TerrorisminFocus

Wednesday, August 13, 2008

பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது - அமர்நாத் யாத்திரை

மர்நாத் பிரச்சினையை வைத்து பார்ப்பனிய மதவெறி பிசினிஸ் செய்ய முடிவு செய்த பார்ப்பனிய பயங்கரவாதிகளுக்கு ஏமாற்றத்தை தரும் வகையில் இருந்தது அமர்நாத் யாத்தீரை சுமுகமாக நடந்தேற வகை செய்த காஸ்மீர் முஸ்லீம்களின் நடவடிக்கை.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சில கேள்விகள் எழுகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் என்று காஸ்மீரைச் சேர்ந்த காஸ்மீர் சுயநிர்ணய உரிமைக்காக போராடுபவர்களையும் சேர்த்தே குறிப்பிடுகின்றன RSS உள்ளிட்ட பார்ப்பன மத வெறி பயங்கரவாத அமைப்புகள். ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்தில் நக்சல்பாரிகள் போராடுவதையே ஏதோ நாடு விட்டு நாடு ஊடுருவல் செய்தது போல பேசுவார்கள் இந்த மத வெறி பயங்கரவாதிகள். ஆனால் காஸ்மீரைச் சேராத, உ பியைச் சேர்ந்த தினேஸ் பார்தி போன்ற சாமியார் பயங்கரவாதிகள் ஜம்முவில் இருந்து கொண்டு வெறி கிளப்பும் பிரச்சாரம் செய்து வன்முறையை தூண்டி வருவதை இவர்கள் என்ன பெயரிட்டு அழைப்பார்கள் என்று தெரியவில்லை.

இவர்கள் அகராதியில் எல்லாவற்றுக்கும் இரட்டை அர்த்தம் இருப்பது போல மேலே குறிப்பிட்டவற்றுக்கும் கூட இரட்டை அர்த்தம் இருக்கும்.

பார்ப்பன மத வெறி கும்பல் வெளிப்படையாகவே மத வெறி கிளப்பி போராடி வருவதை வெறுமே ஏதோ உரிமைக்கான போராட்டமாக சித்தரித்த ஊடகங்கள், காஸ்மீரிகளின் தேசிய இன உரிமை அடிப்படையிலான எதிர்ப்பு போராட்டத்தை பிரிவினைவாதமாகவும்/மத வெறியாகவும் சித்தரித்தனர். 6 முஸ்லீம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிற்பாடும் அமர்நாத் யாத்திரையை சுமூகமாக நடந்தேற வகை செய்த காஸ்மீரிகளோ மிகத் தெளிவாகவே இது மதவெறி போரட்டமல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜம்முவோ அல்லது காஸ்மீரோ, சட்ட ஒழுங்க மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது காஸ்மீர் அரசு.

ஆனால் சில நூறு பேர் போராடுகிற பார்ப்பன மத வெறி கும்பலை ஒடுக்க ராணுவத்தால் முடியவில்லை என்பது விந்தையாக இருக்கிறது.

இவர்கள் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது குறித்த மிரட்டலை எப்போது விடுகிறார்கள்? பார்ப்பன மத வெறி கும்பலின் பொருளாதார முற்றுகையை எதிர்த்து காஸ்மீர் பழத் தோட்டக்காரர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் முசாபரபாத் சலோ என்றூ போராட தொடங்கிய உடனே பேசுகிறார்கள்.

முசாபரபாத் சலோ அறிவிக்கப்பட்டவுடன் அதன் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்படுகின்றனர். போராட்டம் அதனை மீறி லட்சக்கணக்கானவர்கள் அணி திரள நடக்கிறது.

