TerrorisminFocus

Wednesday, May 19, 2010

பத்திரிகையாளர்களை தாக்கும் சி ஆர் பி எப் பொறுக்கிகள் மற்றும் பல செய்தி துணுக்ஸ்!!

துணுக்ஸ் 1:

மேற்கு வங்கம் மேற்கு மிதான்பூரில் நேற்று பத்திரிகையாளர்களை சி ஆர் பி எப் பொறுக்கிகள் கொடூரமாக தாக்கியுள்ளனர். விடியோ இங்கு காணக் கிடைக்கும். எவ்வளவு திமிருடன் அடிக்கிறார்கள் பாருங்களேன்?




பத்திரிகையாளர்களுக்கே இதுதான் நிலையெனில் மேற்கு மிதான்பூர், லால்கர், நந்திகிராம், சிங்கூர், கலிங்காநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இந்த பன்னாட்டு கம்பனிகளின் கூலிப்படை அங்குள்ள அப்பாவி மக்களுக்கு என்னென்ன அட்டுழியங்களை செய்திருக்கும்?

அப்புறம் ஏன் அவன் திருப்பி அடிக்க மாட்டான்? செய்வதையும் செய்துவிட்டு 75 பேர் செத்துட்டான், 50 பேர் செத்துட்டான் என வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? வினை விதைத்தவன் வினைதான் அறுப்பான்.

இந்தப் பகுதிகளில் அரசு பயங்கரவாதப் படைகள் நூற்றுக்கணக்கில் அப்பாவி பழங்குடியினரை சுட்டுக் கொன்றுள்ளனர். பெண்களை வன்புணர்வு செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டில் மட்டும் மாவோயிஸ்டுகளின் செல்வாக்குள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் 589 சிவிலியன் மக்களை அரசுப் படைகள் கொன்று போட்டிருக்கின்றன; சிறுவர்களின் விரல்களை வெட்டிப் போட்டுள்ளனர்; பெண்ணின் மார்பகத்தை அறுத்து வீசியுள்ளனர்; இதைவிடக் கொடூரம் காட்டுமிராண்டித்தனம் என்ன இருக்க முடியும்! சட்டிஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் மட்டும் வீடுகளைச் சூறையாடியும் இடித்துத் தள்ளியும் தீயிட்டுக் கொளுத்தியும் 700பழங்குடி கிராமங்களைச் சுடுகாடுகளாக்கி விட்டனர். 3 லட்சம் பழங்குடியினரை விரட்டியடித்து வீடுகளை, கிராமங்களை கொளுத்தியுள்ளனர். இத்தனை செய்தாலும், சி ஆர் பி எபிடம் அடிவாங்கினாலும் இந்த பன்னாட்டு கூலிப் படைகளின் அராஜகங்களை வன்முறை என்றோ, பயங்கரவாதம் என்றோ ஊடகங்கள் எழுதப் போவதில்லை. அரசுக்கு மட்டுமே தனது மக்களை கொல்லும் உரிமை உள்ளது போலும்.

ஏனேனில், முதுகெலும்பை அடகு வைத்த ஊடகத்துறைதான் இந்தியாவில் உள்ளது. அடிக்கின்ற எஜமானனிடம் பிஸ்கெட் வாங்கித் தின்று கொண்டு நத்திப் பிழைக்கும் கேவலமானவர்களாகவே ஊடகங்கள் உள்ளன.

இதை விட கூத்து டைம்ஸ் ஆப்பு இந்தியாவின் ஊடகவியலாளர் அடி வாங்கியதை கொண்டாடி, சி ஆர் பிஎப்பை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர் சில இந்தியர்கள் (வேறு யாருமல்ல அமெரிக்க வாழ் இந்தியர்கள்தான் அவர்கள்).
பேசாம, நாடு கடந்த அரசு என்ற நடைமுறையை இந்திய அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிடலாம். ஜனநாயகம் ஜெகக்ஜோதியா செழிக்கும்.


