TerrorisminFocus

Monday, December 31, 2007

வர்ணாசிரம கிரிமினலும்! ஹவாலா கிரிமினலும்!

வர்ணாசிரம கிரிமினல் இராமன்!
ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி!

""இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்'' என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார்? ""அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்?'' என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொருமுறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.

ராம் விலாஸ் வேதாந்தி. 1984 முதல் விசுவ இந்து பரிசத்தின் தலைமைக்குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் (இந்துக்களுக்கு நன்னெறி காட்டும் குழு) உறுப்பினர்; 1990 முதல் ராம ஜன்மபூமி டிரஸ்ட் உறுப்பினர்; 1996, 98இல் உ.பி. மாநிலம் பிரதாப்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர். மத்திய அரசின் ரயில்வே குழு, நகர்ப்புற வளர்ச்சிக் குழு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர். இவை அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் உமாபாரதி, ரிதம்பரா வகையைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர். சமீபத்திய உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகப் பிரச்சாரம் செய்த முன்னணிப் பேச்சாளர். எல்லõவற்றுக்கும் மேலாக, பாபர் மசூதி இடிப்பையும் மதக்கலவரத்தையும் தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 11 பேரில் ஒருவர். இந்த வேதாந்தியைத்தான் ""யாரோ, எவரோ; எங்களுக்குத் தெரியவே தெரியாது'' என்கிறார்கள், இந்தப் பார்ப்பன யோக்கிய சிகாமணிகள்.

"இராமன் ஒரு கற்பனைப் பாத்திரம்' என்று கருணாநிதி சொன்னவுடனே குமுறி எழுந்த இந்த சாமியார், "உண்மையிலேயே ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பக்தனாக இருக்கலாமோ, அதன் காரணமாகக் கோபத்தில் வரம்பு மீறிப் பேசியிருக்கக் கூடுமோ' என்று வாசகர்கள் யாரேனும் நினைத்துக் கொண்டிருந்தால், அது மடமை. இந்த வேதாந்தி ஒரு தொழில்முறைக் கிரிமினல்.

""பிள்ளைவரம் தருகிறேன், புதையல் எடுத்துத் தருகிறேன்'' என்று கூறி பாமர மக்களையும் பெண்களையும் நாசமாக்கி, பிறகு மாட்டிக்கொண்டு தரும அடி வாங்கி உள்ளே போகும் "கீழ்சாதி' லோக்கல் சாமியார் அல்ல இந்த வேதாந்தி. மக்களின் மத நம்பிக்கையை மதவெறியாக மாற்றி, அந்த மதவெறியை டாலராக மாற்றிக் குவித்து வைத்திருக்கும் ஒரு சர்வதேசக் கிரிமினல். கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பிறகும், இன்னமும் கம்பி எண்ணாமல் வெளியில் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் செல்வாக்குள்ள கிரிமினல்.

மதத்தை வைத்து "பிசினெஸ்' நடத்தும் சாமியார்களை அம்பலப்படுத்துவதற்காக ""கோப்ரா போஸ்ட்'' என்ற இணையதளம் புலனாய்வு நடவடிக்கை ஒன்றில் இறங்கியது. அதில் சிக்கிய மூன்று சிகாமணிகளில் வேதாந்தியும் ஒருவன். முதலாளிகள் போல நடித்து வேதாந்தியை சந்தித்த இந்தச் செய்தியாளர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேதாந்தியிடம் பேரம் பேசுகிறார்கள். ரகசியக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்த பேரத்தை கடந்த மே 4ஆம் தேதியன்று ஒளிபரப்பியது, ""ஐ.பி.என்7'' தொலைக்காட்சி. ஒளிபரப்பான அந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.
வேதாந்தி: எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?

நிருபர்கள்: நீங்கள் விரும்பியபடி...

வேதாந்தி: இல்லை, எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்; ஒருவேளை 5 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்தால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

நிருபர்கள்: உங்களுக்கு 1.5 கோடி...

வேதாந்தி: இல்லை; 3 கோடியை வாங்கிக் கொண்டு எனக்கு 2 கோடியைக் கொடுங்கள்!

நிருபர்கள்: எங்களுக்கும் இலாபம் வேண்டாமா?

வேதாந்தி: சரி,சரி; எனக்கும் கமிஷன் வேண்டாமா? இப்படிக் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கு எனது ட்ரஸ்ட் பணத்தை பயன்படுத்துவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. இருப்பினும் எனது ஆடிட்டரிடம் கலந்தாலோசிக்கிறேன். அயோத்தி வாருங்கள், எல்லாவற்றையும் முடித்து விடலாம்.
நிருபர்கள்: ராமஜன்மபூமி டிரஸ்ட்டுக்கு நீங்கள்தானே தலைவர்?