ஆனால், காஸ்மீர் மீது பொருளாதார முற்றுகையை நடத்தி வரும் தலைவர்கள் யாரும், வேற்று மாநிலத்தைச் சேர்ந்த வெறி கிளப்பும் பிரச்சாரம் செய்து வரும் தினேஸ் பார்த்தி போன்ற சாமியார்கள் உள்ளிட்டு கைது செய்யப்படவில்லை. ஒரு சில முறை அடையாள கைது செய்யப்பட்டு உடனே விடுவிக்கப்படுகிறார்கள். சட்ட ஒழுங்கு இப்படித்தான் பாதுக்காக்கப்படுகிறது. பிள்ளை இப்படித்தான் கிள்ளி விடப்படுகிறது.

பொருளாதார முற்றுகை செய்து வரும் பார்ப்பன பயங்கரவாதிகளை ஒடுக்க துப்பில்லாத அரசு, பழ வியாபாரிகளிடம் பின்வருமாறு பேசுகிறது,

"ஆப்பிள் கொண்டு செல்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படுமாம்(இதனையும் அரசு இன்று வரை செய்யவில்லை) அல்லது பழங்களை ராணுவம்/அரசு வாங்கிக் கொள்ளுமாம் இதனை மீறி நஸ்டமானது நிரூபிக்கப்பட்டால் இழப்பீடு வழங்குமாம்"

இதுதான் தொட்டிலை ஆட்டுவது என்பது. சில நூறு பார்ப்பன மத வெறி கும்பலை ஒடுக்கி பொருளாதார முற்றுகையை உடைக்க விருபாதவர்கள், அதனை ஏற்றுக் கொள்ளச் சொல்லி காஸ்மீர் வியாபாரிகளை மிரட்டுகிறார்கள்.

விசயம் சுலபம்,

காஸ்மீர் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக சேர்ந்திருப்பதாக காட்டப்படுவது என்பதே பல்வேறு சர்வதேச, உள்நாட்டு நிலைமைகளினால்தான் சாத்தியமாகி உள்ளது. இதுவே சட்டப்பூர்வமானது அல்ல. எனவேதான் காஸ்மீருக்கு மற்ற மாநிலங்கள் போல அல்லாமல் சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று காஸ்மீரில் நிலம் வேளி ஆட்களால் வாங்கப் படமுடியாது என்ற சட்டம்.

காஸ்மீரின் இந்த சிறப்பு அந்தஸ்த்தை சந்தர்ப்பவாதமாக ஒழிப்பது என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் நோக்கம். அதற்க்கு இந்த அமர்நாத் பிரச்சினை வழி வகுக்கிறது என்பதால்தான் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் வேலையை அரசும், ஆளும் பார்ப்பனிய கும்பலும் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்கள் திரள் வழி பாதை ஒன்று இருக்கும் அதிகாரத்துவமான சந்தர்ப்பவாத பாதை ஒன்று இருக்கும். சந்தர்ப்பவாத பாதையையே ஆளும் கும்பல் எப்பொழுதும் செய்து வருகிறது. சந்தர்ப்பவாதமோ எப்பொழுதுமே திருப்பி ஆப்படிப்பதாகவே வரலாற்றில் அனுபவங்கள் உள்ளன. காஸ்மீரின் பழைய வரலாறே இதற்க்கு சான்று. காஸ்மீரின் அன்றைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் பாகிஸ்தான் எதிர்ப்பு அம்சத்தை நேரு சந்தர்ப்பவாதமாக பயன்படுத்திக் கொண்டார். இந்திராவோ தனது பாசிச நடவடிக்கையின் மூலம் மேலும் காஸ்மீரை அன்னியமாக்கினார். இதோ இன்று வரை இந்திய ஆளும் கும்பலின் அதிகாரத்துவ சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் இன்னும் இன்னும் பிரச்சினைகளை வீரியமாக்கி வருகின்றது.