துணுக்ஸ் 2:

தெஹல்காவோட மேனேசிங் எடிட்டர் சோமா சௌத்ரி, கொஞ்ச நா முன்ன வேதாந்தா கம்பனி முன்னாள் மேனேசிங் டைரக்டர் ப. சிதம்பரத்திடம் சில கேள்விகள கேட்டாங்க,


சோமா சௌத்ரி:
மணிப்பூர்ல இந்த வருசம் மட்டும் 285 போலி என்கௌண்டர்கள் நடந்திருக்கு.
அதுல ஒன்ன தெஹல்காகூட போட்டொவோட அம்பலப்படுத்திருக்கோம். நக்சலைட்டுகளை எதிர்க்கிறோம்ங்கிற பேரில் அப்பாவி பழங்குடிகளை சித்திரவதை செய்வதை காந்தியவாதி ஹிமன்ஸு குமார் அம்பலப்படுத்தியிருக்கிறார். பழங்குடியின மக்கள் இந்த அமைப்பின் மீது மொத்தமாக நம்பிக்கையிழந்துள்ளனர். அவர்களால் குற்றங்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையைக் கூட பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. மனித உரிமை அமைப்புகள் என்ன சொல்கின்றன என்றால், பழங்குடியின மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்காமல் அமைதிப் பேச்சுவார்த்தை என்று சொல்வதெல்லாம் சுத்த வேஸ்ட்னு. இந்நிலையில் இது போன்ற அரசு வன்முறைகளை கட்டுப்படுத்த ஒரு வலுவான செய்தியை ஒன்றை அரசுக்கு தெரிவிப்பீர்களா? குற்றம் சாட்டப்பட்டுள்ள சல்வா ஜூடம் அதிகாரிகளில் சிலரை கைது செய்வீர்களா....

பா. சிதம்பரம் அதுக்கு சொன்னாரு: "I’m glad you think I have so much power and authority. Law and order is a state subject. All that you have spoken about in the last couple of minutes falls under the jurisdiction of the State governments, the Chief Minister and Home Minister of the state. You must take up cudgels with them. If I interfere too much they are likely to throw List II of the Constitution at me."

அதாவது, 'எனக்கு அந்தளவுக்கு அதிகாரம் கிடையாது. லா அண்டு ஆர்டரு மாநிலத்தோட மேட்டரு. கொஞ்ச முன்ன நீங்க பேசின எல்லாமே அவிங்க சட்டத்துக்குள்ள வற்றது. நீங்க அவிங்ககிட்டதான் கேக்கனும். நான் இந்த விவகாரங்களில் நெம்ப தலையிட்டாக்க அரசியலமைப்புச் சட்டப் பட்டியல் IIயை எனக்கு எதிரா வீசிறிவாய்ங்க' என்கிறார் பா. சி.

இதுக்கு சோமா சௌத்ரி சொன்னது: நீங்க எஸ்கேப்ஸ் ஆப் இண்டியா ஆவுறீங்க

நமக்கு சில கேள்விகள் வருது. இன்ன தேதி வரை அரசுப் படைகள்(அல்லது பன்னாட்டு கம்பனிகளின் கூலிப் படைகள்) பழங்குடியின மக்களை கொன்றொழிப்பது தொடர்கிறது. இந்த மாதம் மட்டும் இதுவரை பல தாக்குதல்களை அப்பாவி மக்கள் மீது நடத்தி மக்களை கொன்றொழித்துள்ளார்கள். இரு நாள் முன்பு கூட இருவரை போலீசு சுட்டுக்கொன்றது. இன்னிலையில் அரசின் இந்த கோடூரச் செயல்களை கண்டிக்க வக்கில்லாத, கட்டுப்படுத்த வக்கில்லாத பா. சிதம்பரம். அதனை எதிர்த்து மக்கள் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து போராடினால் மட்டும் தலையிடுகிறாரே ஏன்? அத்தையும் கண்டுக்காம போக வேண்டியதானே?

லா அண்டு ஆர்டரெல்லாம் மாநில அரசோட வேலைன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதானே?

அரசு வன்முறையைச் சொல்லி கேள்வி கேட்டாக்க 'ஒரு அளவுக்கு மேல என்னால தலையிட முடியாது' என்று எஸ்கேப் ஆகும் பா. சி. அதே போல மக்களின் எதிர்வன்முறையின் போதும் எஸ்கேப்ஸ் ஆக வேண்டியதுதானே? ஏன் வாண்டட்டா கூலிப் படைய அனுப்புறாரு?

