூட்டம் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தது தப்பு"ண்ணேன்.. இது தப்பா..?
//

இவர் தனது முந்தைய பதிவில் சொன்னது, அந்தக் கூட்டம் இ.ம. கட்சிக்காக நடக்கிறது என்று தெரிந்தும் அழையா விருந்தாளியாக வினவு வந்தது தப்பு என்று. இப்போது அதே ஆர்க்யுமெண்டை தலைகீழாக மாற்றிப் பேசுகிறார்(மாத்தி பேசுவது அவருக்கு கை வந்த கலை). மொத்தத்தில் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்யாதே என்பது உ.த.வின் கருத்து.


//"லீனாவின் கவிதையே ஆபாசம் என்றால் அதற்கு வினவு எழுதிய மறுப்பு கவிதை அதைவிட ஆபாசம்.. இருவருமே ஒருவராக மாறிவிட்டார்கள். பின்பு வினவுக்கு லீனாவைக் குற்றம் சொல்ல என்ன உரிமை இருக்கிறது?" அப்படீன்னு கேட்டேன்.. இது தப்பா..?
//

லீனா எழுதியதற்கு வினவு எழுதியது, லீனா கூட்டம் போட்டதற்கு வினவு அதே கூட்டத்தில் கலகம் செய்தது. சரியாகப் போய்விட்டது இல்லையா? பிறகு ஏன் உ.த. வினவை அராஜகவாத கம்யூனிசம் என்று விமர்சித்து பதிவு எழுதுகிறார்? அதான் சரிக்கு சரி இடிக்கு இடின்னு முடிஞ்சதே என்று சோடா குடித்துவிட்டு சும்மக் கிடக்க வேண்டியதுதானே?

மற்றபடி மீண்டும் மீண்டும் ம.க.இ.க.வினர் லீனா கூட்டத்திலும், 'இனிய நண்பர்' விசயத்திலும் அடிதடியில் இறங்கியதாக அவர் கட்டமைக்க முயன்று பொய் சொல்கிறார். அசுரனில் பதிவு எழுதி அம்பலப்படுத்திய பிறகு சில விசயங்களை 'ஆமா சொல்ல மறந்துட்டேன்' என்பது போல ஒத்துக் கொள்கிறார். அதில் ஒன்று லீனா 'ஆவேசமான கோபத்துடன் ஏதோ சில வார்த்தைகளைச் சொன்னபடியே' வந்ததாம், அப்படி வந்தது கேள்வி கேட்பதற்காகவும் இருக்கலாம் இல்லையா? என்று உ.த. கேட்கிறார், இவ்வாறு சந்தேகத்தின் பலனை லீனாவுக்கு அளிக்கும் உ.த. இதே போல சந்தேகத்தின் பலனை ம.க.இ.க.வுக்கு அளிக்க மறுப்பதோடு இட்டுக்கட்டி அவதூறும் செய்கிறார் என்பதே அவரது பிரச்சினை. மேலும் ஏதோ ம.க.இ.க.வினர் ரவுடிகள் போல வீட்டுக்கு ஆட்டோவில் வறாதீங்க என்றெல்லாம் கட்டமைக்கிறார். இவையெல்லாம் உ.த.வின் கேவலமான நோக்கங்களையே காட்டுகின்றன.


இப்போ நம்ம அண்ணன் சுகுணா:

வாங்க சுகுணா. நீங்க என்ன சொன்னாலும் உங்க அளவுக்கு எனக்கு எழுத்து திறமை கிடையாதுண்ணே. பாருங்க, அவதூறையே அக்கறையான வார்த்தைகளிலும், விமர்சனம் போலவும், பரிதாபகரமான கேள்வி போலவும் முன் வைக்கும் உங்களது திறமை எனக்கு உண்மையிலேயே சுட்டுப் போட்டாலும் வராதுண்ணே. சுகுணாவோட அவதூறுகள் அல்லது அக்கறையான-பரிதாபகரமான கேள்விகளைப் பட்டியலைப் பார்ப்போமா?

முதல் அவதூறு:
//அது எப்படி தோழர் முந்தாநேற்றுவரை உங்கள் நிலைப்பாடுகளை ஆதரிக்கும்போது தியாகு தோழராயிருந்தார், இப்போது சுகுணாவின் பினாமி ஆகிப்போனார்? உங்கள் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிற ஒருவர் ஏதாவது ஒரு கருத்தில் மாறுபடும்போது அவருக்கு அல்லக்கை, பினாமி, துரோகி பட்டம் சுமத்தி அவதூறு செய்வது//

இதற்கு முன்பு வினவுடன் முரன்பட்ட தோழர்கள் யார்? மணி என்பவர் வந்த நாள் முதல் ஒரே லடாய்தான், அப்புறம் இராயகரனுடனான காரசராமான விவாதப் பதிவுகள். இவர்களெல்லாம் இன்றும் தோழர்களாகத்தான் உள்ளனர். இது தவிர்த்து பலர் கடுமையான முரன்பாடுகள் இருந்த பொழுதும் நண்பர்களாகவும், தோழர்களாகவுமே உள்ளனர். தியாகுவே கூட முரன்பட்டுள்ளார் முன்பு. தியாகுதான் காரல் மார்க்ஸ் என்ற முகமூடி அம்பலாமன பிறகும் கூட தோழர்கள் அவருக்கு பல விதங்களில் விளக்கவே முற்பட்டனர்(புறக்கணிக்கவில்லை). பலமுறை அவரது பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் (லீனா கூட்டத்தில் அடிதடி செய்ததாக ஒரு பொய், அவரை வேசி என்றதாக ஒரு பொய், இன்னும் பல) விளக்கம் கொடுத்த பிறகும், அவைகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்ட பிறகும், அவை குறித்து சட்டை செய்யாமல் எதிரிகளின் வார்த்தைகளில் விமர்சித்து அதே அவதூறுகளுடன் ஒரு பதிவும் இட்டார். அவரது நோக்கம் விமர்சனம் செய்வதல்ல, சேறு அடிப்பது என்றே புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பிற்பாடு அவர் காரல் மார்க்ஸ் என்ற பெயரில் லீனா விவகாரத்துக்கு முன்பிருந்தே வினவு தோழர்களை அவதூறு செய்துள்ளதும் வெளிவந்தது. இவ்வாறு கறுப்பு ஆடாக நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளதே தியாகு விசயத்தில் மிகக் கடுமையாக தோழ்ர்கள் அவரை புறக்கணிக்கக் காரணமானது. ஒருவருடன் பழகுவதற்கு பரஸ்பரம் நம்பகத்தன்மை வேண்டும். அதுவும் புரட்சிகர அமைப்புகளில் தோழர்களாக இருப்பதற்கு இது மிக அவசியம். அது இல்லாத ஒருவருடன் யாருமே பழகுவதை தவிர்க்கவே செய்வார்கள். தியாகுவின் நம்பகத்தன்மைதான் இங்கு பிரச்சினையேயொழிய அவரது விமர்சனம் அல்ல. வினவு பின்னூட்ட விவாதங்களே இதற்கு சாட்சி.

எதை எதையோ படித்து பார்க்கும் சுகுணாவுக்கு வினவில் நடந்த விவாதம் தெரியவில்லை போலும்? ம.க.இ.கவுடன் இத்தனை நாள் பழ்கிய சுகுணா லீனா(தியாகு) விசயம் என்றவுடன் எப்படி இது மாதிரி சடாரென்று தோழர்கள் மீது அவதூறு செய்ய முடிவு செய்தார்? அவருக்கு என்ன பிரச்சினையோ?

மேலும் ம.க.இ.க. உங்களது நெருங்கிய தோழர்கள் என்று சொல்லும் நீங்கள் ஏன் இந்த விவகாரத்தில் இத்தனை நாள் அந்தத் தோழர்களை அனுகாமல் இருந்தீர்கள்? தோழர் எனில் விமர்சனம் செய்திருக்க வேண்டுமில்லையா? அதற்குப் பதிலாக தியாகுவுக்கு தகவல் சப்ளை செய்ததையும், ரோசா போன்றோரின் தளங்களில் மட்டுமே பின்னூட்டம் அதுவும் நெம்ப எச்சரிக்கையாக விட்டுள்ளதும், தியாகு மட்டுமே சுகுணாவின் கருத்து முகமூடியாக நான் புரிந்து கொள்ளது தூண்டியது.

//தியாகுவின் பதிவிலும் அய்யனார் விஸ்வநாத் பதிவிலும் அனானியாக வந்த பின்னூட்டத்தை எடுத்துக்கொள்வோம். அந்த பின்னூட்டத்தின் இரண்டாம் பகுதி இது.//

தியாகுவை பினாமி என்றது அவரது அந்த அறிவுப்பூர்வமான கேள்வி அவருக்கு உதித்திருக்காது என்ற எனது அனுபவத்திலிருந்தும் (அந்தக் கேள்வியை அவரே வினவு தளத்தில் இட்டிருந்தார்) லீனா விசயத்தில் தியாகுவுக்கான சோர்ஸ் நீங்கள்தான் என்ற நம்பிக்கையான தகவல்களிலிருந்துமே சொல்கிறேன்.

//உங்களுக்குத் தெரிந்த அளவுக்குக்கூட எனக்குத் தியாகு பழக்கம் கிடையாது. //
தியாகு வேறு மாதிரி சொல்கிறார்? உங்களிடம் அவர் எல்லா விசயங்களையுமே பேசியுள்ளாராம்?


//ஆனால் அந்த பிரச்சினை பற்றி எழுதும்போது அதைப் பதிவு செய்யாத உங்கள் அரசியல் மனச்சாட்சிக்கு நன்றி தோழர்.//

தமிழச்சியை விவகாரத்தில் உ.த. அய்யனார் குலாமினரின் முரன்பட்ட சந்தர்ப்பவாத நடவடிக்கையை அம்பலப்படுத்தவே எழுதினேன். எனவே, தமிழச்சி விவகாரத்தின் முழுப் பரிமாணம் தேவையில்லை என்றே குறிப்பிடவில்லை. மேலும், தமிழச்சியை ஆதரித்தவர்கள் என்று தோழர்கள், நண்பர்கள், முற்போக்கானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளேன். அதில் நீங்களும் உண்டு.