அமர்நாத் ஒரு பிரச்சினையாக உருவானது என்பதும் இன்று நேற்று நடந்தது அல்ல. திட்டமிட்டே இந்த யாத்திரையை பார்ப்பனிய பயங்கரவாதிகள் தமக்கான அரசியல் தளமாக வளர்த்தெடுத்துள்ளனர். ஆரம்ப காலங்களில் முஸ்லீம்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்த யாத்திரையை பிறகு இதற்கென்றே ஒரு இந்து அமைப்பை ஏற்படுத்தி பார்ப்பன மயப்படுத்தினர். குறிப்பாக ஒரு இந்துவே இந்த அமைப்பிற்க்கு தலைவராக இருக்க வேண்டும் என்றும், அவர் ஆளுநராகவும் இருக்க வேண்டும் என்றும் வகை செய்ததன் மூலம் இந்த யாத்திரையின் மதச்சார்பின்மையை ஒழித்துக் கட்டினர் ஆளும் கும்பல். ஒரு சாதாரண யாத்திரையை தமது மத வெறி பிரச்சாரத்திற்க்காகவும், அகண்ட பாரத திட்டத்திற்க்காகவும் வலுவே ஊதிப் பெருக்கி பூதமாக்கியுள்ளனர் பார்ப்பன மதவெறி கும்பல்.

இப்போழுது நடைபெறும் காஸ்மீரிகளின் எதிர்ப்புகூட இந்திய அரசின் மீது நம்பிக்கையின்றி இருக்கும் காஸ்மீரிகளை இன்னும் நம்பிக்கையிழக்கச் செய்யும் வகையில் அதன் சிறப்பு சலுகையின் மீது செய்யப்பட்டுள்ள தாக்குதலுக்கான எதிர்வினையாகவே செய்யப்படுகிறது.

நம்பிக்கையின்மையை/பயத்தை விதை, அதனால் விளையும் எதிர்வினையை வைத்து அவதூறு பிரச்சாரம் செய், பிரச்சாரத்தின் மூலம் பெரும்பான்மையை திரட்டு, சிறுபான்மை ஆளும் கும்பலின் அதிகாரத்தை தக்கவை, மீண்டும் நம்பிக்கையின்மையை/பயத்தை விதை.

இதுதான் பார்ப்பன பயங்கரவாதிகளின் தந்திரமாக உள்ளது. பார்ப்பன பயங்கரவாதிகள் என்று இங்கு குறிப்பிடும் பொழுது RSS, BJP என்று சுருக்கி வரம்பிடாமல் ஒட்டு மொத்த இந்திய ஆளும் கும்பலின் வர்க்க இயல்பை குறிப்பிட்டே இங்கு சொல்லப்பட்டுள்ளது.

சில விசயங்கள் தெளிவு படுத்தப் பட வேண்டியுள்ளது,

#1) காஸ்மீர் மக்கள் ஏற்கனவே இந்திய அரசின் மீது நம்பிக்கையின்றி வெறுப்பில் இருக்கும் போது அவர்களை வென்றெடுக்கும் நடவடிக்கைகளை எடுக்காவிடிலும் பரவாயில்லை மாறாக இது போன்ற சந்தர்ப்பவாதமாக செயல்படுவது யாருக்கு நஸ்டம் என்பதை இந்தியாவின் மீது அபரிமிதமாக காதல் கொண்ட, மக்களுக்காக பேசுவதாக கூறிக் கொள்ளுபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

#2) காங்கிரசுக்கும், RSSக்கும் பெயரில்தானே வித்தியாசம்? இரண்டிலும் இருக்கும் ஆட்கள் பிரமுகர்கள் எல்லாம் ஒரே சமூக பொருளாதார அடிப்படை கொண்டவர்கள்தானே? எனவேதானே இரண்டு கட்சியை சேர்ந்தவர்களின் நோக்கமும், செயல்பாடுகளும் எந்த காலத்திலும் முரன்பட்டதேயில்லை? விசயம் இப்படியிருக்க போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டுகளான CPM கும்பல் வேறு ஏதோ கதை கட்டி காங்கிரஸுக்கு புனித கோமணம் கட்டுவது ஏன்?