அடுத்து சோமா சௌத்ரி கேட்ட கேள்வி:
காந்தியவாதி ஹிமன்ஸு குமார் என்ன சொல்றாருன்னாக்க, நீங்க நக்சலைட்டுகளுடன் பேச வேண்டாம். அந்தப் பகுதி மக்கள்ட போயி பேசுங்க. அதுவே மாவோயிஸ்டுகளை இல்லாததாக்கி அரசை பலப்படுத்தும்.

பா. சி. அதுக்கு சொன்னாரு: சிரி சிரி ரவிசங்கர்னு ஒருத்தங்கீறான். அவனோட கொள்கைல்லாம் எனக்குப் பிடிக்காது ஆனாக்கூடி அவன் அந்தப் பகுதிகள்ள வேலை செய்யத் தயார்னாக்க நான் உதவுறேன்னு சொன்னேன். என்னால என்ன முடியுமோ அவ்வளவையும் செய்வேன். நானே வந்து கூட பேசத் தயார். ஆனா அவிங்கதான்(பழங்குடியினர் மற்றும் மனித உரிமை அமைப்புகள்) யாருமே இன்ன வரைக்கும் பேசுறதுக்கு வரல.

ஆஹ, பா. சி நெம்ப நல்லவனாட்டம் யார்ட்டயும் பேசுவதற்கு காத்திருக்க மாதிரி பிலிம் காட்டிருக்கான் இந்த பேட்டீல. ஏதோ ஹிமன்சு குமார் வந்தாக்க உக்கார வைச்சி பேசி அனுப்புறா மாதிரியே பேசிருக்கான் இந்த மழுங்கான் மண்டையன். ஆனா உண்மையிலேயே என்ன நடந்திச்சி? இந்தப் பேட்டி வந்த சில நாட்களில் ஹிமான்சு குமாரின் மொத்த ஆசிரமும் அடித்து நொறுக்கி தரை மட்டமாக்கப்பட்டு அவர் விரட்டியடிக்கப்பட்டு விட்டார். ஏண்டா அவர் உங்களுக்கு நல்லதுதானே செஞ்சாரு? மாவோயிஸ்டுகள் ஒழிக்கறதுக்குத்தான அவர் ஐடியா கொடுத்தாரு? நீ செஞ்ச அயோக்கியத்தனத்த பேசின ஒரே காரணத்தாலதான் அவர அடிச்சி விரட்டிருக்க?

ஆஹ மொத்தத்தில் உன்னோட நோக்கம் மாவோயிஸ்டை ஒழிப்பதோ, மக்களின் நல்வாழ்வை காப்பதோ இல்லை. உன்னோட ஒரே நோக்கம் பன்னாட்டு கம்பனிக்கு அந்த இடங்களை பட்டா எழுதிக் கொடுப்பது. அதுக்கு இடைஞ்சலா இருக்குறவனப் பூறாம் மாவோயிஸ்டுன்னு ஸ்டாம்பு குத்தி கொல்றது, அதானே?

இதுக்கு ஏண்டா நீ பாரின்ல போயில்லாம் படிக்கனும்? கொஞ்சோண்டு இனிப்பு மிட்டாய எடுத்து மூஞ்சி புல்லா அப்பிட்டு நாக்கால நக்கி பழகினாலே போதுமே? நல்லா பூட்ஸ் நக்குற திறம வந்துறுமே?

இந்த பேட்டியப் படிச்சாக்க, பா. சி யோட டுபாக்கூர்த்தனம் நிறைய அம்பலமாகியிருக்கும். அந்த மக்களுக்கு ஏன் 60 வருசமா எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லைனு கேட்டாக்க அது இந்த சிஸ்டத்தோட பெயிலியர்னு சொல்றாரு பா. சி. அப்போ இந்த சிஸ்டம் வேண்டாம்னு அந்த மக்கள் தூக்கியெறியறதுல என்ன தப்புன்னு கேட்டாக்க, அப்படிலாம் விட முடியாது. நான் ஆளு அனுப்பி அடிப்பேன்னு சொல்றாரு.

ஒரே மோசடீஸ் ஆப் இண்டியாவாக்கீது...