//ஆனால் நடந்த நிகழ்வுகளில் உங்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டும் எழுதி, தேவையான பிம்பத்தை உருவாக்கிக்கொள்கிறீர்கள். //

ஏன் இந்த படபடப்பு சுகுணா? நான் தமிழச்சி நிகழ்வை முன்னிறுத்தி எதை எழுதியுள்ளேன் என்பதை உ.த.வால் புரிந்து கொள்ள முடியவில்லை (அல்லது புரிந்து கொள்ள முற்படவில்லை) எனில் அது எனக்குப் புரிகிறது. நீங்களும் அப்படித்தான் எனில் நான் என்ன செய்ய முடியும்?

//’கண்டன ஒன்றுகூடல்’ கூட்டத்தில் ம.க.இ.க நடத்திய குழப்பத்திற்குப் பின்னான பதிவுகளில் //

//நீங்களும் உங்களது தோழர்களும் நான் எழுதாத பின்னூட்டங்கள் குறித்து அவதூறுகளைப் பரப்புகிறீர்கள்..//

சுகுணாவைக் குறிப்பிட்டு இப்போ கொஞ்ச நாளைக்கி முன்பிருந்துதான் கருத்துக்கள் வருகின்றன. அதுவும் தியாகுவுக்கு பின்னால் நீங்கள் உள்ளீர்கள் என்ற நம்பகமான தகவலுக்குப் பிறகுதான் இவை நடக்கின்றன.

//ஆனால் உங்களது கருத்தில் மாறுபடும்போது அல்லக்கை என்றும் பினாமி என்றும் சிஷ்யப்பிள்ளை என்றும் மிக மோசமான முறையில் இழிவுசெய்கிறீர்கள்.//

எங்களது கருத்தில் மாறுபடுவதாக வெளிப்படையாகத் தெரிவிக்கும் நேர்மைகூட இவ்வளவு இழுத்தப் பிறகுதான் உங்கள் வாயிலிருந்து வருகிறது. அவ்வளவு எம்முடன் தோழமை எனில் எம்மை இந்த நிகழ்வுகளின்(லீனா கவிதை வினவு பதிவு) ஆரம்பத்திலேயே விமர்சித்திருக்கலாமே? போராடியிருக்கலாமே? லீனா கவிதை எழுதி அசிங்கப்படுத்தினால், நீங்களும் உங்கள் கூட்டத்தாரும் கருங்காலித்தனமாக கள்ளமௌனம் சாதித்து முதுகில் குத்தி அசிங்கப்படுத்தியுள்ளீரக்ளே? இவை எமக்குக் கோபத்தை உண்டாக்காது என்று நினைக்கிறீர்களா?

அ.மார்க்ஸ், சிபிஎம் புனித கூட்டணிக் கும்பலின் நோக்கம் வினவை அராஜகவாதி என்று சித்தரிப்பது எனில் எமது தோழர் என்று சொல்லும் நீங்கள் இந்த நிகழ்வுகளில் வினவு அவ்வாறான தோழர்கள் அல்ல என்று அவர்களிடம் என்னவிதமான போராட்டம் நடத்தீனீர்கள்? மாட்டிக்கிட்டான் என்று மொத்தமாகத்தானே குத்தினீங்க? இப்போ திருப்பிக் குத்துகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள்.

இரண்டாவது அவதூறு:
//என்னைப் பொறுக்கி என்றும் சமூகவிரோதி என்றும் அழைத்து அடையாளப்படுத்திய உங்கள் அன்புக்கு நன்றி தோழர்.//

அது உங்களது (அல்லது தியாகுவின்) 'அறிவுப்பூர்வமான கேள்வியின்' லாஜிக்கில் முடிவு என்று நான் சொன்னவை அவை. எனது முடிவு அல்ல அது. அவை அந்தக் கேள்வியின் முட்டாள்தனம் என்னவென்று சுட்டிக்காட்ட குறிப்பிட்டவை. அடுத்த வரியிலேயே அந்தக் குறிப்பிட்ட 'அறிவுப்பூர்வமான கேள்வி'யிலிருந்து தியாகு (அல்லது நீங்கள்) நிரூபிக்க விரும்பியது பின்நவீனத்துவத்திற்கே வெளிச்சம் என்றும் குறிப்பிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிடுவதன் பொருள், உங்களை சமூகவிரோதி, பொறுக்கி என்று நான் சொல்லவில்லை என்பதற்கான அத்தாட்சி.


//ஆனால் அதற்காக ம.க.இ.கவை விமர்சிக்கிற விமர்சன உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். //

ம.க.இ.க.வை இதுவரை நீங்கள் விமர்சிக்கவே இல்லையே? இதோ இந்த நிமிசம் வரை லீனா விவகாரத்தில் தியாகுதான் உங்களது முகமாக எனக்குத் தெரிகிறாரே ஒழிய உங்களது கருத்துக்களை எங்குமே நேரடியாக நீங்கள் சொல்லவில்லயே? ஏன்?

அசுரன்

Tuesday, April 27, 2010

வினவை அவதூறு செய்யும் அராஜகவாதிகளின் புனிதக் கூட்டணி!!

மீபத்தில் சில வருடம் முன்பு, தோழர் தமிழச்சி தமிழ்மணத்தை தனது கோ(யோ)ணிக் கட்டுரைகளால் கதிகலக்கிக் கொண்டிருந்த காலகட்டம். அவரது கோ(யோ)ணிக் கட்டுரைகளால் கலவரமாகியிருந்த தமிழ்மணக் கலாச்சார காவலர்கள் குலாம் அவரை மொத்தமாகக் ‘குறி’வைத்துக் குமுறிக் கொண்டிருந்த நேரம் அது. அவரது உடல்மொழியைச் சார்ந்தே பல்வேறு அவதூறுகள், எதிர்வினைகள், கவிழ்ப்புகள் அரங்கேறின, ஆனால் இந்தக் குமுறல்கள் எல்லைமீறி அவரை பெண் என்று தனிமைப்படுத்தி வக்கிரமாகத் தாக்கும் எல்லைக்குச் சென்ற பொழுது தலையிடும் தேவை ஏற்பட்டது. ‘தமிழச்சியை விமர்சிக்கப் புகுந்த ஆணியத் தற்குறிகள்’ என்று ஒரு கட்டுரை அசுரனிலும், தோழர் ரயாகரனின் தமிழரங்கத்தில் சில கட்டுரைகளும் எழுதப்பட்டன.

அன்று தமிழச்சிக்கு எதிராகப் புனிதக் கூட்டணி சேர்ந்த அன்றைய பதிவர்கள் அவர் தமிழ்மணத்திலிருந்து வெளியேற்றப்படுவதையும் கடைசியில் சாதித்துக் காட்டினார்கள். அத்தனைக்கும் தமிழச்சியின் கட்டுரைகள் லீனாவினுடையதைப் போல கலவி, காமம், வரைமுறையற்ற புணர்ச்சி, உடல் அவயங்களை கிளர்ச்சிப் பூர்வமாக முன்னிறுத்துவது, மிக முக்கியமாக ஒடுக்குமுறைக்குள்ளான மக்களையும், போராடும் மக்களையும், புரட்சியாளர்களையும் ‘மட்டும்’ அவதூறு செய்யும் மோசடியான ஒன்றாக இல்லை. இன்னும் சொன்னால், தமிழச்சியை லீனாவுடன் ஒப்பிடுவதே வக்கிரமானது ஏனேனில், தமிழச்சியின் கட்டுரைகள் பெண்களின் பல்வேறு பிரச்சினைகள், மத பிற்போக்குவாதிகள் யோனிகளை எப்படியெல்லாம் புண்படுத்துகிறார்கள், பெண்ணடிமைத்தனம் என்று பல்வேறு விசயங்களைப் பேசின.

ஆயினும், அவர் வெளியேற்றப்பட்டார். அன்றைக்கு எம்மையும், தோழர் தமிழச்சியின் நண்பர்கள் சிலரும், முற்போக்கு பேசும் பதிவர்களும் தவிர யாருமே அவருடன் நிற்கவில்லை. புனிதக் ‘பசு’ பதிவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து அவர் மீது நடத்திய அராஜகம் அது. அவ்வாறு, அவரை வெளியேற்றக் ‘குறி’ பார்த்துக் கூட்டுச் சேர்ந்த அராஜகவாதிகள் இன்று லீனாவுக்காகவும் ஒன்று சேர்வது ஆச்சர்யமானதல்ல. அன்று, தமிழச்சியோ தனது யோனிக் கட்டுரைகளை யாரிடம் காட்டினாலும் பேசத் தயார் என்றுதான் சொன்னார். மக்கள் விரோதமாக இருந்தால் அல்லவா அவர் பயப்பட்டிருக்க வேண்டும்?

தமிழச்சியின் கருத்துரிமையை கொல்வதற்காக அன்று ஒன்று சேர்ந்தவர்களில் அய்யனார்-உண்மைத்தமிழன் போன்ற இன்றைய கருத்துரிமைக் காவலர்களும் அடங்குவர். அன்று, உண்மைத்தமிழன் அண்ணாச்சி எழுதிய பதிவு.

உண்மைத்தமிழன் இன்று லீனாவின் _காக எழுதியது ( இது கருத்துரிமைக்கான _ ),
@@@
ஆனால் என்ன எழுதுவது என்பது அவரது உரிமை. அவரது வலைத்தளத்தில்தான் அதனை எழுதியுள்ளார். இப்படித்தான் எழுத வேண்டும்.. இதை எழுதக்கூடாது என்று நாம் தடுக்க முடியாது. தடுப்பதற்கு உரிய அத்தாட்சியை கையில் வைத்திருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மட்டுமே.. இது அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் பொருந்தும்.
@@@


உண்மைத் தமிழன் தோழர் தமிழச்சியை வெளியேற்றுவது சரி என்று அன்று எழுதியது,
@@@
இதற்கு முன்பேயே வீராங்கனையின் தோஸ்த்து கோயம்புத்தூர்காரர் ‘படங்களாக’ காட்டியபோதே தமிழ்மணம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால், இப்போதைய துரதிருஷ்டமான நிலை நமக்கு வந்திருக்காது. தமிழ்மண நிர்வாகம் அப்போதெல்லாம் சுண்டக்கஞ்சி குடித்துவிட்டு, குப்புறப்படுத்து தூங்கியதைப் போல் இருந்தது.. அதற்கெல்லாம் இப்போது பதில் இல்லை.
@@@

நியாயமாக இவர் தமிழச்சியிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும், விவாதம் செய்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் அறிவுரை வழங்கியிருக்கிறார் இந்த பெரிய மனிதர், அதற்கு அடங்காத பொழுது வெளியே போ என்று வன்முறையை ஏவியுள்ளார் இன்றைய கருத்துரிமை காவலர்.

