TerrorisminFocus

Saturday, May 16, 2009

இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்?

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பார்த்தபடியே முடிவடைந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் அனேகமாக தெளிவாக தெரிந்துவிட்டது. காங்கிரசு கூட்டணி பல இடங்களில் முன்னணி பெற்று உள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரசு ஓபன் கூட்டணி, தேமுதிக-காங்கிரசு பினாமி கூட்டணி வெற்றி பெற்றுள்ளன. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாகவே அடிதடி-அதிரடி-சரவெடி அழகிரி அண்ணே, லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். வீரத் தளபதி கந்துவட்டி மைனர் ஜே. கே. ரித்தீஷ் 60,000 வோட்டு வித்தியாசத்தில் வெற்றி. செலவழித்த தொகைக்கு ஏற்ப வோட்டு வித்தியாசம். ஈழப் பெருச்சாளி வைகோ மண்ணை கவ்வி விட்டார். பாமகவுக்கு கோமணத்துணி கூட மிஞ்சவில்லை.

தமிழகத்தில் நவரசங்களும் கலந்தோடுகிறது. குறிப்பாக, ஈழத்திற்கு பலி வாங்கும் வகையில் பாடம் கற்பிக்க தேர்தல் களத்தில் இறங்கி குருதி சிந்திய தோழர்களும், உணர்வாளர்களும் பேரதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ஈழத்து குருதியில் கை நனைத்து வோட்டுப் பொறுக்க களம் இறங்கிய சூத்திரதாரி தா.பாண்டியன் கட்சியும், இரட்டை இலையும், பிற போலித் தமிழ்த் தேசிய வியாதிகளும் வாயடைத்துப் போயுள்ளனர். மக்களுக்கு உணர்வு மங்கிவிட்டது, மக்கள் காசு வாங்கிக் கொண்டு வோட்டு போட்டு விட்டனர் என்று பல்வேறு புலம்பல்கள்.

ஆனால், இவையெல்லாவற்றையும் விட பேருண்மை ஒன்று உள்ளது. அது இந்த தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுத்துள்ள பாடம். யாருக்கு? தேர்தலின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்ய முடியும் என்று ஊரை ஏமாற்றி வந்தவர்கள், தானும் ஏமாந்து மக்களையும் ஏமாற்ற முயன்றவர்கள் இவர்களுக்குத்தான் பாடம் கற்பித்துள்ளனர் மக்கள். ஈழம், தொழில் மந்தம், பொருளாதார கொள்கையின் தோல்வி, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்வெட்டு இவற்றை மீறி காங்கிரசு போன தடவையை விட அதிக இடங்களில் வெற்றி பெறுள்ளது. எனில், இவை குறித்து மக்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தமா? இவையெல்லாம் மக்களின் ஜீவாதார பிரச்சினைகள் இல்லை என்று அர்த்தமா? இல்லை, மாறாக, தேர்தல் முடிவுகள் இந்த பிரச்சினைகளின் மீது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதுதான் அர்த்தம்.

எந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். ஈழத்து ரத்தத்திற்கு பதில் சொல்லும் தேர்தல் இது என்று தேர்தலில் போராடிய பெதிக தோழர்களே, உணர்வாளர்களே இதோ இதுதான் உங்களுக்கான பாடம். மக்களுக்கு இந்த தேர்தலின் மீது அப்படி எந்தவொரு மயக்கமும் இல்லை. இந்த தேர்தல் ஜனநாயகத்தின் மோசடி முகத்தை மக்கள் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களது பிரச்சினை எல்லாம் மாற்று அரசியல் ஒன்று வலுவாக, நம்பிக்கையூட்டும் வகையில் இல்லாததுதான்.

தோழர்களே, உண்மையான தீர்வை நோக்கித்தான் நமது பயணம் எனில் மக்கள் மத்தியில் மாற்று அரசியலுக்கான நம்பிக்கையை விதைப்போம். இல்லையேல் அதுவரை மக்கள் நமது சந்தர்ப்பவாத தேர்தல் நம்பிக்கைகளில் பகடை உருட்டவே செய்வார்கள். உணர்வு மங்கி போயுள்ளது மக்களுக்கல்ல தோழர்களே, நமக்குத்தான். விலை போனது மக்கள் அல்ல தோழர்களே, நாம்தான் சரியான அரசியல் மீது நம்பிக்கையின்றி விலை போய் விட்டோம். தமிழகத்தின் தலைவிதியை இப்படியெல்லாம் மாற்றிவிட முடியாது தோழர்களே. இதோ மக்கள் இந்த தேர்தலில் செவிட்டில் அறைந்தது போல நமக்கு இந்த உண்மையையே உணர்த்தியுள்ளனர்.

அசுரன்

தமிழ்சசி எழுதிய ஒரு கட்டுரையில் ப்ரோக்னோஸ்டிக்சேஜ் என்ற தோழர் இட்டுள்ள ஒரு பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தோழர் ப்ரோக்னோஸ்டிக்சேஜ்க்கு நன்றிகள்.


கோடீசுவர வேட்பாளர்கள்! கோவணத் துணியோடு மக்கள்!!

Thursday, May 14, 2009

கம்யுனிஸ்டுகளா இவர்கள்? கம்முனாட்டிகள், மலம் உருட்டும் வண்டுகள்!!!