துணுக்ஸ் 3:


இரு நாட்கள் முன்பு சி என் என் ஐபிஎன்ல் பி. சிதம்பரம் செட்டியாரிடமும், ஜெட்லியிடமும் காரசாரமாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். அவர் கேள்விகளின் சாராம்சம் இவைதான்

அஜ்மீர் முதல் பல்வேறு குண்டு வெடிப்புகளில் மாட்டிக் கொண்டுள்ள ஆர். எஸ். எஸ். பயங்கரவாதிகளை எப்படி பயங்கரவாதிகள் என்று நீங்கள் சொல்லப் போயிற்று?

அவ்வாறு சொல்வது மைனாரிட்டியை குளிர்விக்கும் அரசியல்.

ஆர். எஸ்.எஸ்.தான் செய்தது என்று எப்படி சொல்லப் போயிற்று?

இவ்வாறு கேள்விகள் எழுப்பி குதித்துக் கொண்டிருந்தான் ஒரு வெள்ளை மண்டையன்.

வெகு தெளிவாக இந்த குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.ன் தொடர்பு இருப்பதை ஜெட்லி குறிப்பிடுகிறார். ஆயினும் மழுங்கா மண்டையன் சிதம்பரத்தின் மழுங்கத்தனமான மழுப்பலை வைத்து ஜெட்லியின் கருத்துக்கு எதிர்வாதம் வைக்கிறது சி என் என். அதுவும் குறிப்பாக ஆர் எஸ் எஸ் குண்டு வெடிப்புகளை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளது என்பது இங்கு கூடுதலாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. மேலும், 2009 தீபாவளிக்கு முந்தைய நாள் கோவா குண்டு வெடிப்பு சதித் திட்டத்தில், இந்துக்கள் கூட்டமாகக் கூடிக் கொண்டாடும் இடத்தில் குண்டு வைத்து அதன் மூலம் முஸ்லீம் வெறுப்பை உருவாக்கி குளிர் காயும் திட்டத்தில் குண்டு வைக்க சதி செய்துள்ளனர் ஆர். எஸ். எஸ். பயங்கரவாதிகள். ஆயினும் அவர்களை பயங்கராவாதிகள் என்று சொல்லக் கூடாது என்கிறது சி என் என் ஐபிஎன்.

நல்ல பத்திரிகை தர்மம்.

'எல்லா முஸ்லீமும் பயங்கரவாதி இல்லையாம், ஆனா பயங்கரவாதி எல்லாம் முஸ்லீம்தானாம்' - இந்த முழக்கம் இன்று எங்கே போச்சின்னே தெரியல. குறிப்பாக அஜ்மீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் டைம்ஸ் ஆப் இந்தியா முதல் உள்துறை அமைச்சர் வரை எல்ஈடி, பாகிஸ்தான் என்ற வழக்கமான புலம்பல்களை கொட்டி நிரப்பினர். கடைசியில் செய்தது காவி உடை பயங்கரவாதி. மாலேகானிலும் மாட்டிக் கொண்டது காவி உடை என்றவுடன் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் சொல்கிறார்கள்: 'பயங்கரவாதத்திற்கு மதங்கள் கிடையாது' என்று. இந்த வசனத்தையே தனது புதிய முழக்கமாக ஆர்.எஸ்.எஸ். மறுவாந்தி எடுத்து வருகிறது. ஏண்டா இதே வசனத்தை நியாயமா நீ முஸ்லீம் பயங்கரவாதி குண்டு வைச்ச போதே சொல்லிருக்கனுமே? இல்லையே? மாறாக சிறுபான்மையினரை அச்சுறுத்தத்தி தனிமைப்படுத்தும் வேலையைத்தானே செய்தாய் அப்போது?

நல்ல அரசியல் தர்மம். ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் காங்கிரசிலும் இருக்காங்களாம். இது அபீசியல் கிசு கிசு. அன்-அபீசியல் உண்மை, இந்திய ஆளும் வர்க்கமே ஆர்.எஸ்.எஸ்.தான் இதிலென்ன காங்கிரசு, பிஜேபி, சிபிஎம் என்று பாகுபாடு?