#3) காஸ்மீர் பிரச்சினையின் அரசியலை வெளிப்படையாக பேசாமல் அமைதியாக இருங்கள், அமைதியாக இருங்கள் என்று மட்டும் கூச்சலிடுவதன் மூலம் CPM, Panthers Party உள்ளிட்டவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? அணு ஒப்பந்தத்தை நானும் எதிர்த்தேன் என்று பேர் வாங்கிக் கொண்டது போல நானும் நல்லவந்தான் என்ற விளம்பரம் செய்வதுதான் நோக்கமா? அத்வானியும் இதேயேதான் சொல்ல(மட்டும்) செய்கிறார்? அணு ஒப்பந்தத்திலும் கூட இருவரும் இதே போலத்தானே செய்தனர்?

#4) நேரு மற்றும் குறிப்பாக இந்திராவின் பாசிச நடவடிக்கைகள் காஸ்மீரில் தலையிடாத வரை காஸ்மீர் மதச் சார்பின்மையின் இலக்கணமாக இருந்ததன் ரகசியம் என்ன?

#5) ஹஜ் யாத்திரைக்கு மட்டும் சலுகை கொடுப்பதாக பொய் சொல்லும் சில பார்ப்பன பயங்கரவாத பெருந்தகைகள் கும்பமேளாக்கள், அமர்நாத் யாத்திரை, கைலாஸ் மானசரோவர் யாத்திரை உள்ளிட்ட பல்வேறு இந்து மத விழாக்களுக்கு கொடுக்கப்படும் அரசு சலுகைகளை மற்றும் கோடிக்கணக்கிலான செலவுகள் குறித்த விவரங்களை எந்த இடத்தில் மறைத்து வைத்துள்ளனர் என்று தெளிவுபடுத்தலாம். மதங்கள் எதற்க்கும் சார்பின்றி இருப்பதுதான் மதச் சார்பின்மை என்ற அர்த்தம் போய் எல்லா மதத்திற்க்கும் சார்ப்பாக இருப்பதே மதச் சார்பின்மை என்ற போலி மதச்சார்பின்மை சந்தர்ப்பவாதம் ஆட்சி செய்வதே இந்த கேலிக் கூத்திற்க்கெல்லாம் அடிப்படையா?

இது தவிர்த்து, அமர்நாத் பிரச்சினை குறித்த ஒரு கட்டுரை:
இந்துமத வெறியர்களின் சதித்தனம் மண்ணைக் கவ்வியது

அசுரன்

Related Article:

மாமா வேலை பார்க்கும் பாஜக (வழக்கம் போல)

12 பின்னூட்டங்கள்:

said...

//காஸ்மீர் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக சேர்ந்திருப்பதாக காட்டப்படுவது என்பதே பல்வேறு சர்வதேச, உள்நாட்டு நிலைமைகளினால்தான் சாத்தியமாகி உள்ளது. இதுவே சட்டப்பூர்வமானது அல்ல. //

Asuarn,
I would appreciate if you can elaborate on this ...may be a separate post.

When you say it is not by law ,
// இதுவே சட்டப்பூர்வமானது அல்ல.//
what do you mean ? Not by Indian law? or you referring to any PoK or PAK law?

Who need to endorse India's claim on J&K as an India’s state?

If J&K is not an Indian state by India’s law ,then how come they impose special laws such as

SPECIAL POWERS act
http://www.mha.nic.in/pdfs/Armed%20forces%20_J&K_%20Spl.%20powers%20act,%201990.pdf

I know the land portions in J & K were occupied by PoK and China. We do not have any clue about that.

Please see my old post about J&K map

ஜம்மு-காஷ்மீர் வரைபடம்(Map) குழப்பும் இந்தியா
http://kalvetu.blogspot.com/2005/11/17-map.html

Thanks

(sorry for English fonts)

said...

ஆழமான பார்வை.

அருமையான பதிவு.