வேதாந்தி: ஆமாம், ஆனால் உங்கள் பணத்தை அதில் போட்டால் மீள எடுப்பது சிரமம். ஏனெனில் அது ஒரு சர்வதேச ட்ரஸ்ட். சி.பி.ஐ.யும், ஐ.பி.யும் (உளவுத் துறைகள்) அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.

நிருபர்கள்: ஆனால் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு எதுவும் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே?

வேதாந்தி: இல்லை, இந்த வேலைக்காகவே "மாத்ரி சேவா ட்ரஸ்ட்' என்று ஒன்றைத் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறேன்.

(ஆதாரம்:watch the video: http://www.ibnlive.com/videos/39845/money-launderer-leads-ram-temple-trust.html)

இந்த உரையாடலை ஒளிபரப்பிய ஐ.பி.என். தொலைக்காட்சி, அதன் பிறகு இதே வேதாந்தியிடம் நேர்காணல் எடுக்கச் சென்றது. உடனே ""தேசவிரோத முசுலீம் தே..... மகன்கள்தான் எனக்கெதிராக இந்தச் சதியை நடத்தியிருக்கிறார்கள்'' என்று வெறி கொண்டு கத்தினான், இந்தக் களவாணி. அதிர்ச்சியடைந்த அந்தச் செய்தியாளர், ""நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதால் மேற்கொண்டு நேர்காணல் நடத்த முடியாது'' என்று கூறி பேட்டியை நிறுத்திக் கொண்டார். இந்த விவகாரமும் அம்பலத்துக்கு வந்து சந்தி சிரித்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த தருணத்தில் இந்த விவகாரம் சந்தி சிரித்த போதிலும், இந்தக் காவி உடைக் கிரிமினலைச் சங்கப் பரிவாரங்கள் கைவிடவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது ராமர் சேது விவகாரத்தில் கருணாநிதிக்கு எதிராகக் கொட்டி முழக்கி வருபவருமான ரவிசங்கர் பிரசாத், "" உங்கள் தொலைக்காட்சியில் அடிபடும் பெயர்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் மிகவும் மதிப்பிற்குரியவர்கள். எனவே இந்த இரகசிய காமரா ஒளிபரப்பின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு ஐயமாக இருக்கிறது'' என்றார். விசுவ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோரோ, ""இந்த இரகசிய கேமரா நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இதில் ஏன் இந்துக்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள்?'' என்று மடக்கினார். ""கருணாநிதி இராமனை மட்டும் விமரிசிக்கிறாரே, மற்ற மதத்தினரை விமரிசிக்காதது ஏன்?'' என்று இப்போது கேட்கி றார்கள் அல்லவா, அதே கேள்விதான் கிரிராஜ் கிஷோரின் கேள்வியும்.

""கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம். ""எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் ""அவாள்'' பேசவே இல்லை.

""இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்?'' என்ற கேள்வியைப் போலவே, ""உங்கள் டிரஸ்டில் இத்தனை பணம் எப்படி வந்தது?'' என்ற கேள்வியும் கூட இவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்துகிறது போலும்! ராம ஜன்ம பூமி, ராமர் பாலம் மட்டுமல்ல; ராம ஜன்ம பூமி டிரஸ்டில் உள்ள கறுப்புப் பணமும் கூட இந்துக்களின் மத நம்பிக்கை சார்ந்த விசயம் போலும்! இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கினால், தலையை வெட்டுவார்கள், நாக்கை அறுப்பார்கள், அதை செய்து முடிப்பதற்கு எடைக்கு எடை தங்கமும் கொடுப்பார்கள் இந்தத் "துறவி'கள்!

வருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விஸ்வபந்து குப்தா இந்த உத்தம புத்திரர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ""இந்த வேதாந்தி விவகாரத்தில் உடனே கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ராம ஜன்ம பூமி நிவாஸ், விசுவ இந்து பரிஷத் இரண்டும் மதரீதியான மாஃபியாக் குழுக்களாகும். அவர்கள் ஒரே முகவரியிலிருந்து சுமார் பத்து போலியான ட்ரஸ்ட்டுகளை நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஐம்பது வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. இதற்கு வரி விலக்கும் பெறுகிறார்கள். ஆனால், எதற்கும் முறையான கணக்கு வழக்கு கிடையாது. இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வருகிறது என்று நாங்கள் கணக்கிட்டிருக்கிறோம்... மதவெறியைப் பரப்புவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்.''

வேதாந்தி ஒரு விதிவிலக்கல்ல. வேதத்துக்கு அந்தமில்லை என்று ""அவாள்'' சொல்வதைப்போல, சங்க பரிவாரம் முழுவதும் முடிவில்லாமல் நிறைந்திருக்கிறார்கள் வேதாந்திகள். இந்தக் காவி உடை மாஃபியா கும்பல் தன்னை ஒரு கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. கடத்தல், கஞ்சா, ஆயுதம் என்ற சரக்குகளைப் போல, இந்த மாஃபியா கும்பல் கையாளும் விற்பனைச் சரக்கு மதம்.