துணுக்ஸ் 4:


கலிங்காநகரில் 2006லிருந்து போராடும் பழங்குடியின மக்களை அரசுப் படைகள் டாடா ரவுடிப் படையுடன் கூட்டுச் சேர்ந்து கோடூரமாக வதைப்பது குறித்தும், கடந்த மே 12ல் நடந்த துப்பாக்கிச் சுடில் ஒருவர் பலியானது குறித்தும் பதிவு எழுதப்பட்டிருந்தது. அந்த பதிவில் வந்த பின்னூட்டம் ஒன்றின் தமிழ் மொழிபெயர்ப்பு.

#####
//Chidambaram is pained by the wanton killings by Maoists//

I don't know why he didn't get pained by the wanton killings by police and green hunt forces in Kalinganagar and other parts of India, where people are staging peacefull protests?

May be after some time when those protests become armed Violent reactions of people against the State he may get pained again.


//மாவோயிஸ்டுகளின் வரைமுரையற்ற படுகொலைகளால் வேதனையுற்றுள்ளார் பா. சிதம்பரம்//

கலிங்காநகரிலும் இந்தியாவின் இன்னப் பிற பகுதிகளிலும் அமைதியான முறையில் போராடி வரும் மக்களை வகைதொகையின்றி போலீசும், ஆபரேசன் கிரீன் ஹண்டு படைகளும் கொன்று வருவது பா. சிதம்பரத்துக்கு வேதனையளிப்பதில்லையே ஏன்?

ஒருவேளை இன்னும் சிறிது நாட்களுக்குப் பிறகு இந்த அமைதி வழி மக்கள் போராட்டங்கள் அரசு வன்முறையை எதிர்க்கும் எதிர் வன்முறையாக உருமாறும் பொழுதுதான் அவர் மீண்டும் வேதனையுறுவார் போல.
####

ஏனோ, எந்த ஊடகமும் அரசின் இந்தத் தொடர் வன்முறையை பயங்கரவாதம் என்றோ படுகொலை, கொலைபாதகம் என்றோ கூறி கண்டிக்கவில்லை.


துணுக்ஸ் 5:

சில மாதங்கள் முன்பு, மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்கள். அரசு சொன்னது நக்சல்பாரிகள் தங்களது ஆயுதங்களை 72 மணிநேரத்தில் கீழே போடுவதென்றால் பேச்சுவார்த்தை பற்றி அரசு யோசிக்கும் என்று.

உடனே பத்திரிகைகள் எழுதின - 'மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தையை நிராகரிக்கிறார்கள்' என்று. நிராகரித்தது என்னவோ அரசுதான்.

பிறகு 75 பன்னாட்டு கூலிப் படையினரை பரலோகத்திற்கு அனுப்பிய பிறகும் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டார்கள் மாவோயிஸ்டுகள். அப்பொழுதும் அரசு மிகத் தெளிவாக மாவோயிஸ்டுகள் சரணடைந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என்றது(ரெண்டு பேரும் துப்பாக்கியை மூஞ்சிக்கு நேரா வைச்சி மிரட்டிக்கிட்டு இருக்குற சூழலில், ஒருத்தன் மட்டும் துப்பாக்கியை கீழே வைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அர்த்தம் சரணடைவது என்பதுதான்).

இப்பயும் நிராகரித்தது அரசுதான்.

இந்த காலகட்டம் முழுவதும் மாவோயிஸ்டுகள் ஒரேயோரு கோரிக்கைதான் வைத்தார்கள்,
அரசு தனது ஆபரேசன் கிரீன் ஹண்டு எனும் மக்கள் மீதான போரை 72 மணிநேரத்தில் அல்ல 72 நாட்களில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தால் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம் என்று.

இதைச் செய்வதில் அரசுக்கு என்ன கஸ்டமென்று தெரியவில்லை.

இரண்டு நாள் முன்பு பேரூந்தில் சென்ற கூலிப் படையினர்(பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்) தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, அதே பழைய பேச்சுவார்த்தை புலம்பலை முன் தள்ளினார் பா. சிதம்பரம்.