அன்றைய புனிதக்கூட்டணியில் உ..த. அண்ணாச்சி:
@@
தமிழச்சியின் பதிவுகளை நீக்குக - தமிழ்மணத்திற்கு கோரிக்கை
@@

அன்று தமிழச்சியின் கருத்துரிமையைக் கொன்றொழிக்க ‘குறி’ப்பறிந்து புனிதக் கூட்டு சேர்ந்தவர்கள், இன்று லீனா என்ற XXXவாதி எழுதிய அவதூறு கன்றாவியை முன்னிறுத்தி மீண்டும் அராஜகவாதிகளின் புனிதக் கூட்டணியைச் சேர்த்துள்ளனர். போன முறை கலாச்சார போலீசாக கலாச்சாரத்தைக் (ஆணாதிக்கத்தை) காப்பற்றவும், இந்த முறை கன்றாவியை காப்பாற்றி புரட்சியாளர்களை அவதூறு செய்ய கருத்துரிமை என்ற பெயரிலும் கூட்டுச் சேர்ந்துள்ளனர். அன்று அவர்களின் அநீதியான நடவடிக்கையை நியாயம் என்று சொன்னவர்கள், இன்று ம.க.இ.க.வினரின் நீதியான நடவடிக்கையை அராஜகம் என்கிறார்கள். அன்று தமிழச்சியின் யோனி இலக்கியத்துக்காக தோழர்கள் நின்றோம், இன்று லீனாவின் யோனி இலக்கியத்துக்காக அராஜகவாதிகள் நிற்கிறார்கள். ஆக, விசயம் யோனியல்ல, அது யாருடையது என்பதிலும், என்ன வகையானது என்பதிலும் தான் பிரச்சினையே. அராஜகவாத புனிதர்களில் சில வகைமாதிரிகளை(குறிப்பாக உண்மைத்தமிழன்) மட்டும் பார்த்தாலே ஒட்டுமொத்தமாக அவர்களைப் புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கும். உ.தவைப் பார்த்தோம் அடுத்து அய்யனார்,

அய்யனார் இன்று லீனாவுக்காக:
@@லீனாவின் இரண்டு கவிதைகளுக்கும் எதிரான விமர்சன அர்ச்சனைகளும் வினவின் அதே பதிவில் எழுதப்பட்டிருந்தது. அந்த அர்ச்சனைகள் பெண் எழுத்தால் எழுந்த பதட்டங்களாகத் தோன்றியதே தவிர அறிவு தளத்தினூடான விமர்சனமாக எனக்குப் படவில்லை.
@@

லீனாவின் கவிதைக்கு எதிரான வினவின் கருத்தை மேலே உள்ளவாறு பதட்டமான எழுத்து என்று எழுதியுள்ள அய்யனார் என்ற நல்லவர். தோழர் தமிழச்சிக்கு எதிராக உதிர்த்துள்ள முத்துக்கள் கீழே உள்ளன. அவை பெண் எழுத்துக்கெதிரான பதட்டமா என்று எனக்குத் தெரியவில்லை. லீனாவிடம் இருப்பது தமிழச்சியிடம் என்ன மிஸ்ஸிங்க் என்றும் தெரியவில்லை. ஒருவேளை தமிழச்சி அய்யனாரின் பார்வையில் பெண்ணாகவே தெரியவில்லையோ என்னவோ?

அய்யனார் என்று கருத்துரிமை காவலர் அன்று தமிழச்சியை எதிர்த்து எழுதிய பதட்டமான எழுத்துக்கள்:

@@பொழுது போவலன்னா கும்புதல், குறி பார்த்து சுடல், இப்படி புச்சு புச்சா கும்பு வார்த்தைகளை லக்கி அன்ட் கோ கூட சேர்ந்து கண்டு புடிங்கோ ... அட அவிங்களும் ஆட்டைக்கு வரலன்னா கும்மில ஒரு பதிவு போட்டு பகுத்தறிவு கும்மி அடிப்போம் நானும் வர்ரேன்.. அண்ணாச்சி, குசும்பன், கதிருன்னு மக்க எல்லாரையும் கூட்டிகினு வர்ரேன் தயவு செய்ஞ்சி இந்த மாதிரி உணர்வுபூர்வமான வெசயங்களோட உங்க பொரட்சி கள புகுத்தாதீங்க..

எவ்ளோ கஷ்டபட்டு அடக்கிபாத்தேன் தமிழச்சிக்கா ஆனா முடியல.. கொட்டிட்டேன்..செல்லா ஒங்களுக்கு மேட்டர் கெடச்சிடுச்சி நீங்க ஆரம்பிக்கலாம்..
@@

அத்தனைக்கும், சிங்கள இன வெறியர்கள் ஈழத் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதை குத்திக் காட்டிய ஒரு தமிழச்சியின் கவிதைக்குத்தான் அய்யனார் மேற்படி எதிர்வினை செய்துள்ளார். ஆனால், லீனாவின் யோனி கன்றாவியோ அல்லது சங்கரசுப்பிரமணியனின் கன்றாவியோ சமூக அக்கறையை விடுங்கள், குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இன்றி போராடுபவர்களை வக்கிரமாக சித்தரித்து எழுதின. அதற்கு வக்காலத்து வாங்குகிறார் இந்த அராஜகவாதி.

வினவு மீதான அய்யனாரின் அவதூறுகள் அல்லது அராஜகங்கள்:
அவதூறு1:
@@
மேலும் கவிதையை வைத்தே பெண்ணை அலைபவளாக நிறுவ முயல்வது வன்முறையாகத்தான் தோன்றியது.
@@

வினவு அவ்வாறெல்லாம் நிறுவ முயலவில்லை. வினவை இவர் படிப்பதேயில்லை போலருக்கு, அல்லது பிரதியை இவருக்கேற்ப வாசிப்பு செய்கிறாரோ என்னவோ. வினவு, லீனாவினுடைய மொழி நடையை அப்படியே திருப்பிப் போட்டு கவிழ்ப்பைச் செய்திருந்தது. பின்நவீனத்துவத்தில் இது அலவ்டுதானே? ஓ.. அவர்களுக்கு மட்டுமே அலவ்டு என்ற ரகசிய சட்டவிதி இருப்பதை மறந்துவிட்டேனோ?

அவதூறு2:
@@தன்னுடைய மதம், தான் நம்பும் கடவுள் இவ்விரண்டிற்கும் எதிராக ஒரு சிறு அசைவைக் கூட பொறுத்துக் கொள்ள இயலாத வெறியாளர்களைப் போலத்தான் இச் சித்தாந்த வாதிகளும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.@@

சங்கர சுப்பிரமணியன் பிரச்சினை என்னவென்றே தெரியாமல் தீர்ப்பு எழுதுகிறார் இந்த அவதூறு மன்னன். ஈராக் மக்களை கேவலப்படுத்தி எழுதியது நாங்கள் நம்பும் கடவுளை கேவலப்படுத்திய எழுதியதாக அய்யனாருக்கு புரிகிறது என்றால் அவர் இயங்குவது அறிவுத்தளமா அல்லது அறியாமைத்தளமா அல்லது அக்கறையற்ற போலி மேட்டிமைத்தளமா என்பதை அவரே சுயபரிசீலைனை செய்து கொள்ளட்டும்.

அய்யனாரும் சரி பலரும் சரி லீனா கூட்டத்தில் நடந்தது என்னவென்று உண்மைத்தமிழன் பதிந்து வைத்துள்ளதை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பு எழுதியுள்ள நிலையில் அதனை/அவரைக் கொஞ்சம் விரிவாகப் பார்த்து விடுவது சரி என்று கருதுகிறேன். அதற்கு முன்பாக சில கொசுறு கேள்விகளை கவனிப்போம். படைப்பும், பிரதியும், படைப்பாளனும் வேறு என்ற பின்நவீனத்துவ மொள்ளமாறித்தனங்களில் எமக்கு நம்பிக்கை கிடையாது.

அ. மார்க்ஸின் சிஸ்யப் பிள்ளை சுகுணா திவாகர் தனது பினாமி (திருத்தம்: பினாமி என்ற கருத்து வாபஸ் வாங்க்கப்பட்டுள்ளது) தியாகு மூலம் முன்னிறுத்திய மிக அறிவுப்பூர்வமான கேள்வி, லீனா எழுதியதை மக்களிடம், பக்கத்து வீட்டுக்காரனிடம் காட்டுவேன் என்று சொல்லும் ம.க.இ.க. தோழர்கள், அதே போல அவர்களை நக்சல்பாரிகள் என்று பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்வதை(போட்டுக் கொடுப்பதை) ஏற்றுக் கொள்வார்களா? என்று கேட்டுள்ளார். அவரது பின்நவீனத்துவ மூளைக்கு எட்டிய அல்பத்தனமான கேள்வி இது ஒன்றுதான். புரட்சியாளர்களை காட்டிக் கொடுப்பது சமூகவிரோதியின் வேலை, மக்கள் விரோதியை, பொறுக்கியை காட்டிக் கொடுப்பது முற்போக்குவாதிகளின் வேலை. சுகுணா மற்றும் அவரது பினாமி (திருத்தம்: பினாமி என்ற கருத்து வாபஸ் வாங்க்கப்பட்டுள்ளது) தியாகு ஆகியோர் சமூகவிரோதிகள், ம.க.இ.க. முற்போக்குவாதி என்பதே இவர்களின் கேள்வியிலிருந்து பெறப்படும் முடிவு. லீனா என்ற பொறுக்கியை மக்களிடம் அம்பலப்படுத்தினால் நாம் லீனாவின் எதிரி. புரட்சிக்காரர்களை ஒருவர் காட்டிக் கொடுத்தால் அவர் புரட்சிக்காரர்களின் எதிரி. சுகுணா திவாகர் இந்த இரண்டில் கடைசி வேலையே சிறந்தது என்று கருதுவது அவரது பின்நவீனத்துவ கட்டுடைப்புக்குப் பொருத்தமாகவே இருக்கும். லீனாவின் எதிரியாக இருப்பதை விட புரட்சியாளர்களின் எதிரியாக இருப்பதே அவருக்கும், பினாமி(திருத்தம்: பினாமி என்ற கருத்து வாபஸ் வாங்க்கப்பட்டுள்ளது) தியாகுவுக்கும் உவப்பானதாக இருக்கும் எனில் யார் என்ன செய்ய முடியும்? இவ்வாறு ஒப்புமை செய்வதன் மூலம் அவர்கள் என்ன நிறுவ விரும்பினார்கள் என்பது பின்நவீனத்துவத்துக்கே வெளிச்சம்.