இந்த பேட்டியை வைத்தே வேதாந்தியைக் கைது செய்யலாம் என்கிறார், குப்தா. பொதுத்தொலைபேசியிலிருந்தும், மின்னஞ்சல் மூலமும் கொலை மிரட்டல் விடும் கிறுக்குப் பயல்களையெல்லாம் சிறப்புப் படை அமைத்துத் தேடிப் பிடிக்கிறது போலீசு. ஆனால், ஒரு முதலமைச்சரைக் "கொலை செய்' என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கும் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யக்கூட அஞ்சுகிறது. குப்தா கூறுவது போல வேதாந்தியை உள்ளே தள்ளுவது இருக்கட்டும், மாத்ரி டிரஸ்ட்டில் ஒரு சோதனை நடத்துவதற்குக் கூட நிதியமைச்சகம் உத்தரவிடவில்லை என்பதே உண்மை.

"தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறுக்க வேண்டுமென்று' பகவத் கீதை சொல்கிறதாம். நோட்டு மாற்றுபவனுக்கு கிருஷ்ண பரமாத்மா என்ன தண்டனை தரச் சொல்கிறார்? தெகல்காவின் கேமரா முன் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட பங்காரு லட்சுமணனைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கியது பாரதிய ஜனதா. ஆனால், வேதாந்தி மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அவர் விசுவ இந்து பரிசத்திலேயே இல்லையென்று கூசாமல் புளுகுகிறது. "சூத்திரன் திருடினால் சிரச்சேதம், பார்ப்பான் திருடினால் சிகைச் சேதம்' என்பதல்லவோ மனுநீதி!

செப்30 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் ""நான் கருணாநிதிக்கெதிராகச் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை'' என்று திமிராகப் பதிலளித்திருக்கிறான் வேதாந்தி. பா.ஜ.க.வினரோ ""அதான் வாபஸ் வாங்கிவிட்டாரே, அப்புறம் ஏன் அடிக்கிறீர்கள்?'' என்று நியாயம் பேசுகிறார்கள்.
எந்தக் காலத்திலும் நல்ல பாம்பு நஞ்சை வாபஸ் வாங்கியதில்லை; வாங்கவும் முடியாது. அதை அரைகுறையாக அடித்துத் தப்ப விடுவதுதான் ஆபத்து!

· புதிய ஜனநாயகம், அக்டோபர் 2007

நன்றி: தமிழரங்கம்

Sunday, December 30, 2007

ஏழ்மையின் அரசியல்!! யார் இந்த அன்னை தெரசா???


""தில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?''

""என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.''

""என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.''

துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் "அன்னை' தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.

1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த "அவிசுவாசத்தை' எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு "புனிதர்' பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள "அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு' என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அதிக முக்கியத்துவமின்றி சில ஆங்கில நாளேடுகளில் மட்டும் தெரசா குறித்த இச்செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் இது பரவலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவுக்கு அடுத்தபடியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மதிக்கத்தக்க குறியீடாகவும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் சின்னமாகவும், ஐஸ்வர்யா ராய் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் போற்றிப் பணியும் தெய்வமாகவும் வனைந்து உருவாக்கப்பட்ட தெரசா என்ற திருஉரு, திடீரென்று நொறுங்கிச் சரிவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பாததில் வியப்பில்லை.

இக்கடிதங்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே வெளியிட்டிருப்பதால் இதை விசுவாசிகள் யாரும் "நாத்திகர்களின் சதி' என்று கூறி மறுக்க முடியாது. தனது மரணத்துக்குப் பிறகு இக்கடிதங்களை அழித்துவிட வேண்டுமென்று தெரசா கோரியிருந்ததையும் மீறி இவை வெளியிடப்படக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலுவையின் முன்புறத்தில் இயேசுவையும் பின்புறத்தில் உண்மையையும் அறைந்து வைத்திருக்கும் திருச்சபை, உண்மையின் பால் கொண்ட காதலால் இவற்றை வெளியிட்டிருக்காது என்பதை மட்டும் நாம் நிச்சயமாகக் கூறலாம்.

""இக்கடிதங்களின் காரணமாகப் "புனிதர்' பட்டம் பெறும் தகுதியை தெரசா இழக்க மாட்டார்'' என்று கூறுகிறது வாடிகன். ""இயேசுவும் கூட சிலுவையில் மரிக்குமுன் தன்னைக் கைவிடப்பட்டவராகவே உணர்ந்தார்..... தெரசாவிடம் நாம் காணும் "விசுவாசம் நிரம்பிய மன உறுதி' என்பது ஒரு காப்பியச் சிறப்பு மிக்க ஆன்மீக வீரம்'' என்கிறார் இந்நூலாசிரியர் கலோடிஜெக்.