அதாவது, ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வா என்று. மாவோயிஸ்டுகள் இதற்கு பழைய பதிலையே சொன்னார்கள், ஆபரேசன் கிரின் ஹண்டை நிறுத்திய பிறகுதான் பேச்சுவார்த்தை சாத்தியமென்று. அதாவது இருவருமே ஆயுத்தத்தை கீழே போட்டால்தான் சாத்தியமென்பதே இதன் பொருள்.

ஆனால் இந்த முறையும் ஊடகங்கள் மாவோயிஸ்டுகள் மீதுதான் பலி போடுகின்றன.

பிடிக்காதா மாமியார் கை வைத்தால் குற்றம் கால் வைத்தால் குற்றம் என்று இதைத்தான் சொல்வார்கள்.

பேரூந்தில் சென்ற போலீசு கூலிப் படையினரை தாக்கியழிக்கப்பட்டதை ஒட்டி டைம்ஸ் ஆப்பு இந்தியா(ஆப்பு இந்தியாவுக்கு)வின் வெறிநாய் காம்பியர் ஒருத்தன் ஒரு டிஸ்கசனில் வாள் வாள் என்று கத்திக் கொண்டிருந்தான்.

அவன் கத்திக் கொண்டிருந்ததன் பொருள் இதுதான், 50 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனரே (50 என்பதே மிகைப்படுத்தப்பட்டது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்) இப்போவாவது மாவோயிஸ்டுகளை கொலைகாரர்கள் என்று ஒத்துக்கொள்ளுங்கள் என்பதே ஆகும். இதற்கு எதிர்வினை புரிந்த கவிதா(பேர் இதுதானா?) என்ற மனித உரிமைக்காரர் சிம்பிளா ஒரேயொரு கேள்வியைக் கேட்டார்கள், பல நூறு பேரை அந்தப் பகுதியில் இதுவரை கொன்றழித்துள்ளீர்கள், 3 லட்சம் பழங்குடியினரை விரட்டியடித்துள்ளீர்கள் இதை நீங்கள் பயங்கரவாதம் என்று சொல்லியுள்ளீர்களா இதுவரை? என்று.

இதுக்கும் டைம்ஸ் ஆப்பு இந்தியாவின் வெறிநாய் காம்பியர் வள் வள் என்றே பதில் சொன்னான். சரிதான், மனிதனின் பாஷை நாய்களுக்கு எந்த காலத்தில் புரியப் போகிறது, அதுவும் வெறிநாய்களுக்கு?


அசுரன்


Thursday, May 13, 2010

ஒரிஸ்ஸாவில் பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் சண்டை!!

ரிஸ்ஸா கலிங்காநகரில் இரண்டு நாள் முன்பு(13 மே 2010) நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயது முதிர்ந்த ‘பயங்கரவாதி’ ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சில குடும்பப் பெண் ‘பயங்கரவாதி’களும் படு காயம் பட்டுள்ளார்கள். காயமுற்ற 'பயங்கரவாதி'களுக்கு எந்த மருத்துவ வசதியும் போய்ச் சேர்ந்து விடக் கூடாது என்று தடுத்து வருகிறது போலீசு.


கலிங்காநகர் என்ற பெயர் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும் என்று தெரியவில்லை. 2006 ஆண்டு ஜனவரி மாதம் டாடா/பாஸ்கோ நிறுவனத்தினர் இரும்பு தொழிற்சாலைத் திட்டங்களுக்காக பழங்குடியின மக்களை விரட்டியடிப்பதை எதிர்த்து போராடிய மக்கள் மீது பன்னாட்டு நிறுவனக் கூலிப் படைகளும், காக்கிச் சட்டை பயங்கரவாதிகளுமான ஒரிஸ்ஸா போலிசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14பேர் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து இன்றைய தேதி வரை அது ஒரு அறிவிக்கப்படாத யுத்த பிராந்தியமாகவே இருந்து வருகிறது. இந்த காலகட்டம் முழுவதும் அது நாட்டு எல்லை பிராந்தியம் போலவே பதட்ட நிலையில் உள்ளது.