கொஞ்ச காலம் முன்னாடி மதவாதம்தான் நாட்டின் பெரிய எதிரின்னு சொல்லிக் கொண்டு காங்கிரசுக்கு சிரத்தையாகக் கோமணம் கட்டிக் கொண்டிருந்தனர் CPM காம்ரேடுகள். காங்கிரசு கோமனம் குத்திய உள் குத்து வலி தாங்காமல் ஒரு கட்டத்தில் 'காங்கிரசு இந்தியாவை கூட்டிக் கொடுப்பதுதான்' நாட்டின் முதன்மை அபாயம்ன்னு சொல்லிக் கொண்டு வெளியே வந்தனர். ஆனால், இந்த காலகட்டம் முழுவதும் கேரளாவிலும், மே.வாவிலும் இவர்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூட்டிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் என்பது வேறு விசயம்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற புனிதப் ப(கு)சு சோம்நாத் சாட்டர்ஜி CPMலிருந்து வெளியேறினார். இன்னிலையில் தேர்தல் வந்தது.

உடனே கொஞ்சம் கொஞ்சமாக காம்ரேடுகளின் பஞ்ச் டயலாக்குகள் உருமாறத் துவங்கின. முதல் கட்டமாக மதச்சார்பற்ற அரசு அமைப்போம் என்ற முழக்கத்தை முன்னுக்குக் கொண்டு வந்தனர்.

அத்துடன் சேர்ந்து ஜெயலலிதா எனும் இந்துத்துவ பாசிஸ்டை மதச்சார்பற்ற ராணியாக உருவகப்படுத்தினார்கள். இதன் அடுத்த கட்டமாக, மதச் சார்பற்ற அரசு அமைக்க எதையும் செய்வோம் என்றார் கரத். அடுத்த கொஞ்ச நாளிலேயே காங்கிரசுடன் கூட்டணி குறித்து மே 16க்கு அப்புறம் முடிவு செய்வோம் என்றார்.

"காங்கிரசு ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல" என்று புத்ததேவு குத்துதேவாக மாறி ஒரு ஓரத்தில் பஞ்ச் ஒன்றை குத்தி வைத்தார். இவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் ரெண்டு செண்டர் குத்து குத்தி இடதுசாரிகளுடன் நாங்கள் குத்தாட்டம் போடத் தயார் என்றார்.

உடனே பாரளுமன்ற கோவனம் சோம்நாத் சாட்டர்ஜி தான் சாகும் போது ஒரு சாதாரண CPM தொண்டனாக சாக விரும்புவதாகக் கூறி செண்டிமெண்டு குத்து அடித்தார்.


இவையணைத்தும் தெளிவாக CPMன் காங்கிரசு நோக்கிய சவாரியை சுட்டிக்காட்டின.


இப்படி எல்லாம் கூடி வந்த வேளையில், சனியன் திடீரென்று யெச்சூரி நேற்று பின்வருமாறு கருத்துக் கூறினார்: "காங்கிரசு அரசுக்கு நாங்கள் ஆதரவு குத்தாட்டம் போட மாட்டோம்", "கரத் சொன்னது அவரது சொந்த கருத்து" என்றார் யெச்சு ஊறி.

இதை பார்க்கும் பொழுது ஏதோ CPM தனது கொள்கையில் விலகுவதும் பிறகு மீண்டும் சரியான பாதைக்கு வந்து விட்டதும் போன்று யாருக்காவது தோன்றினால் அவரை நினைத்து பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

எப்பொழுதுமே சந்தர்ப்பவாதத்தின் எல்லா நிலைகளையும் ஆதரித்து தனது கட்சி அணிகளை மாற்றி மாற்றி பேச விடும் மொள்ளமாறித்தனத்தை CPM வெகு காலமாக செய்து வருகிறது. கம்யுனிசம் குறித்து கரத் கதறினால், முதலாளித்துவம் குறித்து ஜோதிபாசு உளறுவார்.

வட கிழக்கில் பாஜகவுடன் CPM மாநிலத் தலைமை கள்ளத் தேர்தல்க் கூட்டு சேர்ந்தால், இந்திய தலைமையோ அந்த அணிகள் எமது நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதுடன் முடித்துக் கொள்வார்.

நந்திகிராம் குறித்து ஒருவர் பிளிறினால், மம்தா குறித்து ஒருவர் பிதற்றுவார். ஸ்டைரைக் தப்பு என்பார் புத்ததேவு, ஸ்ட்ரைக் எங்கள் மயிர் மூச்சு என்பார் கரத். அமெரிக்க பூட்ஸை மோந்து பார்க்க ஒருத்தர், நக்கி பார்க்க ஒருத்தர், அதை அம்பலப்படுத்த ஒருத்தர்.

முதலாளித்துவம் ஒழிகன்னு ஒரு காம்ரேடு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, இன்றைய பொருளாதாரச் சரிவிலிருந்து முதலாளித்துவத்தை காப்பாற்றும் ஐ.நா ஆலோசனை குழுவில் ஒரு காம்ரேடு பஜனை செய்து கொண்டிருப்பார்.

தாழ்த்தப்பட்டவருக்கு நெஞ்சு விடைக்க குரல் மட்டும் கொடுக்க ஒருவர், ஆதிக்க சாதிகளுடன் நெஞ்சாரத் தழுவி கூடிக் குலாவ பலர்.

