பாலாறும், தேனாறும் ஓடுதாம் குஜராத்தில்!!
குஜராத்து ஒளிருகிறது என்றும், ரத்தக் கறை படிஞ்ச கைனாலும் ஊழலற்ற ஆட்சி கொடுக்கும் உத்தமரய்யா நம்ம மோடி, அவர்தான் இந்தியாவ வாழ வைக்கப் போற தெய்வம்மய்யா என்றும் வெளக்கமாத்து மோடிக்கு பார்ப்பன பட்டுக் குஞ்சலங்கள் காவடி எடுத்து ஆடின. இவர்களின் பிரச்சாரத்தையும் உண்மை என்று நம்பி ரொம்ப நல்லவர்களாம், பாசிட்டிவ் திங்கிங் 'எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பர' பிரிவு ஒன்றும் கூத்தாடியது.
இந்தியாவின் டிராபிக் ராமசாமி(நன்றி பாரதி தம்பி) அன்னா ஹசாரே வேறு தனது உண்ணாவிரத நாடகத்தின் முடிவில் மோடியின் குஜராத்து ஒளிருது, அங்கு நடக்கும் ஆட்சி வடிவை பிற மாநிலங்களும் பின்பற்றனும் என்று வெறும் உரலை இடித்துக் கொண்டிருந்த பட்டுக் குஞ்சலங்களுக்கு சிறிது அவலை எடுத்துப் போட்டார். இதில் மோடிக்கு விளம்பரம் கிடைத்ததோ இல்லையோ ஹசாரேயின் டவுசர் கழண்டு காவி கோமணம் பல்லிளித்து விட்டது.
இதோ, சுதாரித்துக் கொண்ட ஹசாரே குஜராத்து வளர்ச்சியின் அருகதை என்னவென்று சொல்லியுள்ளார். 'குஜராத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்றும் மது விலக்கு சட்டமிருந்தும் கூட சாராய வெள்ளம் ஓடுகிறது என்றும், ஏழை விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் மோசடி கோலோச்சுகிறது' என்று போட்டுடைத்துள்ளார்.
கூடப் போன அக்னிவேஷ் அவர்கள், குஜராத்து ஒளிர்வதற்கு சிரியல் பல்பு போட்டு கரண்டு சப்ளை பன்னுபவர்கள் யார் என்று நேற்று சொல்லியுள்ளார். 'அமெரிக்க ஊடக மாமாக்களின் உதவியுடன் குஜராத்தின் வளர்ச்சி பற்றி பொய்யான சித்திரத்தை முன்னிறுத்துகிறார்கள்' என்றுள்ளார் அக்னிவேஷ் (மாமா - வார்த்தை உதவி நாம்). இவிங்களோட போன கெஜ்ரிவால்னு ஒருத்தர், இப்படியே நிலத்த புடுங்கினு இருந்தா குஜராத்தில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றுள்ளார்.
ஏற்கனவே குஜராத்து வளர்ச்சியின் தராதரம் என்னவென்பதை பலரும் தொடர்ந்து அம்பலப்படுத்தி எழுதி வருகிறார்கள். ஆயினும் ஏகாதிபத்திய சுரண்டல் வேட்கைக்கு பொருத்தமாக திட்டங்களை மின்னல் வேகத்தில் நடைமுறைப்படுத்த குஜராத்து போன்று அரசு பாசிசம் இருக்குமிடங்கள் வசதியாக இருக்கின்றன. எனவேதான் இதனை ஒரு மாடலாக அனைத்து ஊடகங்களும் முன்னிறுத்துகின்றன. ஆனால் அங்கோ உண்மையில் விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள், முஸ்லீம் சிறுபான்மையினர் என பல மக்கள் பிரிவினரும் அரசியல்-பொருளாதார-கலாச்சார ரீதியாக ஒடுக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள். தொழிலாளர்கள் உரிமைகள் ஏதுமற்று அற்பமான உரிமைகளை கோருபவர்கள் கூட பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார்கள். இந்து மதவெறி பயங்கரவாதமும், அரசு-ஏகாதிபத்திய பயங்கரவாதமும் சேர்ந்து ஒடுக்குகின்றன குஜராத்தில்.
குஜராத்தில் சாராய ஆறு மட்டும் ஓடவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களின், முஸ்லீம் சிறுபான்மையினரின் ரத்த ஆறும், விவசாயிகளின், தொழிலாளர்களின் கண்ணீர் ஆறும் சேர்ந்தே ஓடுகிறது. இதனைத்தான் வளர்ச்சி என்கிறார்கள் மக்கள் விரோதிகள். இதற்கு இசைப் பாட்டு பாடுகிறார்கள் யுப்பி வர்க்க அல்பைகள்.