கலிங்காநகரில் போராடி வரும் மக்களின் வீடுகளை போலீசு ரவுடிகள் இடித்து தள்ளியதை எதிர்த்த பொழுதுதான் இந்த துப்பாக்கிச் சுடு நடந்துள்ளது. தற்போது நடந்துள்ள துப்பாக்கிச் சூடு கூட புதிது அல்ல. கடந்த மார்ச் மாதம் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மேலும் கிராமக் கிணறுகளில் பெட்ரோல் ஊற்றுவது, வீடுகளை கொளுத்துவது போன்ற நல்ல காரியங்களிலும் போலீசு மற்றும் டாடா ரவுடிகள் ஈடுபட்டுள்ளனர். கலிங்காநகர் பகுதி பல மாதங்களாக டாடா ரவுடிப் படை மற்றும் டாடா ஆதரவு போலீசு ரவுடிப் படைகளின் முற்றுகையின் கீழ் ஏதோ வெளி நாட்டு எல்லை போல மூடி வைக்கப்பட்டுள்ளது. ஈராக்கை அமெரிக்கா 8 வருடங்கள் முற்றுகையிட்டு 5 லட்சம் குழந்தைகளை மருத்துவ வசதி கிடைக்க விடாமல் கொன்றதை போலவே இங்கும் சில பல உயிர்களைக் கொல்லக் கொடுத்துள்ளது அரசு. மே 10 ஆம் தேதி கிராம மக்களை லத்தியால் அடித்துள்ளது போலீசு. ஏப்ரல் 30ல் பலருடைய வீடுகளை இடித்து தள்ளியுள்ளனர். மார்ச் 30ல் ஆரம்பித்து இன்றைய தேதி வரை தொடர்ந்து மக்கள் மீது அரசு தாக்குதல் தொடுத்துள்ளது, அதாவது ஒரிஸ்ஸாவில் மிகச் சரியாக ஆபேரேசன் கிரீன் ஹண்ட் ஆரம்பித்தும் இதே காலத்தில்தான். ஏற்கனவே 2006 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் ரத்தக் குழாய்களை போலீஸ் ரவுடிகள் வெட்டிக் கொன்றுள்ள கோடூரம் சமீபத்தில் அம்பலமானது. இந்த பச்சைப் படுகொலையை மறைப்பதற்காக இறந்தவர்களின் கைகளை பிரேத பரிசோதனையின் போது துண்டித்துள்ளனர் அழகிய குழந்தைகளும், குடும்பமும் வாய்க்கப் பெற்ற போலீசார்.

டாடா-போஸ்கோ தியாகிகள் கம்பனிக்கு ரோடு முதலான வசதிகள் செய்து கொடுப்பதை எதிர்த்துப் போராடும் கலிங்காநகர் மக்களின் அமைப்பு (VVJM) ஜன்மஞ்ச். ஜன் மஞ்சின் முன்னணியாளர்கள் 40 பேரை சமீபத்தில் சிறையிலடைத்துள்ளது போலீசு. ஆயிரக்கணக்கில் விதவிதமான போலீசு ரவுடிகளைக் குவித்து முற்றுகையிட்டுள்ளது போலீசு. இன்னிலையில் போராடுவதற்கு கூட வழியில்லாமல் மொத்தமாக தற்கொலைதான் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ளோம் என்கிறார் ஜன்மஞ்சின் தலைவர் ஜரிக்கா. இவர்களின் கோரிக்கை சரியான நிவாரனம் கொடு என்பதுதான். நிலத்தை எடுத்துக் கொள்வாய் எனில் எனக்கு நிவாரணமாக வேறொரு இடத்தில் நிலம் கொடு என்பதுதான் மக்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வைத்த மறுநாளே போலீசை அனுப்பி மக்களை அடித்துள்ளது அரசு. இதே நேரத்தில் வேறு பல நிறுவனங்களுக்கு நிலங்களை அரசு தானமாக அள்ளிக்கொடுப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

யுத்த பிராந்தியம் என்று சொல்லும் பொழுது சும்மா வசதிக்காக அவ்வாறு சொல்லவில்லை. ஒரு பிராந்தியத்தின் மக்களுக்கு அடிப்படை தேவையானவற்றை கிடைக்க விடாமல் திட்டமிட்ட வகையில் முற்றுகையிட்டு தாக்குதல் தொடுப்பது சர்வதேச வரையறைகளின் படி யுத்தம் என்றே அறியப்படுகிறது. எப்படி ஈழத்தில் மக்கள் முற்றுகையிடப்பட்ட படுகொலை செய்யப்பட்டனரோ அது போல. கலிங்காநகரும் அவ்வாறான முற்றுகையில்தான் பல மாதங்களாக அரசு மற்றும் டாடா பயங்கரவாதிகளின் கொலைக்கரங்களின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