இப்படி எல்லா கருத்துக்களையும் சொல்லி வைப்பதன் மூலம் எல்லா வோட்டுக்களையும் பொறுக்கலாம் என்ற மக்கள் ஜனநாயக செயல் தந்திரம்தான் CPMனுடையது.

இதுகள் காமெரெடுகள் அல்ல, கன்றாவிகள். இவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்ல கம்னாட்டிகள். மொத்தத்தில் இந்த அருவெறுக்கத்தக்க சமூக கிருமிகளின் அழிவில்தான் விடுதலைக்கான புதிய முழக்கங்கள் தமது புத்துணர்வை பேண முடியும். இல்லையேல், இந்த கம்முனாட்டிகள் கழிக்கும் மலத்தில் பிரண்டு எழுந்து மீள்வதிலேயே பல நேர்மையான அணிகளின் காலம் கடந்துவிடும்.


அசுரன்

Monday, May 04, 2009

பெரியார் சிலை உடைத்த திமுகவினர் - ங்கொய்யால இது திராவிட லுக்குப்பா!!!

சென்னையில் பெரியார் திகவினர் கனிசமான அளவு இருக்கும் இடங்களில் ஒன்று ராயப்பேட்டை. இந்த தேர்தலுக்குள் ராஜபக்சேவுக்கு சங்கு ஊத முடிகிறதோ இல்லையோ ஆனால் அம்மா ஆட்சியை தமிழகத்தில் மலரவிட்டு தமிழர்களுக்கு அந்த சங்கை ஊதியே தீருவோம் என்று பெதிக தோழர்கள் சூறாவளியாக வேலை செய்யும் இடங்களில் ஒன்று ராயப்பேட்டை. பெரியார் திகவினரின் இந்த நடவடிக்கைகளிலுள்ள அபத்தம், அறிவிழிந்த நிலை குறித்து அடுத்த பதிவில் பார்க்கும் முன்பாக, லக்கிலுக் போன்ற சுயமரியாதை சிங்கங்களின் கட்சியான திமுக ராயப்பேட்டையில் செய்துள்ள புரட்சி குறித்து எனது காதுகளுக்கு வந்தவற்றை அறிவார்ந்த வலையுலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ராயப்பேட்டை பகுதியில் ஒரு கோயிலுக்குப் பின்புறமாகவே பெரியதொரு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதனையொட்டியே பெரியார் படிப்பகமும் உள்ளது. கோயிலை ஒட்டியே 'கடவுளை நம்புபவன் அயோக்கியன்' முதலான கடவுள் மறுப்பு பெரியார் முழக்கங்கள் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. அதனை படித்துக் கொண்டே கோயிலை பக்தன் வலம் வரும் அவனது புதிய பகுத்தறிவோ அதனினும் சிறப்பு. இந்த ஒரு தெருவில் மட்டும் அருகருகே இரண்டு திமுக வாக்கு சேகரிப்பு சாவடிகளை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். இரண்டுக்கும் நடுவே பெதிகவினரின் படிப்பகம்.

இந்த பகுதியில் சமீபத்தில் அதிமுகவினரை வைத்து பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர் பெதிக தோழர்கள். இன்னிலையில்தான் அந்த சம்பவம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பாக திமுகவினர் அங்கிருந்த பெரியார் சிலையின் கையை உடைத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த பெதிகவின் சாலை மறியல் போராட்டத்தில் திட்டமிட்டு கல்லெறிந்து கலவரமாக உருமாற்றி, போலீசாரின் லத்தியால் பெதிக தோழர்களையும் பதம் பார்த்து சந்தோசமுற்றனர் உடன்பிறப்புக்கள்.

மக்களுக்காக கடந்த பல பத்து வருடங்களில் ஒரு மசிரு போராட்டம் கூட நடத்தியேயிராமலேயே சில பல எம்.பி., எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸு கட்சியும், தமது உள் கம்பேனி தகாராறுகளுக்காகவே பல போராட்டங்கள் நடத்தி மக்களின் இழவை கொட்டும் திமுகவும் இணைந்து நடத்தியுள்ள இந்த பெரியாரிச சிலை உடைப்பு வைபவம் சுயமரியாதையுள்ள கண்களைத் திறக்கும். நக்கிப் பிழைக்கும் லுக்குகளுக்கோ கண் திறப்புத் தேவையில்லை.

அதிகார மையத்தில் சமரசம் செய்து கொண்டே பார்ப்பனியத்தை புடுங்கிவிடுவோம் என்று கிளம்பியவர்கள் அனைவருக்கும் என்ன நிகழ்ந்ததோ அதுவே திமுகவுக்கும் நிகழ்ந்துவிட்டது. ஆனாலும், இன்னும் பெரியார் முகமூடி போட்டுக் கொண்டு பார்ப்பனிய இந்திய அரசு அதிகாரத்தை நக்கிப் பிழைத்து, சமரசம் செய்து விடுதலை பெற்று விடலாம் என்று உலாவுபவர்களின் எண்ணிக்கை மாத்திரம் குறைந்த பாடாய்க் காணோம்.