இன்னொரு புத்திசாலித்தனமான கேள்வி இந்துக் கடவுளர்களை இது போலத்தானே அவமானப்படுத்தினீர்கள் அப்பொழுது எங்களுக்கு கோபம் வந்து கலகம் செய்யலாமா? என்று சந்தடி சாக்கில் கேட்கப்பட்டுள்ளது. கேட்டது உண்மைத்தமிழன் அண்டு அதியமான் அண்ணாச்சி. முற்போக்குவாதிகளின் கூட்டத்துக்கு வந்து கலகம் செய்யுங்க, கேள்வி கேளுங்க பதில் சொல்றோம்('எல்லா'வகையிலும்). பேரூந்துகளிலும், ரயில்களிலும் பல வருடங்களாக ம.க.இ.க. தோழர்களும், பெரியார் தி.க.வினரும் தனியாகத்தானே இந்தக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள்? பேசுகிறார்கள்? விவாதிக்கிறார்கள்? யாருக்கும் பயப்படவில்லையே? மக்களிடம் செல்வதா அய்யோ, அவிங்களுக்கு அறிவுகம்மி அடிச்சுப் புடுவாங்க என்று மேட்டுக்குடி லும்பன்களைப் போல அவர்கள் ஒன்றும் பயப்படவில்லையே?

இன்னொன்று கம்யூனிசத் தலைவர்களை விமர்சிக்கக் கூடாது என்று வினவு சொன்னது போல சிலர் திரிக்கிறார்கள்(அதியமான் அவ்வாறு திரிப்பவர்களில் முதன்மையான பொய்யர்). வினவு தளத்தில் கம்யூனிசத்தை விமர்சித்து, கம்யூனிசத் தலைவர்களை விமர்சித்து எத்தனை விவாதங்கள், அவதூறுகள்? அதியமான் வினவில் எழுதியதில் 90% இதுதான். அவர் மீது இந்த அம்சத்தில் கோபம் கொண்டு திட்டத் தொடங்கிய தியாகுவை(கார்ல்மார்க்ஸ் என்ற முகமூடிப் பெயரில்) விமர்சனம் செய்து அதியமானின் கருத்துரிமைக்கு துணை நின்றது வினவு. தமிழ்மணத்தில் கம்யூனிசத்தின் மீதும், கம்யூனிசத் தலைவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு தாக்குதலும் கருத்துப் பூர்வமாகவே எதிர்கொள்ளப்பட்டுள்ளது. யார் வீட்டுக்கும் ஆள் அனுப்பப்படவில்லை. ஆனால், லீனாவினுடையது கருத்துக்கள் அல்ல, அவை கம்யூனிசத் தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையே யோனி தேடி அலையும் ஆண்குறிகளாகச் சித்தரிக்கும் புளுபிலிம் ஆகும். அது ஒரு வன்முறை ஆகும். புளுபிலிமை, அது உருவாக்கும் சமூக வன்முறையை தோழர்கள் எப்படி எதிர் கொள்வார்கள் என்பதை அராஜகவாதி உண்மைத்தமிழன் தனது பதிவில் பதிவு செய்துள்ளார் (அவருக்கு ஆத்திரம் என்னடா புளுபிலிம் போடுற தியேட்டரை தோழர்கள் உடைச்சுட்டாங்களே, அராஜகவாதிகள் , என்று ஒரே புலம்பல்ஸ்).

அத்தனைக்கும் லீனா ஒரு புளுபிலிம் தரகர் என்ற போதும் ம.க.இ.க. நியயமாகவே கேள்வி கேட்டுள்ளனர். ஆனால், இதையே கருத்துரிமைக்கெதிரானதாக திரிக்கிறார்கள் உண்மைத்தமிழனும்-அய்யனார் அண்டு கோவும். அராஜகவாதிகள் உண்மைத்தமிழனும், அய்யனாரும் வேண்டுமானால் தமது வீட்டாரை புளுபிலிமில் சித்தரித்து எடுப்பவனிடம் சென்று அஹிம்சை பேசி விளக்கம் கேட்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள முயலாலாம். புரட்சியாளர்களுக்கு அவ்வாறு சுயமாரியதை விற்று நடித்து நல்லவன் பட்டம் வாங்க வேண்டிய அவசியமில்லை.

ஓவர் டூ உண்மைத்தமிழன்,

லீனா கூட்ட நிகழ்வுகள் குறித்து உண்மைத்தமிழன் ‘சோ’த்தனமாகக் காட்சிகளைச் சித்தரிக்கும் விதம்,

@@“பேசணும் ஸார்.. கொஞ்சம் சந்தேகம் இருக்கு ஸார்.. கண்டிப்பா பேசியே ஆகணும் ஸார்.. கொஞ்சம் தயவு பண்ணுங்க ஸார்..” என்று முதலில் நாகரிகமாகத்தான் ஆரம்பித்தது வினை.@@

@@'நயமான, நாகரிமான' கேள்வியை எழுப்ப.. அதைக் கேட்டு அதைக் கேட்டு சட்டென்று உஷ்ணமான லீனா ஏதோ சொல்லிக் கொண்டே முன்னால் வர..@@

லீனாவிடம் நயமாக கேட்க்கப்பட்ட கேள்வி என்னவென்று எழுத
வேண்டியதுதானே உ.த. சார்? வினவு எழுதியுள்ளதே? வினவைத் தவறாகச் சித்தரிக்கத் தேவையானதை விலாவாரியாகவும், எதிர்தரப்பை ஏதோ செஞ்சுட்டாங்க என்பது போல காட்டி நல்லவர்களாக்கத் தேவையானதை சுருக்கமாகவும், பூடகமாகவும் எழுதும் இந்த நரித்தனம் ஒன்றுதான் உண்மைத்தமிழனின் ஒரே பலம் போலும். மேலும், லீனா அடிக்க வந்தார், இடையில் ஒரு தோழர் புகுந்து அதை மட்டுப்படுத்த பலரும் இடையில் புகுந்து சீரமைக்க அடிதடி தவிர்க்கப்பட்டது. ஆனால், உ.த. எழுதியுள்ளதோ லீனா முன்னால் வந்தாராம். எதுக்கு வந்தார்? தோழர் கேட்ட கேள்வி சரியாகக் காதில் விழவில்லையென்று திரும்ப கேட்பதற்கு வந்தாரா?

உண்மையில், ம.க.இ.க. கேட்டிருந்த கேள்வி,
“’கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது”’

லீனாவினுடைய எழுத்துக்களிலிருந்துதான் இந்த கேள்வியும் தயாரிக்கப்பட்டது எனும் போது அதற்கேயுரிய உடல்மொழி தவிர்க்க முடியாததே.

மீண்டும், உ.த.
@@அவர் பேசி முடிக்கின்றவரையில் அமைதி காத்த தோழர்கள் மறுபடியும் எழுந்தார்கள்.. இம்முறை ஆதரவுக் கூட்டத்தில் இருந்து ஒருவர் ஆவேசமாகப் பேச பதிலுக்கு இவர்களும் ஆவேசமாகப் பேச கனன்றது அரங்கத்தின் சூழ்நிலை..@@

@@இந்த நேரத்தில் ஆதரவுக் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் 'டா' போட்டு பேச.. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பதைப் போல பிடித்துக் கொண்டார்கள் தோழர்கள்.@@

ஆதரவுக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு திட்டுவதற்கு உரிமை உண்டு என்று சொல்ல வருகிறார் உண்மைத்தமிழன். அயோக்கியத்தனத்தையும் செய்துவிட்டு, திட்டவும் செய்வானாம் நாம் அமைதியாக வரவேண்டும் என்பது உண்மைத்தமிழனின் எதிர்பார்ப்பு. அப்படியெல்லாம் வரமுடியாது. மேலும், அவர் சொல்வது போல வெறும் ‘டா’ போட்டு மட்டுமல்ல, வசவுகளும், திட்டுகளுமே ம.க.இ.கவினரை பார்த்து நிகழ்ந்தன.

@@ ஆனாலும் நமது தோழர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தொண்டை கிழிய கத்திக் குவித்துவிட்டு, தயார் செய்து கொண்டு வந்திருந்த கோஷங்களையும் எழுப்பிவிட்டுத்தான் வெளியேறினார்கள். அவர்களுடன் வந்திருந்த பெண் தோழியர்கள் லீனாவையும், அவரது ஆதரவாளர்களையும் திட்டியதை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதேபோலத்தான் தோழர்களும்..@@

அதாவது தோழர்களின் கத்தல்கள் மட்டுமே உ.த.வின் காதில் விழுந்துள்ளது எனில் அவர் நல்ல மனநல மருத்துவரை அனுகுவது நல்லது. லீனாவின் அடிபொடிகள் சலம்பியை எதுவுமே அவர் காதில் விழவில்லையெனில் அந்த வார்த்தைகள் எல்லாம் உ.த.வின் காதில் தேனாக பாய்ந்துள்ளது என்றே பொருள்.

உ.த.வின் உளறல்களை அம்பலப்படுத்தி அவரது தளத்தில் வந்த பின்னூட்டங்களுக்கு அவரது எதிர்வினை,

@@
[[[கிருஷ்ணமூர்த்தி said...

இங்கே பிரச்சினையே, சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பதை ஆளுக்காள், அவரவர் சௌகரியங்களுக்கேற்றபடி புரிந்து கொண்டிருப்பதுதான்!