அசத்துகிறீர்கள் தோழர்!

//விசயம் இப்படியிருக்க போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டுகளான CPM கும்பல் வேறு ஏதோ கதை கட்டி காங்கிரஸுக்கு புனித கோமணம் கட்டுவது ஏன்?// என்ற வரிகளை மிகவும் இரசித்தேன் - பொருளையும்தான்.

பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

said...

காஸ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்த போது இந்தியாவுடன் காஸ்மீர் இந்து மன்னன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து ரிபெரேண்டம் நடத்தியிருக்க வேண்டும் இந்திய அரசு. அதற்க்கான கோரிக்கைகளை முன் வைத்து ஆரம்ப காலங்களில் நடந்த போராட்டங்கள் எல்லாம் மிக கோடூரமாக ஒடுக்கப்பட்டன.

இன்று வரை அப்படியொரு ரிபரேண்டாம் நடத்த பயப்படுகிறது இந்திய அரசு.

காஸ்மீர் யாருடன் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான உரிமை அந்த மக்களுக்கே உள்ளது.

நீங்களோ, நானோ காஸ்மீர் இந்தியாவுடன் இருப்பதை விரும்பினாலும் கூட(காஸ்மீர் இந்தியாவுடன் இருப்பதையே நான் விரும்பினாலும் கூட) அந்த மக்கள் வேறு விதமாக விரும்பினால் அங்கு நமது விருப்பம் வேலைக்காகாது.

அந்த மக்களின் நல்லெண்ணத்தை வென்றெடுப்பதையே ஒரு நல்ல அரசு செய்திருக்க வேண்டும்.

மற்றபடி இதனை மூடி மறைக்க செய்யப்படும் ஒடுக்குமூறைகள், சலுகைகள் எல்லாம் ஆளூம் வர்க்கத்திற்க்குத்தான் பிரச்சினைகளை உண்டு செய்கிறது.

சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளவையும் கூட இந்த வகையிலேதான் தீர்க்கப் பட வேண்டும்.

சீனாவுடனான எல்லை தகராறில் புவி வரைபட போர்ஜெரி முதல் பல சிக்கலான தகிடு தத்தங்கள் உள்ளன. வாய்ப்பிருந்தால் அவற்றை எழுதுகிறேன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கல்வெட்டு

அசுரன்

said...

//
ஆளூம் வர்க்கத்திற்க்குத்தான் பிரச்சினைகளை உண்டு செய்கிறது. //

மன்னிக்கவும். ஆளும் வர்க்கத்திற்க்கு மட்டுமல்ல மிக முக்கியமாக பெரும்பான்மை மக்களுக்குத்தான் பல பிரச்சினைகளை உண்டு செய்கிறது.

அசுரன்

said...

//what do you mean ? Not by Indian law? or you referring to any PoK or PAK law?//

இது காஸ்மீர் மன்னனுடன் போட்டு கொண்ட ஒப்ப்ந்தம் மற்றூம் ஐநா சபையில் இந்தியா கொடுத்த வாக்குறுதி அடிப்படையில்.

said...

//இன்று வரை அப்படியொரு ரிபரேண்டாம் நடத்த பயப்படுகிறது இந்திய அரசு.//

//அந்த மக்களின் நல்லெண்ணத்தை வென்றெடுப்பதையே ஒரு நல்ல அரசு செய்திருக்க வேண்டும். //

//மற்றபடி இதனை மூடி மறைக்க செய்யப்படும் ஒடுக்குமூறைகள், சலுகைகள் எல்லாம் ஆளூம் வர்க்கத்திற்க்குத்தான் பிரச்சினைகளை உண்டு செய்கிறது.//

Asuran,
I agree with above.

**

I believe Nehru did some wrong moves in this J &K / UN issue. To be a true democratic person needs guts. I do not think any of our politicians has that.

Time permits we will discuss this later.

Thanks.