நேற்று பெரியார் சிலை உடைத்தனர் ஆர்.எஸ்.எஸ் சொறிநாய்கள். தட்டிக் கெட்ட புரட்சிகர அமைப்புகளை மண்டையிலேயே தட்டி ஒடுக்கினார் மஞ்சள் துண்டு தா(த்)தா. பெரியாரிசத்தின் ஹோல்சேல் உரிமையாளர்களான தலைவர்களோ நாகரிகமாக போராட வேண்டினர். பெரியாரிய தொண்டர்களும், புரட்சிகர அமைப்புகளும் மட்டுமே அன்று களத்தில் நின்றனர். இன்று பெரியாரியத்தின் வழிவந்த கட்சியே பெரியார் சிலை உடைத்துள்ளது. பெரியாரியத்தின் ஹோல்சேல் உரிமையாளர்களோ பாப்பாத்திக்கு பாத பூசை செய்கிறார்கள். மண்டையுடைந்ததோ மீண்டும் பெரியாரிய தொண்டர்களுக்குத்தான்.

இந்த போராட்டமும் கூட வெற்று வோட்டு அரசியல் சண்டையாகவே பெதிகவால் முன்னெடுக்கப்படுவது இன்னுமொரு அவலம். விமர்சனம்-சுயவிமர்சனமற்ற, மலட்டு பிழைப்புவாதம் இப்படித்தான் வரலாற்றில் நகைப்புகிடமாக முடியும்.

பெரியாரின் நோக்கங்களுக்கு நேர்மையாக இருப்பவர்கள், அந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல சரியான அரசியல் வழி எதுவென்று சீர்தூக்கி பார்த்து செயல்பட வேண்டிய நேரமிது.

அசுரன்

தொடர்புள்ள பதிவுகள்:

பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீணர்கள்!!!

பு.ஜ.மீதான பெரியார் தி.க.வின் விமர்சனம்: முரண்பாடுகளின் மூட்டை

விசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது!

பெரியார் சிலை - மானமிகு கலைஞரும், மான்புமிகு ஆசிரியரும்!!

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்

கொள்கையில் தடுமாறுகின்றோமா தோழர்களே!

Friday, May 01, 2009

பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீணர்கள்!!!

பெரியார் திக இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருகிறது. பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு திகவிலிருந்து வெளியேறி தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இப்பொழுது அதே பார்ப்பனியத்துக்கு பாத சேவை செய்கிறது. இவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்த்துக் களத்தில் உறுதியுடன் போராடி வரும் ம க இ க அமைப்பின் பார்ப்பனிய எதிர்ப்பை சந்தேகிப்பதாக காழ்ப்புணர்ச்சியுடன் எழுதி வருகிறார்கள். பெரியார் திக அமைப்பு ஆரம்பித்த பொழுதே அவ்வமைப்பின் அரசியலை மார்க்சிய-லெனினிய ஒளியில் பரிசீலனை செய்து புதிய ஜனநாயகம் (1996) இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பதை பெரியார் திக தற்போது நிரூபித்து வருகிறது. காலப் பொருத்தம் கருதி அந்தக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்கிறோம்.

அசுரன்

________________________________________________________________

பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீர(ண)ர்கள்
(புதியஜனநாயகம் செப்டம்பர் 1996)

கடந்த தேர்தலில் யாரை ஆதரிப்பது என வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்தில் விவாதம் எழுந்தது. இது பற்றி முடிவு செய்ய தி.க. மத்திய நிர்வாகக் குழு 13.04.96-ல் திருச்சியில் கூட்டப்பட்டது. அதற்கு முன்பாக தென்சென்னை இளைஞரணித் தலைவர் மு.பாலகுரு அவர்கள் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பொதுச் செயலர் கி.வீரமணிக்கு ‘பார்ப்பன ‘ஜெ’க்கு ஓட்டுப் போடக் கூடாது என அறிவிக்கும்படி’ காரணங்களைத் தொகுத்து 6.4.96-ல் தொலைவரி (ஃபேக்ஸ்) மூலம் தகவல் தந்துள்ளார்.

தி.க. மத்திய நிர்வாகக் குழுவில் அதிமுகவை ஆதரிக்கக் கூடாது எனப் பெரும்பான்மை கருத்து வந்தும், திராவிடர் இயக்கங்களான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., என்ற 3 கட்சிகளில் எதற்கும் ஓட்டுப் போடலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதைக் கண்டித்து பாலகுரு மீண்டும் வீரமணிக்கு 18.4.96-ல் தொலைவரி மூலம் அறிக்கை அனுப்புகிறார். 23.4.96-ல் தென்சென்னை தி.க. இளைஞரணி கூட்டத்தை பெரியார் திடலில் கூட்டியுள்ளார். தி.க. துணைப் பொதுச் செயலர் சாமிதுரை தலைமையிலும், தலைமை நிலைய செயலர்கள் கலி பூங்குன்றன், ஆனூர் ஜெகதீசன் முன்னிலையிலும் கூடிய இக்கூட்டத்தில் கொள்கை விளக்கம் கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாலகுரு கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு விளக்கம் கேட்டு 26.4.96-ல் பாலகுரு தலைமை நிலையச் செயலர்களுக்கு கடிதம் எழுதினார்.