Your freedom ends where my nose begins என்பதாக ஒரு விவரணையும்கூட உண்டு!

கருத்துச் சுதந்திரம் என்பது என்னவாக, எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது உங்களுடைய கருத்தாக இருந்தால், உங்கள் வாதப்படியே, லீனா அண்ட் கம்பனிக்குத் தங்கள் கருத்தை அவர்களுக்குத் தெரிந்த உபரி மயிர் வார்த்தைப் பிரயோகத்தில் சொல்ல உரிமை இருப்பது போலவே, வினவு தளத்துக்கும் அவர்கள் வழியில் கலகத்தைத் தோற்றுவிப்பதும் சரியானதே!]]]

உ.த.அண்ணாச்சி: எப்படி ஸார்..? லீனா எழுத்தில்தான் தனது கருத்தைப் பதித்தார். வினவு அண்ட் கோ..?
@@

அடிக்க வந்தது லீனா, வினவு தனது கருத்துக்களை கடைசி வரை கருத்துக்களாகத்தான் பதிவு செய்துள்ளதை உ.த.வின் பதிவும் பதிவு செய்துள்ளது. ஆனாலும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது கருத்து உ.த.வின் மொத்த பதிவையும் ஒன்றுமில்லாமல் செய்கிறது என்றவுடன் இப்படி டுவிஸ்டு செய்கிறார் மிஸ்டர் உண்மை.

மேலும், ம.க.இ.க. அனுகுமுறை சரி என்று சொன்ன ஒருவரை ம.க.இ.க.வின் பி.ஆர்.ஓ.வா என்று கேட்கிறார் உ.த. இவரென்ன லீனாவின் பி.ஆர்.ஓ.வா?.


@@
[[[அந்தக் கூட்டத்தை நடத்திய அமா பத்தி உங்களுக்க தெரியாது. எழுதுனா இந்து மக்கள் கட்சியும் ம•க•இ.க.வும் ஒன்னுன்னு கூட்டம் போடுற•.. ஏம்பா ன்னு கேக்க வந்தா பேச விடமாட்ட•.. எங்க அம்மாவ தேவடியான்னு சொல்லுவ கேக்க வந்த உனக்கு ஜனநாயகம் இருக்கும்ப•.. என்னப்பா நியாயம்]]]

உ.த.அண்ணாச்சி: அ.மார்க்ஸ் பற்றி வெளியுலகில் எந்த அளவுக்குத் தெரியுமோ அது அளவுக்குத்தான் எனக்கும் தெரியும்.. இந்த இடத்தில் அவரது முந்தைய செயல்பாடுகளை பற்றி நாம் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்..?
@@

அதாவது, ம.க.இ.க.வைப் பற்றி பேசும் போது மட்டும் எல்லா எஸ்டிடியும்(ஹிஸ்டரியும்) பேசுவார் மிஸ்டர் உண்மை. ஆனால், ம.க.இ.க. மட்டும் இளிச்சவாயன் மாதிரி அ.மார்க்ஸ்,லீனாவினுடைய முந்தைய நடவடிக்கைகளை சுத்தமாக மறந்துவிட்டு புதிதாக எல்லாம் செய்ய வேண்டும் என்கிறார் இந்த ‘சோ’க்கால்டு உண்மைத்தமிழன்.

உ.த.வின் மழுப்பல்ஸ்,
@@[[[ஏழர said...

''கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது”

இதுதான் அதியமான் அந்த கேள்வி. இது தொடர்பான வினவின் பதிவு
http://www.vinavu.com/2010/04/17/pala-rising/]]]

உ.த.அண்ணாச்சி: கோபம் வராம என்ன செய்யும்..? நீங்கள் நேரில் கேட்டதால் அவரும் நேரிலேயே தனது கோபத்தை வெளிக்காட்டிவிட்டார்..

எழுத்தில் செய்திருந்தால் அவரும் எழுத்தில் தனது ஆவேசத்தைக் காட்டியிருப்பார்..!

இதிலென்ன தவறு..?@@

லீனாவுக்கு நேரில் கேட்டால் கோபம் வரும் எங்களுக்கு எழுத்தில் படித்தால் கோபம் வரும். கோபம் வருவதில் கூட சீமாட்டிக்குத்தான் உரிமை உண்டு எனஜ் ஜொள்ளுகிறார் உ.த.


@@
[[[ஏழர said...
ம்கஇக செய்த 1000 விசயங்களை விடுத்து, லீனா மேட்டர் கிடைத்தவுடன் அராஜக கம்யூனிசம் என்று முடிவுக்கு வந்து எழுத முடிந்த உங்களால் தீபக்கை லீனாவும் சோபாவும் அடித்ததை வைத்து அவர்கள் மேல் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறீங்க பாருங்க. அடடா. அதுதான் சார் உண்மைத் தவிப்பு!!!]]]

ஏழர அண்ணே..!

இதுக்கு மேல அந்த விஷயத்துல என்ன எழுதுறது..? நீங்களே சொல்லுங்க.. தெரிஞ்சுக்குறேன்..!@@

ஏன், அழையா விருந்தாளியாக கூட்டத்துக்குப் போகிறாய்? என்பது இன்னொரு வாதம். லீனா ஆதரவு அராஜகவாதிகளின் இந்தக் கூட்டம் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக வினவை குறிவைத்தே தயாரிக்கப்பட்டது. மேலும், வினவு குறிப்பிட்டது போல “இ.ம.கட்சி, ம.க.இ.க, வினவு தளம் ஆகியோரை இணைத்து லீனா ஏற்கெனவே எழுதியிருந்ததார். இதையே குமுதம் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார்”.

‘இணையத்தள அராஜகம்’, ‘இடது தீவிரவாதம் பேச மட்டும் செய்யும் சிறு கும்பல்’ போன்ற சொற்றொடர்கள் வினவை நேரடியாகக் குறிப்பிட்டு வம்பை விலைக்கு வாங்கப் பயப்படும் வகையில் பூடகமான, அயோக்கியத்தனமான சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டன. சரியாகச் சொன்னால் உண்மைத்தமிழன் பாணி சொல்லாடல்கள் அவை. அ.மார்க்ஸும் பலரை வினவைக் குறிப்பிட்டே கூட்டத்திற்கு அழைத்துள்ளார். மேலும், கூட்டம் குறித்த கீற்றுவில் வெளிவந்த அழைப்பிதழில் முதல் பேராவிலேயே ‘இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது’ என்று வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. ஆஹ, உண்மைத்தமிழன், அய்யனார் ஆகியோர் வீட்டார் விபச்சாரம் செய்வதாக ஒரு கவிதை அதை எதிர்த்து அதே மொழியில் அவர்கள் பேசினால் அவர்களை அராஜகவாதிகள் என்று கண்டித்து ஊர் பெரியமனுசங்க எல்லாம் கூட்டம் போடுவானுங்க. அதைக் கண்டிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும், விளக்கம் கேட்க வேண்டும், மறுநாள் அங்கு அதே போல கூட்டம் போட வேண்டும் என்று உண்மைத்தமிழனும், அய்யனாரும் நியாயம் பேசுவார்கள். அவர்களது வீட்டில் இதே போலச் சொல்லிப்பார்க்கட்டும், அதற்குப் பிறகு அங்கு நிகழும் குடும்ப அராஜகமே அவர்களுக்குச் சரியானதைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக் கொடுக்கும். என்ன செய்ய புரட்சியாளர்கள் மானங்கெட்டவர்கள் அல்லவே? ஒருவேளை உ.த.வின் குடும்பத்தாருக்கு அவ்வாறு நிகழ்ந்தால் உண்மைத்தமிழன் அண்ணாச்சி வழக்கமாக தான் விண்ணப்பிக்கும் முருகனுக்குப் பதிலாக போலீசைக் கூப்பிடவும் வாய்ப்புள்ளது(தமிழச்சியை மிரட்ட தமிழ்மணத்திற்கு விண்ணப்பித்த கருத்துரிமைக்காவலர்தானே இவர்). ஏனென்றால் போலீசுக்கு அராஜகம் செய்யும் உரிமை உண்டு என்று நம்பும் சோவின் சீடர்தானே அவர்.
லீனாவுக்கு மட்டுமே பம்மி பதுங்கும் இந்தக் கருத்துரிமை காவலர் சதாரண மக்களின் சில்லரைத் தவறுகளுக்கு எதிராக பிரயோகித்துள்ள அராஜகங்களில் ஒன்றை பார்ப்போமா? சினிமாத் தியேட்டரில் கள்ள டிக்கெட் விற்பவர்களுக்கு எதிராக அண்ணன் உ.த.வின் அராஜகம்.

@@@நான் அவருடன் வாக்குவாதம் செய்வதைப் பார்த்தபடியே இருந்த ரவுடிகள் கூட்டம் தூரத்தில் இருந்தே என்னை கவனித்தபடியே இருந்தார்கள். எனக்கு என்ன வேகம் வந்ததோ தெரியவில்லை. சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்து கத்திக் குவித்துவிட்டேன். "எல்லாம் உங்களாலதாண்டா.. ஒருத்தனாவது உதவிக்கு வர்றீங்களாடா..? காசு இருக்குதுன்னு நிறைய பேரு அள்ளி வீசுறதாலதான் அவன் கொள்ளையடிக்கிறான். ஏண்டா நாய்களா கொடுக்குறீங்க?" என்று கத்தினேன்.(இந்த வாரம் முழுக்கவே ரொம்ப டென்ஷனா இருக்கு) கூட்டம் வேடிக்கைதான் பார்த்ததே ஒழிய.. உதவிக்கு வரவில்லை..@@@

@@@அண்ணன் கமல் வெடிகுண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைக்கும்போது இந்தத் தியேட்டரிலும் அப்படியொரு குண்டை வைக்கக் கூடாதா என்றுதான் எனக்குத் தோன்றியது.@@@

