TerrorisminFocus

Thursday, November 14, 2013

பூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்!!!

ம க இ க சுத்த வேஸ்ட். இத்தன வருசமா ஒன்னும் புடுங்கல. இவிங்க இழுத்த இழுப்பெக்கெல்லாம் வரனுமா? இவிங்க வேலையே இதுதான் எசமான். இப்படியாக பல புலம்பல்கள். இவை புதியவை அல்ல. ம க இ கவின் விமர்சனக் கணைகள் தாக்கும் வலி தாங்காமல் சந்தர்ப்பவாத புலம்பல்கள் இப்படித்தான் இருக்கும்.

இப்போது, சுப உதயகுமாரின் நெக்ஸ்டு ஸ்டெப்பு அரசியல் நடவடிக்கைக்கு தோதாக ம க இ க வை அவதூறு செய்து வெளியிடப்பட்டுள்ள கடிதம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்ற பெயரில் காவிக்கு காவடி தூக்க முயற்சி செய்து அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் கதையாகிப் போன 'சோழத்து' 'நாய'கர்களின் சோகம், இவை ம க இ க பற்றிய மேற்படி புலம்பல்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளன.

முழுக்க நனைந்தாலும் முக்காடு போடும் பாரம்பரியமிக்க 'தமிழ்'தேசிய,  'காந்திய' தலைவர்கள், மற்றும் வைகுண்டராஜனின் வைக்கோல் பொம்மைகள் ம க இ கவின் கடி எறும்புக் கடி எறும்புக் கடி எறும்புக் கடி மட்டுமே என்றே உறுதிப்படுத்தி ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள். போகட்டும் விட்டுத் தொலைவோம் ஒரேயொரு கேள்வியுடன், ஒரு எறும்புக் கடிக்கா இத்தனை அலப்பரை 'தோழர்களே'.

பூனைகளே எங்கே கண்களை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்!!!



அசுரன்

வைகோ வழங்கும் கபடநாடகம் பார்ட் 2

நடராஜ சோழன் அருளிய முள்ளிவாய்க்கால் முற்றம் !

முள்ளிவாய்க்கால் முற்றம் : உருவாகிறது தமிழ் ஆர்.எஸ்.எஸ்

 மணல் அரசியல் vs மக்கள் – விகடன் கட்டுரை

சுப. உதயகுமாருக்கு மகஇக-வின் பதில்

 

 

 

Saturday, November 02, 2013

அரசைக் காக்கும் காக்கி உடுப்பு போடாத காவல்காரன் யார்?

சாதியப் பத்தி பேசாதே, மதத்தை விமர்சிக்காதே, மக்களின் பிற்போக்குத்தனத்தை கடுமையாக தாக்காதே. எல்லாம் அமைதியா இருக்குல்ல அப்புறம் ஏன் குட்டையை கிளப்புற. எதுவும் நல்லவிதமாகவே இருக்கும் போது எல்லாவற்றையும் ஏன் கேள்வி கேட்கிறாய்.

இவைதான் பீல் குட் கும்பலின் புலம்பல்கள். இவர்கள்தான் இந்த அரசை பாதுகாக்கும் காக்கி உடுப்பு போடாத போலீஸ்காரர்கள். அதாவது ஸ்டேடஸ் க்யூ மெயிண்டெயின் செய்பவர்கள்.

நன்றி மிஸ்டர் மஞ்சுள்

 நன்றி மிஸ்டர் ரவுண்டு டேபிள் இந்தியா



அசுரன்

Friday, November 01, 2013

கழுதையிடம் கற்பூர வாசனை பற்றி கேட்பது தவறுதான், இசைப்பிரியா பற்றி கேட்கலாமா?

 தீபாவளி கொண்டாடும் அன்பார்ந்த மக்களே. தீபாவளி கொண்டாடக் கூடாது ஆனா கொண்டாடலாம் என்று குழப்பத்தில் உளழும் முற்போக்கு அறிஞர் பெருமக்களே. உங்க எல்லாத்துக்கும் வணக்கமுங்க. நரகாசுரன் வதம்தான் தீபாவளி இல்லையா? நரகாசுரனை ஏன் கொன்னானுங்க? எந்த சூழலில் கொல்லப்பட்டிருப்பான் என்பதை கற்பனையாக உருவகித்து புரிந்து கொள்ள சிரமப்படுபவர்கள். முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி எனும் முகாந்திரத்தின் ஊடாக இலங்கையை கையகப்படுத்தும் இந்தியா-சீனா-அமெரிக்கா-பாகிஸ்தான் கூட்டுச் சதிகாரர்கள் நடத்திய படுகொலைகளை பார்க்கலாம்.