திரும்ப 28.4.96-ல் தென்சென்னை தி.க.இளைஞரணி செயலாளர் து.கலைச்செல்வன் பெரியார்திடலில் இளைஞரணி கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் தி.க. மாநிலச் செயலாளர் ஒரத்தநாடு குணசேகரனின் செயலைக் கண்டித்தும், பாலகுருவை நீக்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஒரத்தநாடு குணசேகரனிடம் அமெரிக்காவிலிருந்த வீரமணி நேரடியாகத் தொடர்புகொண்டு அதிமுகவிற்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது தனது முடிவு எனக் கூறியதாகவும், அதைத் தமிழகம் முழுவதும் உள்ள தி.க. தோழர்களிடம் கூறும்படி ஆணையிட்டதாகவும் 25.4.96-ல் சென்னைக்குத் தகவல் கிடைக்கவே அதைக் கண்டித்து தீர்மானம் போட்டனர். வந்திருந்த 160 உறுப்பினர்களும் இவற்றை ஆதரித்து கையெழுத்திட்டிருந்தனர்.

அதன்பின் சுமார் 200 இளைஞரணி உறுப்பினர்கள் தி.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்பின் விடுதலை இராசேந்திரன் உட்பட பலரும் தி.க.விலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் வீரமணி தலைமையின் கீழ் அணிந்திருந்த கருப்புச்சட்டை பார்ப்பன மயமாகிவிட்டது என அறிவித்து, அதைக் கழற்றி விட்டு தந்தை பெரியாரின் இலட்சிய கருஞ்சட்டை அணியும் போராட்டம் ஒன்றை 25.6.96-ல் சென்னை அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலை முன்பு நடத்தினர்.

இதுவரை தி.க.விலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட பலரும் கொள்கை ரீதியாகப் போராடாததாகவும், தாங்கள் மட்டுமே பெரியாரின் கொள்கையை நிலைநாட்டப் போராடி அதனால் சந்தர்ப்பவாத, பிழைப்புவாத வீரமணியால் வெளியேற்றப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இவர்கள், தலைமை நிலையச் செயலராக இருந்த ஆனூர் ஜெகதீசனை தங்கள் பக்கம் வென்றெடுத்துள்ளனர். இவரைத் தலைவராகக் கொண்டு 30.7.96-ல் ‘பெரியார் திராவிடர் கழகம்’ என தனியே அமைப்பு கட்டி தொடக்க விழா நடத்தியுள்ளனர்.

சாராம்சமாக இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் கீழ்க்கண்டவைதான்:

1. கடந்த 5 ஆண்டுகளில் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை படிப்படியாக மழுங்கடிக்கப்பட்டே வந்து, தேர்தலுக்கு முன்பு அது பகிரங்கமாக்கப்பட்டு விட்டது. பார்ப்பன ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மீண்டும் தமிழகத்தில் உருவாவதற்கு ஓட்டளிக்கலாம் என்று தி.க. மத்தியக் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி, கொள்கை துரோகத்தை அதிகாரப் பூர்வமாகப் பிரகடனப்படுத்தி விட்டது.
2. பெரியார் கொள்கைக்கு எதிரான பார்ப்பனிய போக்குகள்-இயக்கத் தலைமையில் படிப்படியாக மேலோங்கி வளர்ந்தது. பெரியார் நூல்களை வெளியிடுவதும் நின்று போய், பெரியார் நடத்திய இதழ்கள் பாதுகாக்கப்படாமல், அழியும் நிலை உருவாகிவிட்டது. இலட்சியத்துக்கான இயக்கம், தனிமனிதருக்கான கட்சியாக மாறும் போக்குகள் அதிகரித்துக் கொண்டே போய் கொள்கைகளும் அணுகுமுறைகளும், தடுமாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டே வந்தன. கடைசியில் இலட்சியத்துக்கு எதிரான போக்குகளே தலை தூக்கி விட்டன.
3. கல்வி நிறுவனங்கள், வங்கி, சீட்டுக் கம்பெனி என பல நிறுவனங்களைத் தொடங்கி, வீரமணி ஒரு நல்ல வியாபாரியாகிவிட்டார்.
இவை ஏதோ புதியது, கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவானது என்பதைப் போன்று கூறுகின்றனர். இந்தப் போக்குகள் தி.க.வில் உள்ளன என்பதைப் பற்றி எமது புதிய ஜனநாயகம் இதழ்களிலும், அதற்கு முன்பே எமது தோழமை இதழான புதிய கலாச்சாரத்தில் 80-ம் ஆண்டுகளிலும் விமர்சனங்களாக முன் வைத்தமைதான்.

அப்போதெல்லாம் இந்த நபர்கள் நம்மை வெறித்தனமாக எதிர்த்து ‘பார்ப்பனத் தலைமை’ என மூச்சுக்கு மூச்சு முத்திரை குத்தினர். தனது குறைகள், பலவீனங்களைச் சுட்டிக் காட்டுபவர்கள் மீது பார்ப்பன முத்திரை குத்துவது அல்லது இனத் துரோகி என பட்டங்கட்டி, பிரச்சினையிலிருந்து நழுவிக் கொள்வது என்ற இந்தப் போக்குகள் பெரியார் காலம் தொட்டே தி.க.வில் நடைமுறையாக உள்ளவைதான்.