தியேட்டரில் டிக்கெட் பிளாக்கில் விற்கும் அநியாயத்துக்கே உ.த. அண்ணாச்சிக்கு இவ்வளவு கோபம் வருகிறது. அவரை யாராவது சினிமாவுக்கு வா என்று கூப்பிட்டார்களா? அல்லது கள்ளடிக்கெட்டில் பார் என்று கூவி அழைத்தார்களா? கவுண்டரில் டிக்கெட் இருந்தால் பார், இல்லையெனில் என்னைக்கு கிடைக்கிறதோ அன்று வந்து பார். இதுவே அவரது கருத்துரிமை கோட்பாட்டின் படி சரியான நடைமுறையாக இருக்க முடியும். ஆயினும், நம்ம அண்ணாச்சி, அங்கு சென்று போலீசுக்காரரையும், டிக்கெட் விற்றவர்களையும் திரும்பத் திரும்ப தொந்தரவு செய்துள்ளார், பிறகு யாரும் எதுவும் செய்யாமலேயே(ஒருத்தனும் அவரை கண்டுகொள்ளவில்லயென்றவுடன்) அவரது கோபம் உச்சத்துக்குச் சென்று 'டேய்' 'போய்' என்று சுற்றியிருந்தவர்களை கத்தி அவதூறு செய்து ரவுடியிசம் செய்துள்ளார். குண்டு வைத்து அவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் விருப்பபட்டு பயங்கரவாதியாக மாறியுள்ளார். ஆனால், ம.க.இ.க.வினரோ லீனா கூட்டத்தில் அமைதியாகவே கேள்வி கேட்டுள்ளனர், லீனா கும்பல் திட்டத் தொடங்கிய பிற்பாடே ஆக்ரோசம் அடைந்து பதிலுக்குத் திட்டியுள்ளனர். இத்தனைக்கும் ம.க.இ.க. கோபம் கொண்டதோ சமூகப் பிரச்சினைக்கு ஆயினும் இவர்கள் கருத்தில் அது அராஜகவாதம். உண்மைத்தமிழன் போன்றோரின் சினிமா டிக்கெட் பிரச்சினையோ ஜனநாயகவாதம். அடப் போங்கப்பா.. முருகன் ஏன் கோவனத்தோடு பழனியில் குந்தியிருக்கான் என்று இப்போதான் தெரியுது. உ.த. மாதிரி பக்தர்களின் சல்லை தாங்கமால்தான் கோவணமாவது மிஞ்சட்டும் என்று அங்கு போய்விட்டான்.

@@ஆனாலும் நமது தோழர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தொண்டை கிழிய கத்திக் குவித்துவிட்டு, தயார் செய்து கொண்டு வந்திருந்த கோஷங்களையும் எழுப்பிவிட்டுத்தான் வெளியேறினார்கள். அவர்களுடன் வந்திருந்த பெண் தோழியர்கள் லீனாவையும், அவரது ஆதரவாளர்களையும் திட்டியதை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதேபோலத்தான் தோழர்களும்@@

மொத்தத்தில் அங்கு கெட்டவார்த்தை பேசியது கத்தியது எல்லாம் ம.க.இ.க.வினர் மட்டுமே, லீனா தரப்பினர் அமைதியாகவே (சிலர் உணர்ச்சிவசப்பட்டு 'டா' என்று சொன்னது தவிர்த்து) இருந்தனர், லீனா சும்மா ஓடிப்பார்த்தார், தோழர்களோ கொலை வெறியோடு பாய்ந்தனர், என்று உண்மையை உள்ளபடியே பதிவு செய்துள்ளார் உண்மைத்தமிழன். இன்னொன்றையும் அவர் சேர்த்துச் சொல்லியிருக்கலாம், லீனா தரப்பினரை அடித்து, துவைத்து காயப்போட்டு, வெளியே அனுப்பிவிட்டு கூட்டத்தை ம.க.இ.க. மொத்தமாகக் கைப்பற்றிக் கொண்டது என்று. எதுக்கு சார் பெயரில் தேவையில்லாமல் 'உண்மை'யை வைச்சிருக்கீங்க? பெசாம எடுத்துடுங்க எல்லாம் வல்ல முருகப்பெருமானாவது பிழைத்துப் போகட்டும்.

வினவு மீதான உண்மைத்தமிழனின் ஆத்திரத்திற்கு காரணங்களில் ஒன்று புளுபிலிம் தியேட்டரை உடைத்து அவரது எண்டெர்டெயின்மெண்டுக்கு ஆப்பு வைத்தது என்பதாகக் கருதலாம் (எனது கருத்துச் சுதந்திரம்) எனில், இன்னொரு காரணத்தையும்(அவருக்கு மட்டுமல்ல அய்யனார், சுகுணா, அ.மார்க்ஸ் உள்ளிட்ட பல அராஜகவாதிகளுக்கும் இதுவே பயமுறுத்துகிறது) சுட்டுகிறார், பின்வருமாறு, அவரது ‘இனிய நண்பர்’ சங்கராமசுப்பிரமணியனுக்கு நிகழ்ந்த அனுபவத்தை கூறுகிறார். ‘இனிய நண்பர்’ என்ன செய்தார்? என்ற கேள்வி படிக்கும் பதிவர்களுக்குத் தேவையில்லாதது. அவர் நித்தியானந்தனாகக் கூட இருக்கலாம். வினவின் அராஜகமே இங்கு முக்கியம் என்று சொல்லாமல் சொல்கிறார் உண்மைத்தமிழன். ஈராக், ஆப்கானில் போராடும் மக்களை படுமோசமாக இழிவுபடுத்தி கவிதை என்ற பெயரில் குடித்துவிட்டு எழுதினார்கள் அவரது ‘இனிய நண்பர்’கள். அவர்கள் உண்மைத்தமிழனின் ‘இனிய நண்பர்’கள் என்பதால் ம.க.இ.க.வினர் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதும், அதுவே ஜனநாயகம் என்பதும் அவரது எதிர்பார்ப்பாக இருக்கலாம். அவ்வாறு இருக்க முடியாது. சரி இவராவது இவரது ‘ஜனநாயக முறை’ப்படி ‘இனிய நண்பர்’களிடம் ஐயன்மீர் ஏன் இவ்வாறு கவிதை எழுதினீர்கள் என்று கேட்டாரா (இப்போது லீனாவின் கருத்துரிமைக்காக பக்கம் பக்கமாக எழுதி சோடா குடிக்கிறார் இல்லையா அது போன்றதொரு உன்னதமான அக்கறையின் வெளிப்பாடாக ஈராக் மக்களின் கருத்துரிமைக்காக அவர்களிடம் பேசினாரா?) என்றால் அதுவும் இல்லை. மொத்தத்தில் இவருக்கு இவரது நட்பு முக்கியம், எங்களுக்கு எமது கற்பு (அவருக்கு கற்பு தேவையில்லாமல் இருக்கலாம்) முக்கியம் என்ற சின்ன லாஜிக்கை அராஜகவாதம் என்ற பெரிய பிரேமில் போட்டு அடைக்க முயன்று சோடா குடித்துள்ளார் உண்மைத்தமிழன். அத்தனைக்கும் அவரது ‘இனிய நண்பரி’ன் வீட்டுக்குச் சென்று அவரது சுற்றத்தாரிடம் இந்தக் கவிதையை எழுதியவர் இவர்தான், இதில் உங்களுக்கு ஒப்புதலா என்றுதான் தோழர்கள் கேட்டுள்ளார்கள். நல்லவிதமாக எழுதியிருந்தால் ‘இனிய நண்பர்’ பெருமைப்படலாம், அவ்வாறுஇல்லாததால் நல்லவன் வேசம் போட்டு மாட்டிக் கொண்டு கிளைமாக்ஸில் தவிக்கும் வில்லனைப் போன்ற நிலைக்காளாகிவிட்டார் ‘இனிய நண்பர்’. வில்லனாக இருந்தாலும் இனிய நண்பர் எனும் பொழுது அவர் மீது ஏவிவிடப்பட்ட ‘வன்முறை’ உ.த.வை பாதித்துவிட்டது.


எதையைதையோ கட்டுடைக்கும் அய்யனார் அண்டு கோவினர் உண்மைத்தமிழனின் இந்தப் பதிவில் ஒளிந்திருக்கும் அவதூறு முரன்பாடுகளை கட்டவிழ்க்கத் தெரிந்திராத அப்பாவிகளாகவே கடைசி வரை இருந்துவிட்டனர் பாவம். அவர் சொன்னதை அப்படியே வாமிட் செய்து மேலே கொஞ்சம் தமது அறிவுச் செருக்காலான அலங்காரங்களை டாபிங்க்ஸ் போட்டு கருத்துப் பந்தி பரிமாறிவிட்டனர். என்னவொரு கருத்துச் சுதந்திரம்.

இத்தனை கூறிய பிறகு ஒரு கேள்வி எழலாம் கருத்துச் சுதந்திர புனிதக்கூட்டணியாளர்கள், எப்போதுமே அராஜகவாதம் தவறுதான் என்று சொல்லும் உத்தமர்கள், ஆனால் ம.க.இ.க.வினரோ அயோக்கியத்தனத்திற்கு அராஜகமே பதில் என்று சொல்லும் வன்முறையாளர்கள் என்ற கருத்து சரிதானே?