***
FYI: About Amarnath ... Only Hindu temple issues are major concern for BJP. They do not worry about any day-to-day life matters.Tomorrow their focus may shift to Sethu project, let their god save them :-))

said...

//let their god save them :-))//

Let the revolution save the People and the Human soceity :-)


Asuran

said...

வருகைக்கு நன்றி அதிஅழகு

said...

நன்றிஅசுரன் அவர்களுக்கு,

//காங்கிரஸ் மற்றும் RSS, BJP பெயர் அளவில்தான் வேறுபாடு மற்றபடி நடவெடிக்கைகள் ஒன்றுதான், காஸ்மீர் மாநிலத்தில் வெளிமாநிலத்தார் நிலம் வாங்க முடியாது//.உங்கள் தகவலுக்கு நன்றி....அருமையான பதிவு தோழரே

said...

அந்த வாக்கெடுப்பு நடத்த இயலாதத்திற்கு காரணம் காஷ்மீரின்
ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் இருக்கிறது.

said...

//அந்த வாக்கெடுப்பு நடத்த இயலாதத்திற்கு காரணம் காஷ்மீரின்
ஒரு பகுதி பாகிஸ்தான் வசம் இருக்கிறது.//

இதெல்லாம் ஒரு சாக்கு. இந்த சாக்கை உண்மையில் யார் பயன்படுத்த வேண்டியிருந்திருக்கும் என்ற கற்பனையை கடைசியில் சொல்கிறேன்.

இந்தியா தன்னுடன் உள்ள காஸ்மீரில் வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் தனிநாடு கோரினால் தனிநாடோ அல்லது இந்தியாவுடன் இருக்க விரும்பினால் அதனை முன்னிட்டு சர்வதேச அரங்கில் தைரியமாகவோ பேசியிருக்க முடியுமே? இத்தனை வருடங்களில் வன்முறை கொண்டு மக்களை ஒடுக்கியதற்க்கு பதில் நேர்மையாக நடந்திருந்தாலே இந்த பிரச்சினை இருந்திருக்காது. அப்படி மக்கள் விரோதமாக நடந்த காரணத்தினாலேயே வாக்கெடுப்பு நடத்த பயப்படுகிறதே அன்றி ஒரு பகுதி பாகிஸ்தானில் இருக்கிறது என்பதெல்லாம் சும்மா சப்பைக் கட்டு. பார்ப்பன பயங்கரவாதி இஸ்லாம் பயங்கரவாதியை காரணம் காட்டுவது போல. எப்படி ரெண்டு பேரும் பிசினஸ் பார்டன்ர் என்பது உண்மையோ அது போல இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் குறைந்த பட்சம் காஸ்மீரை பொறுத்தவரை பிசினஸ் பார்ட்னர் என்பதே உண்மை.

இந்தியா ஒரு நேர்மையான மக்களுக்கான அரசாக இருந்திருந்தால் மேற்சொன்ன இந்த ஆர்குயுமெண்டை பாகிஸ்தான் முன் வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டிருக்கலாம்.

ஏனேனில், இந்திய அரசு தனது செயல்பாடுகளின் மூலம் காஸ்மீரிகளின் நம்பிக்கையை பெற்றிரூந்தால் உறுதியாக இந்தியாவிடம் உள்ள காஸ்மீரில் எடுக்கப்படும் வாக்கெடுப்பு பாகிஸ்தான், சீனாவிற்கு எதிராகவே இருந்திருக்கும். எப்படி பார்த்தாலும் காஸ்மீரை ஆண்ட இந்து மன்னனின் தனிநாடு கொள்கையை ஆதரித்தவர்கள்தான் காஸ்மீரிகள்.

அசுரன்

said...

****இதுவே சட்டப்பூர்வமானது அல்ல****

Say that this is not ethically right. How do you say that it is not legally right ?

kashmiri king did not want to accede kashmir into india but pakistan forced him to do so by invading the place.

Related Posts with Thumbnails