வீரமணி கும்பல் 5 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுக் கொண்டு பார்ப்பன ‘ஜெ’க்கு பாதபூஜை செய்ய ஆரம்பித்தது. மக்களே காறித்துப்பிய அரசியல் கழிசடை பார்ப்பன ‘ஜெ’க்கு ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார், வீரமணி. ‘ஜெயலலிதா ஆட்சிக்கு ஆபத்து வந்தால் தற்கொலைப் படையாக மாறுவோம்’ என வீரமுழக்கமிட்டார். பெரியார் விருது வழங்க ஆலோசனை தந்து, முதல் விருதை தானே பெற்று அகமகிழ்ந்தார். அந்தப் புகழ் மயக்கத்தில் ‘வாழ்நாள் முழுதும் துரோகம் செய்யமாட்டேன்’ என உறுதிகொடுத்தார்.

அப்போதெல்லாம் இந்த பெரியார் தி.க.வினர் இந்த இழிநிலைகளை எதிர்த்துப் போராடவில்லை. இப்போதும் இச்செயல்களைக் கண்டிக்கவில்லை.மாறாக சரியானவை என்றே அறிக்கைகளில் கூறுகின்றனர். ‘வாழ்நாள் முழுதும் துரோகம் செய்யமாட்டேன்’ என்று கூறியதை மட்டுமே சுட்டிக் காட்டுகிறார்கள். இதன் அர்த்தம் என்ன? ஆட்சியிலிருக்கும் வரை பாதபூஜை செய்வது சரி என்பதுதானே? இல்லை என்றால் இவ்வளவு மோசமான சந்தர்ப்பவாதத்தை சகித்துக் கொண்டு கழகத்திற்குள் இத்தனை நாட்களும் பிழைப்பு நடத்தியிருப்பார்களா?

இதற்கு ஒரு சப்பைக் கட்டாக, ‘இது ஒரு அணுகுமுறைதான், கொள்கை அல்ல’ என்று தலைமை விளக்கியதாம். தனியே பயிற்சி வகுப்புகள் நடத்தியதாம். இவர்களும் ஏற்றுக் கொண்டார்களாம். பார்ப்பன ஜெ தலைமையிலான ஆட்சியை சமுதாய நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் இவர்களுக்கு இன்றைக்கும் முழு உடன்பாடு இருக்கிறது என்று பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆனால் தேர்தலில் பார்ப்பன ஜெயாவே முதலமைச்சராக வரவேண்டும் என தி.க. அதிகாரப் பூர்வமாக முடிவெடுத்தது மட்டுமே கொள்கைக்கு எதிரானதாம்.

எப்படி இருக்கிறது பாருங்கள்? “பார்ப்பனராகப் பிறந்த அனைவருமே நம்பிக்கைத் துரோகம் செய்து விடுவார்கள். அடுத்துக் கெடுக்கும் நரித்தனமும்சூழ்ச்சியும் அவர்களது ரத்தத்திலேயே ஊறியவை. இதற்கு விதிவிலக்கே கிடையாது” என்று கூறிக்கொண்டே, அந்தப் பார்ப்பன ஜெ. ஆட்சியை சமுதாய நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வார்களாம். இது எப்படி என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

“பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி” என்று பெரியார் கூறியுள்ளார். அப்படிப்பட்ட கொடூரமானவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்களையே சமுதாய நலனுக்கும் பயன்படுத்துவார்களாம்! எவ்வளவு சுயமுரண்பாடு. கேட்டால் இது அணுகுமுறை, கொள்கையல்ல என சித்தாந்த விளக்கம் வேறு.

பகுத்தறிவாளர்களை விடுங்கள். ஒரு சராசரி மனிதர் என்ன எதிர்பார்ப்பார்? மனித சமூகத்திற்கே கொடிய நச்சு போன்ற பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்கள் (நமக்கு இதிலே எவ்விதக் கருத்து வேறுபாடுமில்லை) அப்படிப்பட்ட பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர் ஆட்சிக்கு வந்தால் அவர்களை ஆட்சியிலிருந்து விரட்டப் போராடுவார்கள் என்றுதானே எதிர்பார்ப்பார்.

பார்ப்பன சங்கம் ‘நம்மவா ஆட்சி’ என அகமகிழ்ந்த ‘ஜெ’ ஆட்சியை, சங்கராச்சாரிகள் ஆதரிக்கும் ‘ஜெ’ ஆட்சியை வீரமணி கும்பல் ஆதரித்து பாதபூஜை செய்தது.

மாறாக, புதிய ஜனநாயகமும், ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் பார்ப்பன-பாசிச ஜெ ஆட்சியின் மக்கள் விரோதப் போக்குகளை எதிர்த்து சமரசமின்றிப் போராடின. எண்ணற்ற வழக்குகள், சிறைக் கொட்டடிக் கொடுமைகள், உச்சகட்டமாக அத்தோழர்கள் மீது தடாவும், தேசியப் பாதுகாப்புச்சட்டமும் பாய்ந்தன.