நிற்க, மேற்படி உண்மைத்தமிழன் - அய்யனார் அண்டு கோவின் கருத்துரிமை கபர்தஸ்து சுத்த சுயம்புவான அராஜகவாதமாக பல்லிளிக்கும் இடமே ‘இனிய நண்பர்’ விவகாரத்திலும் லீனா விவகாரத்திலும்தான் உள்ளது. அதாவது, எந்தவொரு விசயத்தையும் மக்களிடம் முன் வைத்து பிரச்சாரம் செய்யும் நடைமுறையைக் கொண்ட ம.க.இ.க. நான் மக்களிடம் சென்று இவற்றை பேசிக் கொள்கிறேன் என்று சொன்னால் அது கருத்துரிமைக்கு எதிரான பாசிசம் என்கிறார்கள் இந்த அராஜகவாதிகள். அதாவது, மக்களுக்கான கருத்துரிமையை எதிர்க்கிறார்கள். அதாவது, மக்கள் முட்டாள், அவர்களுக்கு இவற்றை புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது என்ற மேட்டுக்குடித் திமிரிலிருந்து வரும் அராஜகவாதமே இவர்களின் கூற்று. இன்னும் சொன்னால் எதையும் சொல்லும், தெரிந்து கொள்ளும் ‘கருத்து’உரிமை எங்களை மாதிரி இண்டலெக்சுவலுக்கு மட்டுமே உண்டு, மக்கள் எல்லாம் அந்தளவுக்கு வளரவில்லை, அவர்களுக்கும் சேர்த்து நாங்களே படித்து சிந்திக்கிறோம் எனவே மக்களுக்கு அனைத்தும் அறிந்துகொள்ளும் ‘கருத்து’உரிமைக்கான வாய்ப்பை வழங்கி விடாதே என்பதே இந்த அராஜகவாதிகளின் கோரிக்கை, பார்ப்பனியக் கோரிக்கை(பார்ப்பனியம் என்ற வார்த்தை அய்யனாருக்குப் பிடிக்காது).
மக்களைப் பார்த்து பயப்படும் இவர்களின் பிழைப்புவாத அரசியலும், உ.த.வின் எதிர்புரட்சி அரசியலும் புரட்சியாளர்களுக்கு எதிராக இவ்வாறு புனிதக் கூட்டணி சேர்ந்துள்ளது. அராஜவாதத்தை உள்ளடக்கமாகக் கொண்ட இவர்கள் புரட்சியாளர்களை அராஜகவாதிகள் என்று சொல்வது வேடிக்கையானது. இவர்களின் கருத்துரிமை ஆவேசங்கள் ஆபரேசன் கிரின் ஹண்டு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து என்றுமே வெளிவராது. உண்மைத்தமிழனோ, அய்யனாரோ இது சார்ந்து பதிவு போட்டதாக தெரியவில்லை. அவர்களது அதிகபட்ச கருத்துரிமை எதிரிகள் கள்ள டிக்கெட் விற்பவன், சூடு வைத்த ஆட்டோ மீட்டர், போன் கனெக்சனுக்கு கமிசன் கேட்பவன், அப்புறம் லீனாவை எதிர்க்கும் வினவு போன்றோர்.

லீனாவின் யோனிக் கவிதையில்தான் உனது கருத்துரிமை கொப்புளிக்கிறது என்றால், ஆப்புரேசன் கிரின் ஹண்டு போன்றவற்றில் கருத்துரிமை பறிபோவது பற்றி நீட்டி முழக்க நீ தயாரில்லை எனில், உன்னுடைய கருத்துரிமை என்ற பெயரிலான அராஜகவாத பிதற்றலை யோனி மசிராகக் கூட நான் மதிக்க வேண்டிய அவசியமில்லை.

புரட்சிக்காரன் சமூகவிரோத சக்திகளிடமிருந்து தன்னைக் காக்க தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான், அயோக்கியன் மக்களிடமிருந்து தன்னைக் காக்க தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான். இரண்டும் ஒன்று என்பது அயோக்கியர்களின் கருத்தாகத்தான் இருக்கும். இப்படியாக அனைவருக்குமான இவர்களின் கருத்துரிமை, அராஜகவாதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு அற்பமானதுதான் இவர்களது கருத்துரிமை அராஜகவாதம். அதாவது லீனாவின் யோனிக்கு மட்டுமே இவர்களது கருத்துரிமை செல்லுபடியாகும்.

அசுரன்

Sunday, January 24, 2010

தோழர் சந்திப்பு என்ற செல்வபெருமாளுக்கு அஞ்சலி

தோழர் சந்திப்பு என்ற செல்வபெருமாள் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கான்சருடன் போராடிக் கொண்டுதான் வலைப்பூக்களில் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்பது அவரது ஈடுப்பாட்டைக் காட்டுகிறது.

சமீப வருடங்களில் அவர் எழுதுவதை குறைத்துக் கொண்டதை இயல்பாக ஒரு பதிவரின் பதிவு வாழ்கையில் ஏற்படும் பின்னடைவை போன்ற ஒன்று என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவரது பின்னடைவுக்குப் பின்னால் அவரது உடல்நலக் குறைவு இருக்கும் என்பதையோ, அது குறித்த அவரது புலம்பல்களின் சிறு சலனத்தை கூட தனது எழுத்துக்களில் அவர் காட்டியதில்லை என்பதையோ நினைத்துப் பார்க்கும் பொழுது அவரது இழப்பின் வருத்தம் அதிகரிக்கிறது.

இது போன்ற தோழர்களின் விடா முயற்சியும், ஈடுபாடும், சமூக உணர்வும், தியாகங்களும் நந்திகிராம்களையும், சிங்கூர்களையும், கிரீன் ஹண்டுகளையும் நியாயப்படுத்த பயன்படுத்தும் சிபிஎம் கட்சியின் மோசடியை முறியடிக்கும் கடமையை இன்னும் விரிவாகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது.

அவர் ஏற்றுக் கொண்டு நடந்த பாதை தவறானது என்றாலும் அதன் இலக்காக ஒரு கம்யுனிச சமூகம் அமைக்கின்ற கனவையே கருவாக்கிச் சுமந்தார். இதில் அவர் பின்வாங்கியதில்லை. இதுவே எம்மை அவருடன் இணைத்த புள்ளி.
வலைப்பூக்களில் நான் எழுத வந்த ஆரம்ப காலங்களில் எம்மை அங்கீகரித்த மிக சொற்பமான சிலரில் அவர் ஒருவர். அவ்வாறு அவர் அங்கீகரித்த இடத்திலும் எம்மை இந்தப் புள்ளி இணைத்தது.

அவருடன் பல்வேறு விவாதங்கள், மிகக் கடுமையான கருத்து முரன்பாடுகள் கடந்த சில வருடங்களில் நிகழ்ந்துள்ளன. இவை ஒவ்வொன்றிலும் அவர் ஆக எதிர்திசையிலேயேதான் பிராயணித்துச் சென்றார். கடைசிக் கட்டங்களில் நிகழ்ந்த விவாதங்களில் முற்றிலும் கோட்பாடற்ற எதிர்வினைகளை செய்யும் நிலைக்கும் சென்றார்.

ஆனால், இவையனைத்துமே அவர் சார்ந்த கட்சி அவரை பயன்படுத்திக் கொண்டு அவரது கனவுகளை சுரண்டுவது குறித்த கோபத்தையே என்னிடம் ஏற்படுத்தின. தாம் சார்ந்துள்ள கட்சிக்கு நேர்மையாக அந்தக் கட்சியின் கருத்துக்களை - அவை மோசடியானவை என்றாலும் - நிலைநிறுத்தும் ஒரே உத்வேகம் மட்டுமே அவருக்கு துணை நிற்க அவர் எம்முடன் தனியாகப் போராடியுள்ளார். இதுதான் அவர் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்தது. இதுதான் ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம். இத்தகைய போராட்டத்தை அவர், தான் சார்ந்த கட்சிக்குள் நடத்தியிருந்தால்? இத்தகைய கேள்விகளை கேள்வியாகவே தவிக்க விட்டுச் சென்று விட்டார் தோழர் சந்திப்பு.

தோழர் செல்வபெருமாளுக்கு எனது அஞ்சலி

அசுரன்

Friday, November 27, 2009

டபுள் டிப் பொருளாதார வீழ்ச்சி - கும்மாங்குத்து பொருளாதார வீழ்ச்சியும், துபய் கடன் அபாயமும்!!!

பொருளாதார மந்தம் முடிஞ்சிருச்சி என்று இந்த மாதம் ஆரம்பத்தில் ஆராவாரமாக அறிவித்தனர். கடந்த பல மாதங்களாக இப்படி ஒவ்வொரு மாதமும் அறிவிப்பது என்பது ஒரு சடங்காகவே ஆகிவிட்டது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த முறை இவ்வாறு அறிவிக்கப்பட்டதற்கு பொருத்தமாக இந்தியா போன்ற தெற்காசிய சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீடுகள்(FII) குவியத் துவங்கின. ஐ எம் எப்ன் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் இந்தியா, இலங்கை, மொரிசியஸ் நாடுகள் வாங்கிய தங்கமும், சீனா போன்றவை வெளிச் சந்தையில் வாங்கிக் குவித்த தங்கத்தின் மூலமும் இன்னும் அதிகமான டாலர் சந்தையில் புலங்கத் துவங்கியது.

ஆனால், இவை நடந்து கொண்டிருக்கும் போதே மேற்கு நாடுகளில் என்றும் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க வங்கிகள் சட சடவென ஒவ்வொன்றாக திவாலாகிக் கொண்டுள்ளன. இன்னிலையில் வந்தது ஒரு முக்கிய அபாய சங்கு. டபுள் டிப் பொருளாதார மந்தமாக இது விரிவடைகிறது என்பது போலான செய்திகள் வெளி வரத்துவங்கின.

டபுள் டிப் பொருளாதார மந்தம் அல்லது கும்மாங்குத்து அல்லது தெளிய வைத்து அடிக்கும் பொருளாதார மந்தம் என்பது - ஒரு பொருளாதார மந்தம் ஏற்பட்டு பிறகு அதிலிருந்து மீள்வது போல பிலிம் காட்டி விட்டு மீண்டும் மந்தத்தில் மீளாத் துயில் கொள்வது ஆகும்.

இத்தகைய நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை வழங்கி வரும் ஜீரோ வட்டி கடன் தொகையை தெற்காசிய சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீடாக போட்டு வைத்தால் நல்ல லாபம் அடிக்கலாம் என்ற அடிப்படையில்தான் கடந்த வாரங்களில் FII இந்தியா போன்ற நாடுகளில் குவிந்தது. இப்போது அதற்கும் ஆப்பு வைப்பது போல துபாய் கடன் விசவலை விரிந்துள்ளது.

துபாயின் பெருமைமிகு அரசு முதலீட்டு நிறுவனம் துபாய் உலகம்('துபாய் வேர்ல்ட'தாம்பா அப்படி மொழிபெயர்த்திருக்கேன்). இந்த நிறுவனம் வாங்கியுள்ள 60 பில்லியன் டாலர் கடனுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை மே மாதத்திற்குப் பிறகு வாங்கிக் கொள்ளுங்களேன், பீலீஸ் என்று கடன் கொடுத்தவர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மீண்டும் அத்தனை பேர் மண்டையிலும் சந்தேகப் பேய் உட்கார்ந்து கொண்டது. இன்னும் வீழ்ச்சி முடியவில்லை, எவனெவன் எங்கேங்கே எப்படியெப்படி மாட்டிக் கொண்டுள்ளான் என்று தெரியவில்லை, எனவே கையில் உள்ள பணத்தை எச்சரிக்கையா வெளிய விடு என்ற சந்தைச் சந்தேகம் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது. நிதி வறட்சி மீண்டும் தலை தூக்குகிறது.