விசயம் இப்படியிருக்க சுட்டுக் கொல்லப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டவர் என்று டாடாவின் ஆசி பெற்ற பத்திரிகைகள் எழுதியுள்ளன. மேலும் இன்ன தேதி வரை ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட் நாயக்கும் துப்பாக்கிச் சூடை மறுத்து வருகிறார். சுட்டுக் கொன்ற போலிசுக்காரர்கள் மற்றும் அதற்கு ஆணையிட்ட கொழுத்த முதலாளிகளைப் போலவே கொல்லப்பட்டவர்களுக்கும் அழகான குழந்தைகள், குடும்பங்கள் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன் (அதெல்லாம் யாருக்கு வேண்டும்).

சுட்டவர்களையும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களையும் சேர்த்தே பயங்கரவாதி என்று குறிப்பிட்டதற்கு ஒரு காரணம் உள்ளது. நம்மைப் போல நகரத்தில் வாழும் நாகரிக கனவான்களுக்கு வன்முறை என்பது அறவே விரும்பத்தகததாக இருக்கிறது. நமது நல்ல உள்ளங்களுக்கு, மனிதாபிமான அபிலாசைகளுக்கு பேதங்கள் கிடையாது. எனவே அடித்தவனையும், அடி வாங்கி திருப்பி அடிப்பவனையும் வேறுபடுத்தி பார்க்காமல் வன்முறையை பிரயோகித்தவர்கள் என்ற அறநெறி ஒழுக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் ‘எடை போட்டு’ பார்ப்பதே தர்மம் என்பதாலும், அவ்வாறு ‘குறிப்பிடு’வதோடு நம்மை வரம்பிட்டுக் கொண்டு வேறு எதுவும் செய்யாமல் பீட்ஸா பர்கர் சாப்பிட்டுக் கொண்டு எப்படி போராடுவது என்று ஆலோசனை கூறுவதுதான் நமது அறநெறிக் கோட்பாடு என்பதாலும் இவ்வாறு குறிப்பிடுகிறேன்.

இந்த மோதல்களில் இரு பக்கமும் மனிதர்கள் மடிவது குறித்து வினவு தளத்தில் செந்தழல்ரவி வருத்தப்பட்டிருந்தார். அவரது மனிதாபிமானம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். நகரத்தில் வாழும் நம்மைப் போன்றவர்கள் இது போன்ற மனிதப் படுகொலைகளை தடுப்பதற்கு செந்தழல் ரவி விருப்பப்பட்டது போல சில எளிய வழிகளை பரிந்துரைக்க விரும்புகிறேன். இங்கு நாம் வீதியில் இறங்கி மக்களை திரட்டி போராடினால், இந்தக் கோடூரங்களை விரிவாக மக்களிடம், நண்பர்களிடம் என எங்கும் பிரச்சாரம் செய்தால், அரசை தனிமைப்படுத்தினால் அங்கு அவர்கள் துப்பாக்கி தூக்குவதற்கு அஞசுவார்கள். இதுதான் அந்த எளிய வழி. இதற்கு நமது நேரத்தில் ஒரு சிறு பகுதியை தியாகம் செய்ய வேண்டும் அவ்வளவுதான். நமது நேரம் முக்கியமா அல்லது அங்கு மடியும் உயிர்கள் முக்கியமா என்பதை அவரவரின் மனசாட்சியின் முடிவுக்கே விட்டு வைக்கிறேன்.

அசுரன் என்ற பயங்கரவாதி

(ஏதோ சட்டம் போட்டிருக்காங்களாம் இது மாதிரி விசயங்களை ஆதரிச்சா தண்டனைன்னு. தண்டனைய கொடுங்கப்பா அவார்டு மாதிரி ஏத்துக்கிறோம்)

தொடர்புடைய பதிவுகள்:

ஒரிசா:மறுகாலனியாதிக்கத்தின் கோரம் பழங்குடி மக்களின் யுத்தம்


Related Posts with Thumbnails