சிற்பான்மையினரின் பண்பாட்டை பெரும்பான்மையினர் ஒடுக்கி அழித்த வரலாற்றின் உச்சக்கட்ட நிகழ்வுதான் முள்ளிவாய்க்கால். பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு எனும் சிறுபான்மை இங்கிருந்து பெரும்பான்மை பண்பாட்டை கபளீகரம் செய்த வரலாறுதான் தீபாவளி. நரகாசுரனை கொன்ற சூழலின் தகிப்பு புரிய வேண்டுமா? இதோ முள்ளிவாய்க்கால் முற்றுகை தாக்குதலின் போது ஒழிக்கப்பட்ட இந்த இசையின்  குரலை பாருங்கள். புலிகளின் தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர் இசைப் பிரியாவின் படுகொலை நிகழ்வு உங்களுக்கு புரிந்தால் தீபா'வலி'யும் புரியும்.





நரகாசுரன் கெட்டவன் என்பவர்கள், பிரபாகரனது பிணத்தை பார்த்து இதே போல பேச முற்படுவார்களா என்று யோசிக்கிறேன். பிரபாகரனின் தவறுகள் தீபாவளிகளை நியாயப்படுத்திவிடாது. நராகசுரனின் தவறுகள் முள்ளிவாய்க்கால்களை புனிதப்படுத்திவிடாது. கிருஷ்ணனும், பெருமாளும், விஷ்ணுவும், மோடி ராஜபக்சேக்களின் புராண பிம்பங்கள்தான். புனித பிம்பங்களை கேள்வி கேட்காதே என்கிறீர்களா? சரிதான் நரகாசுரன் காலத்தில் எப்படி சிறுபான்மை பெரும்பான்மையை ஒடுக்கியிருக்கும் என்ற கேள்விக்கு பதில் இதுதான்...

கொல்லப்பட்ட நரகாசுரன்

 கொல்லப்பட்ட நரகாசுரன் வாரிசுகள், கொண்டாடுவோம் தீபாவளி நாம்

உங்கள் இதயத்தில் சிறிதளவேனும் ஈரம் மிச்சமிருந்தால் இந்த கேள்விகள் உங்களுக்கு வலிக்கும். ஒளிகளின் நாள் என நீங்கள் முன் தள்ளும் கலாச்சாரம் வலிகளின் நாட்பட்ட வடு என்பது புரியும். இதோ கொலைக்கார கிரிமினல் விஷ்ணு அவதாரம் மோடியை வெட்கமின்றி கொண்டாடும் நீங்கள், நாளை பாசிச பன்றி கிருஷ்ணவதாரம் ராஜபக்சேவையும் கொண்டாடுவீர்கள். எதையும் நியாயப்படுத்த ஏதாவது சாக்கு சமாதானம் கிடைக்கும் போது இதற்கும் சில கிடைத்துவிடாதா என்ன? எந்த சூழலிலும் கூச்ச நாச்சமின்றி இருப்பதற்கு பழகிவிட்ட நாகரிக கணவான்கள் அல்லவா நீங்கள்?  ஸாரி தமிழில் சொல்லிவிட்டேன் ஹைலி டிக்னிபைட் சிட்டிசன்ஸ் இல்லையா?

 விஷ்ணு அவதாரம் மோடி

கிருஷ்ணனாவதாரம் ராஜபக்சே

நாளை முள்ளிவாய்க்காலையும் தீபாவளியாகக் கொண்டாடுவீர்கள் நீங்கள். தவறு என்று சொல்லும் எம்மைப் போன்றவர்களை பகடியும் செய்வீர்கள். சந்தேகமே வேண்டாம், இதற்காக வெட்கமோ, வருத்தமோ பட வேண்டாம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? தவறுதான் கழுதையிடம் கற்பூர வாசனை பற்றிய அறிவை எதிர்பார்ப்பது தவறுதான். கழுதைகளே எம்மை மன்னித்தருளுங்கள்.

அசுரன்

நன்றி நரகாசுரன்…!

Related Posts with Thumbnails