வரலாறு காணாத அளவுக்கு, வரைமுறையின்றி ஊக்கத் தொகைகளை மத்திய வங்கிகள் சந்தையில் புகுத்திய பிறகும், வட்டி விகிதங்களை சகட்டு மேனிக்கு குறைத்த பிறகும், தொடர்ந்து திவாலான நிறுவனங்களை அரசுகள் தோள் கொடுத்து தாங்கி பிடித்த பிறகும், பல்வேறு சலுகைகள் கொடுத்து வாயில் ஊட்டி விடாத குறையாக போஷாக்கு செலுத்திய பிறகும், பட்ஜெட் பற்றாக்குறைகள் விண்ணை எட்டிய பிறகும் மீண்டும் முதலாளித்துவ கிழட்டு குடிகாரனின் மீளா போதை மயக்கத்தை தட்டி எழுப்ப இயலவில்லையே என்று முதலாளித்துவ நிறுவனங்களின் பொருளாதார நிபுனர்கள் புலம்புகிறார்கள்.

துபாய் நிகழ்வு என்பது பரந்துபட்ட சிக்கலின் ஒரு துளி என்று சொல்கிறார்கள் முதலாளித்துவ நிபுனர்கள்.

உண்மையில், இது முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பிரச்சினை, இது தீர்க்க முடியாத சுய முரன்பாட்டுச் சிக்கல் என்பதைத்தான் வேறு வார்த்தைகளின் மூலம் இப்படி ஒத்துக் கொள்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள்.

கிழடு தட்டிப் போன பிறகும், நிதி மூலதன போதை தலைக்கேற தறிகெட்டு ஓடி முடங்கி போய்க் கிடக்கிறது முதலாளித்துவ கட்டமைப்பு. இந்த கிழட்டு குடிகாரனுக்கு நிரந்தரச் சங்கு ஊதுவதன் மூலம் பரந்துபட்ட மக்களை பேரழிவிலிருந்து காக்கும் கடமை ஒன்று மட்டும்தான் நாம் இப்போது செய்ய வேண்டிய வேலையாக உள்ளது. ஏனேனில், நீண்ட நெடிய பொருளாதார மந்தங்கள் உலகப் போர்களையே உலகுக்கு பரிசாக அளித்துள்ளன.

இது மனிதாபிமானமுள்ளவர்களாக தங்களை அறிவித்துக் கொண்டுள்ளவர்களின் மனசாட்சிக்கு விடப்பட்டுள்ள சவால் ஆகும்.

அசுரன்


Thursday, November 26, 2009

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!!

வர்கள் வண்டிகளில் வந்து இறங்கினார்கள். துப்பாக்கிகளை இயக்கி சட சடவென சுட்டுத் தள்ளினார்கள். சிதறி ஓடிய மக்களில் 12 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

அவர்கள் படகுகளில் வந்தனர். துப்பாக்கிகளை இயக்கி சட சடவென சுட்டுத் தள்ளினார்கள். சிதறிய ஓடிய மக்கள் கொல்லப்பட்டனர்.

மேலே சொல்லப்பட்ட இரண்டு சம்பவங்களில் ஒன்று நடந்தது ஒரிஸ்ஸாவின் கலிங்கா நகர். ஒரிஸ்ஸாவின் இரும்பு கனிம வளம் நிறைந்த நிலங்களை போஸ்கோ என்ற பன்னாட்டு இரும்பு உருக்கு ஆலைக்கு கொடுப்பதை எதிர்த்துப் போராடிய கலிங்கா நகர் மக்கள் மீது காக்கி சீருடை அணிந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சுடு ஆகும்.

இரண்டாவது சம்பவம் நவம்பர் 26 மும்பை ரயில் நிலையத்தில் பல வண்ண ஆடைகள் அணிந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சுடு ஆகும்.

தற்போது, 11/26 இந்தியாவின் ஊடக-அரசியல் திருவிழாக்களில் ஒன்றாக மாறிவிட்டதை சில வாரங்களாகப் பார்க்கிறோம்.
நவம்பர் 26 ன் போது அந்த பக்கமாக குப்பை பெருக்கிக் கொண்டிருந்தவர் முதற்கொண்டு பேட்டியெடுத்து போட்டு அமளி கிளப்பிக் கொண்டிருந்தனர் ஆர்.எஸ்.எஸின் பினாமி தொலைக்காட்சியான NDTVயினர்.

'மக்கள் பாதுகாப்பாக இல்லை'
'மும்பை மக்கள் கோபத்தில் உள்ளனர்'

இப்படி மக்களுக்கே தெரியாதவற்றையெல்லாம் கண்டுபிடித்து சுய அரிப்பை தீர்த்துக் கொண்டிருந்தார்கள். நவ 26 அன்று, மும்பை ரயில் நிலையத்தில் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒரு சடங்கு போல காட்டி முகம் திருப்பிக் கொண்டன இந்த ஊடகங்கள். ஆனால், இதே நேரத்தில் தமது வர்க்கத்தினர் கொல்லப்பட்ட தாஜ் ஹோட்டலைத்தான் முழுவதும் தொலைக்காட்சியில் ஒலி ஒளி பரப்பினர். மக்களும் சரி, மும்பை ரயில் நிலையமும் சரி நவம்பர் 26க்கு அடுத்த நாட்களிலேயே சகஜ நிலைக்கு திரும்பி விட்டிருந்தனர் எனும் போது, இன்றைக்கு ஒரு வருடம் கழித்து அந்த உணர்வு என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள இயலும்.

ஆனால், இதே நேரத்தில் காக்கி உடை பயங்கரவாதிகளையும், அவர்களை ஏவிவிட்ட கதர், காவி, சிவப்பு ஆடை அரசியல்வாதி-பயங்கரவாதிகளையும், அவர்களை பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் எல்லை கடந்த பயங்கரவாத பன்னாட்டு கம்பனிகளையும் எதிர்த்து இன்று வரை கலிங்காநகர், நந்திகிராம், லால்கர் என மக்கள் போராடி வருகிறார்கள். அது குறித்து இந்த ஊடகங்கள் வாய் திறந்து பேசுவதில்லை.

பொய்யான உணர்வுகளை ஊதிப் பெருக்கி உண்மை என நிறுவுவதும், அன்றாட வழமையாகிப் போன ஒடுக்குமுறைகளை இல்லாதவொன்றாக சித்தரிக்க எண்ணி மறைப்பதும்தான் உலகமய காலகட்டத்தின் ஊடக தர்மமாகிப்(வியாபாரம், சுய அரசியல்) போனது.

நவம்பர் 26ன் நாய'கரா'க, பா. சிதம்பரத்தை நடுநாய'கமா'க நிறுத்தி(உட்கார) வைத்து சில மேட்டுக்குடி அறிவுஜீவிகள் 'இந்தியா அண்டர் அட்டாக்' என்ற பொய்யான வருவித்துக் கொண்ட உணர்வுடன் கேள்விகளை விளாசிக் கொண்டிருந்தனர் NDTVயில். அது பார்ப்பதற்கு மூல வியாதி வந்தவனின் முக்கிய அவஸ்தைகளை எனது மனத்திரையில் விரித்தது.

என்னவொரு பதைபதைப்பு, ஆக்ரோசம்? சல்வாஜூடம் என்ற கூலிப் படையின் மூலம் ஒரு மாநிலமே எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்காகி பல நூறு பேர்களின் உயிரையும், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வையும், இந்தியாவின் எதிர்காலத்தையும் கபளீகரம் செய்து வருவது குறித்து இந்த ஆவேசமும், ஆக்ரோசமும் இவர்களுக்கு வருவதில்லையே?

இதைத்தான், இந்தியாவின் இதயத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்ற தனது கட்டுரையிலும் அருந்ததிராய் எழுதியிருந்தார். (The Heart Of India Is Under Attack, By Arundhati Roy - 31 October, 2009, Guardian.co.uk.) இந்தியா அண்டர் அட்டாக் என்பதை விடுங்கள், இந்தியாவின் இதயமே அட்டாக் ஆகி உள்ளதே என்ன செய்யப் போகிறீர்கள் என்று எவனும் கேள்வி கேட்கவில்லை.

நவ 26 எனது உணர்ச்சிகளை முடக்கிப் போட்டதாக சொல்கிறார் தெண்டுல்கர். இன்றைய நிலவரப்படி இந்தியாவின் தலை சிறந்த தேச பக்தராக முன்னிறுத்தப்படுபவர் இவர்தான். ஆயினும் இவரால் மும்பை தாக்குதல்களுக்கு மட்டும்தான் இவ்வாறு முடங்கியிருக்க முடிந்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் - சட்டீஸ்கர், கர்நாடகா, மஹாராட்டிரா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, பீஹார் - பன்னாட்டு நிறுவனங்கள் கனிம வளங்களுக்காகவும், தமது கொழுத்த லாப வேட்டைக்காகவும் நடத்தி வரும் அரசு பயங்கரவாத தாக்குதல்கள் இவர்களை பாதிக்கவில்லை. பாதிக்கப் போவதுமில்லை.


நவம்பர் 26 தாக்குதலின் போது கூட தெளிவாக தாஜ் ஹோட்டலை கட்டியழுதவர்கள், இன்றுவரை அழுது கொண்டிருப்பவர்கள்தான் இவர்கள். அவர்கள் யார் என்பதில் அவர்கள் வெகு தெளிவாக உள்ளனர்.

அப்படியென்றால் நாம் யார்? எது தேச பக்தி? எது எல்லை தாண்டிய பயங்கரவாதம்? எனது இந்தியா எது? எந்த இந்தியா யாரால் தாக்கப்படுகிறது? இந்த கேள்விகளில் அடங்கியுள்ளது யார் நான் என்பதற்கான பதில்கள். விடை தெரியும் போது மிகப் பெரும் உள்நாட்டு அபாயமாக நீங்களே சித்தரிக்கப்படும் அபாயமும் நிகழலாம்.

அசுரன்

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)


மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 2)

Related Posts with Thumbnails