ஆனால் இந்த சமரசமற்ற போராட்டத்தை இழிவுபடுத்துவது போல, “புதிய ஜனநாயகத் தலைமையிலுள்ளவர்கள் பார்ப்பனர்கள். இதுதான் மிக அபாயகரமானது” என தமது ‘விடுதலை’யில் பொய்களையும்,அவதூறுகளையும் எழுதியது, பிழைப்புவாத வீரமணி கும்பல். பார்ப்பனர்களைப் போன்றே ம.க.இ.க.வின் கருவறை நுழைவுப் போராட்டத்தை வன்முறைப் போராட்டம் என எதிர்த்தது. அவற்றுக்கெல்லாம் துணை நின்று நம் மீது அவதூறுச் சேற்றை வாரியிறைத்தவர்கள்தான் இந்த விடுதலை ராசேந்திரன் உட்பட பெரியார் தி.க.வினர் அனைவருமே.

இந்த அவதூறுகளுக்குப் பதிலாக கடந்த 1994 மார்ச் 15 இதழ் முதல் 1994 அக்டோபர் 1 இதழ் முடிய பு.ஜ.வின் எட்டு இதழ்களில் 31 பக்கங்களில் வீரமணியின் துரோகங்களையும், சந்தர்ப்பவாதம்-பிழைப்புவாதங்களையும் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி எழுதினோம். “வீரமணி இன்று செய்துவரும் துரோகங்களுக்கு அடிப்படை ‘பெரியாரிய’த்திலும் அதை உருவாக்கிய பெரியாரிடமுமே இருந்திருக்கிறது. பெரியாரிடத்தில் இருந்த “குறைபாடு”களை அங்கீகரித்து, நிராகரிக்காத எவரும் வீரமணி கும்பலின் துரோகத்தனங்களை முற்றாக அம்பலப்படுத்தவோ, முறியடிக்கவோ முடியாது; அப்படிச் செய்யாதவர் எவரும் தாமும் துரோகத்தனத்துக்குப் பலியாவது தவிர்க்க முடியாதது. அப்படிச் செய்வது “பெரியாரிய”த்துக்கும் பெரியாருக்கும் எதிரானதும் அல்ல” என்று எழுதினோம்.

“கொள்கையில் தடம் புரளாதவர்” என்று கூறப்படும் பெரியார், ஆட்சியில் இருப்பவர்களை ஆதரிப்பதற்காக எதையும் செய்யக் கூடியவராக இருந்தார். தனக்கு உடன்பாடற்றவைகளை எல்லாம் பார்ப்பன முத்திரை குத்துபவராக இருந்தார் என்பதற்கு இரண்டு சான்றுகளைப் பாருங்கள்” என பு.ஜ.வில் எழுதி ஆதாரங்களைக் குறிப்பிட்டிருந்தோம்.

1. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
2. கருணாநிதி ஆட்சியில் குடமுருட்டி பாலத்தில் மீன்பிடிக்க வைத்த குண்டு தன்னைக் கொல்ல நக்சல்பாரிகள் வைத்தது என கருணாநிதி புளுகினார். அதை அப்படியே ஏற்று நக்சல்பாரி புரட்சியாளர்களை பார்ப்பன அமைப்புகளோடு சேர்த்து முத்திரை குத்தி அவதூறு செய்தார் பெரியார்.
இதே வழியில்தான் தனது ‘பார்ப்பன ஜெ’ ஆதரவு, அடிவருடி வேலைகளை சுட்டிக் காட்டி விமர்சிக்கும் புதிய ஜனநாயகத் தலைமையை பார்ப்பனத் தலைமை என முத்திரை குத்தி பொய்களை எழுதி அவதூறு செய்தனர் தி.க.வினர். உடனிருந்தனர் பெரியார் தி.க.விலுள்ளவர்கள்.

வீரமணி கும்பலுடன், அதிமுகவை ஆதரிக்கக் கூடாது என தென்சென்னை இளைஞரணி தி.க. போராடியபோது, கழகப் பொருளாளர் குப்புசாமியும், துணைப் பொதுச் செயலாளர் சாமிதுரையும்’பெரியாரே பார்ப்பனர்களை, பார்ப்பனத் தலைமையை ஆதரித்தார்’ என ஆதாரங்களை முன்வைத்தனராம். அது பொய்ப் பிரச்சாரம் என பெரியார் தி.க.வினர் எழுதுகின்றனர்.

ஆனால் இதே வீரமணி கும்பலும் விடுதலை இராசேந்திரனும் பு.ஜ.வில் பெரியார் பார்ப்பனர்களை ஆதரித்தார் என வரலாற்று உண்மைகளை ஆதாரத்துடன் முன்வைத்தபோது , நம் மீது ஆத்திரத்துடன் பாய்ந்து அவதூறு செய்தனர். ஆனால் இன்றைக்கு வீரமணி கும்பல் தனது ‘பார்ப்பன ஜெ’ ஆதரவுக்காக நாம் முன்வைத்த வாதங்களை வைத்து, தன்னை நியாயப்படுத்தி உள்ளது.

இந்த உண்மைகளை தி.க.வே முன்வைத்தமைக்கு வேண்டுமானால் நாம் இந்த பெரியார் தி.க.வினருக்கு நன்றி கூறலாம். ஆனால் பெரியார் தி.க.வினர் ‘பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போன’தாக இந்த விசயத்திற்கு ஆத்திரப்பட்டால் தவறு.

நடந்த வரலாற்று உண்மைகள் பொய்யாகி விடுமா? அல்லது அவற்றை இருட்டடிப்பு செய்து பெரியார் எவ்வித விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர் எனப் புனிதப்படுத்தி விடமுடியுமா? மாறாக யாராக இருந்தாலும் அவர்களிடமுள்ள சரி,தவறுகளைப் பகுத்தாராய்ந்து, தவறுகளை நிராகரித்து, சரியானவற்றை உயர்த்திப் பிடித்து அவற்றை நடைமுறைப்படுத்தப் போராட வேண்டும். இதுதான் சரியான அணுகுமுறையாகும்.

அதேநேரம் எதிரிகள் கூறும் அவதூறுகளை நாம் உண்மை என எடுத்துக் கொண்டு வாதப் பிரதிவாதங்கள் நடத்திக் கொண்டிருக்க முடியாது.

“பெரியார் அடிக்கடி ஒன்றைக்கூறுவார். “நான் ஈ.வெ.ராமசாமி சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் எதையும் ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை. உங்கள் சொந்த புத்தியைக் கொண்டு நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்கள் சொந்த புத்திக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே எது ஒன்றையும் ஒப்புக் கொள்ளுங்கள்” என்பார் பெரியார். காரல் மார்க்சிடம் அந்தப் பண்பு இருந்தது. “எல்லாவற்றையும் சந்தேகியுங்கள்; விமர்சனப் பார்வையோடு பாருங்கள்” என்றார்” (புஜ 1 அக். ’94 இதழ் – பக் 23)

ஆனால் இன்றைக்கோ இந்த ‘பகுத்தறிவு சிங்கங்கள்’ நாம் விமர்சனம் வைக்கும்போது பாய்ந்து குதறி பார்ப்பனத் தலைமை என முத்திரை குத்துவதும், அதே நேரம் நாம் விமர்சனமாக முன்வைத்தவைகளையே தமது சந்தர்ப்பவாத, பிழைப்புவாத நடவடிக்கைகளுக்கு எடுத்து முன்வைப்பதுமாக செயல்பட்டு வருகின்றனர்.

கொள்கையிலிருந்து விலகுவதாகப் பிரிந்து தனியே பெரியார் திராவிடர் கழகம் கண்டுள்ளவர்கள் இந்த சந்தர்ப்பவாத, பிழைப்புவாத வீரமணி கும்பலிடமிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதாக இல்லை.

1. கடந்த ஐந்து ஆண்டுகாலமாக ‘பார்ப்பன ஜெ’க்கு பாத பூஜை செய்ததை எந்தக் கட்டத்திலும் எதிர்க்கவில்லை. ‘பார்ப்பன ஜெ. முதல்வரான பிறகு, அந்த ஆட்சியை சமுதாய நலனுக்கு (தமது பிழைப்புவாதத்திற்கு) பயன்படுத்திக் கொள்வதில் இப்போதும் முழு உடன்பாடு உண்டு” என்றுதான் இன்றைக்கும் ‘கொள்கை’ முழக்கமிட்டுள்ளனர்.
2. பெரியாரிடமுள்ள குறை-நிறைகளைப் பரிசீலித்து குறைகளை விமர்சித்து நிராகரித்து நிறைகளை ஏற்றுக் கொள்ளும் அணுகுமுறை இவர்களிடமும் இல்லை என்பதையே தமது வெளியீட்டில் வெளிப்படுத்துகின்றனர். அதாவது பெரியார் அவரே முன்வைத்த பார்ப்பன எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு எதிராக பார்ப்பன ஆதரவு நிலைப்பாடு எடுத்த வரலாற்று உண்மைகளை கண்மூடித்தனமாக மறுக்கின்றனர். இது தற்போது வீரமணி எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு எடுத்துச் செல்லவே உதவும்.
3. எதிர்க்கருத்து வரும்போது, பார்ப்பன முத்திரை குத்தி திசை திருப்புவது, அல்லது விமர்சனத்திலுள்ள விசயத்திலிருந்து நழுவிச் செல்வது என்ற கலையில் தேர்ந்த விடுதலை ராசேந்திரன் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
4. அ.இ.அ.தி.மு.க. நிச்சயமாகத் தோற்கும், திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நிலையில் ஆட்சியமைக்கப் போகும் கட்சியை ஆதரிக்காமல், தோற்கும் கட்சியை ஆதரிக்கும் வீரமணி என்றுதான் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகக் கூறியுள்ளனர். மாறாக தப்பித் தவறி ‘ஜெ’ வெற்றி பெற்றிருந்தால் இந்தப் ‘பெரியார் தி.க.’ தோன்றியே இருக்காது என்பதுதான் உண்மை.

ஏனெனில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர்தான் கழகம் உருவாக்குவது என முடிவெடுத்துள்ளனர்.

தமிழினத்திற்கும், தமிழகத்திற்கும் துரோகங்கள் செய்த ‘பார்ப்பன ஜெ.’ ஆட்சிக்கு பாதபூஜை செய்வதற்கு துணை நின்ற இவர்கள் இன்றைக்கும் கூட அதற்கு வருத்தம் தெரிவிக்காததோடு, அது சரி என்று கூறுவதிலிருந்தே இவர்களின் சந்தர்ப்பவாதப் பிழைப்புவாதப் போக்கை நாம் இனம் காண முடியும்.

சோமு
(புதியஜனநாயகம் செப்டம்பர் 1996)

Related Posts with Thumbnails