ஆன்மீகத் துயரம் என்று கத்தோலிக்க குருமார்களால் வருணிக்கப்படும் தெரசாவின் இந்த உளவியல் வேதனை குறித்து பொருள் முதல்வாதிகளாகிய நாம் மகிழவும் தேவையில்லை, வருந்தவும் தேவையில்லை. தெரசாவிற்குள் "தேவன்' இறங்கியதெப்படி, வெளியேறியதெப்படி என்பதைப் புரிந்து கொள்வதுதான் நம் அக்கறை.

பின்தங்கிய நாடான அல்பேனியாவின் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தெரசா, பரிதாபத்துக்குரிய கன்னியா ஸ்திரீகளின் கூட்டத்தில் ஒருவராக இந்தியாவிற்கு வருகிறார். 1929 முதல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த "அற்புதம்' நிகழ்ந்தது.

""இயேசு என்முன் தோன்றினார். "நீ திறமைகள் ஏதுமற்ற பலவீனமான பாவி என்பதை நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய புகழைப் பரப்ப உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன். நீ மறுப்பாயா?' என்று கேட்டார். எனவே எனக்கு இந்த ஆசிரியைப் பணி வேண்டாம். நான் நிராதரவான ஆன்மாக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்'' என்று தனது திருச்சபை மேலிடத்திடம் கோரினார், தெரசா. "ஒரு உண்மையான விசுவாசி' கைவசம் இருப்பதைக் கண்டுகொண்ட ஆர்ச் பிஷப், வாடிகனின் அனுமதியைத் தெரசாவுக்குப் பெற்றுத் தந்தார். 1948இல் கல்கத்தாவில் தொடங்கியது தெரசாவின் "மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி.'

இரண்டே மாதங்களில் தெரசாவின் வெறுமையும் விசுவாசமின்மையும் தொடங்கி விட்டன. துன்பங்களற்ற வசதியான பள்ளி ஆசிரியை வாழ்க்கையை 16 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டு திடீரென தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளின் "பொந்துக்குள்' வீழ்ந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியும், இந்தச் சூழலை வலியத் தருவித்துக் கொண்டதனால் தன்மீதே தோன்றியிருக்கக் கூடிய வெறுப்பும் தெரசாவிடம் "விசுவாசமின்மை' துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

""பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?'' என்று பின்னாளில் அவர் எழுதும் கடிதம் அந்த மனக்காயத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.

தமது விருப்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள இயலாமல் திருச்சபைச் சூழலில் நிரப்பப்பட்டிருக்கும் போலி ஒழுக்கப் புகைமூட்டம், தவறுகளை வெளிப்படையாகப் பரிசீலனைக்கு உட்படுத்துவதைத் தந்திரமாகத் தவிர்க்கும் பாவமன்னிப்பு முறை, அம்பலப்படாத தனது சுய ஆளுமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்பட்டிருக்கும் தேவதூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்குத் தேவையான விசுவாசமோ, திரும்பச் செல்வதற்கான துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு முதிர்கன்னி இதுதான் 1949இன் தெரசா.

தனது வெறுமை குறித்தும், நம்பிக்கையின்மை குறித்தும் தனக்கு உயர் தகுதியில் உள்ள அருட்தந்தைகளுக்கு தெரசா இடையறாமல் கடிதம் எழுதியிருக்கிறார் எனினும், பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்மணியை விடுவிக்க திருச்சபை முயலவில்லை. மாறாக, அவரைச் சிலுவையில் அறைவதற்கான ஆணியைத்தான் தயார் செய்தது. 1969இல் கத்தோலிக்க மத வெறியனான மால்கம் மக்கரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர் தெரசாவைப் பற்றிய செய்திப் படம் ஒன்றைத் தயாரித்தார். பி.பி.சி இதனை ஒளிபரப்பியது. இருட்டறையில் விளக்குகள் இல்லாமலேயே ஒரு காட்சி பதிவாகியிருப்பதாகவும், அது தெரசா நிகழ்த்திய அற்புதம் என்றும் கூவினார் மக்கரிட்ஜ். தனது விசுவாசமின்மை குறித்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்த தெரசாவும், "தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக' அந்தப்படத்தில் பேட்டியளித்தார்.

1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எழுந்த வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏகாதிபத்தியவாதிகளைத் தனிமைப்படுத்தியிருந்தன. மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை அவர்கள் காட்டவேண்டியிருந்தது. இப்படி உருவாக்கப்பட்டதுதான் தெரசாவின் ஒளிவட்டம். நோபெல் சமாதானப் பரிசு உள்ளிட்ட பரிசுகளை அவர் மீது பொழிந்தது ஏகாதிபத்தியம். தாட்சர், டயானா, ரீகன், பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள்.. என்று தரிசனத்துக்கு வரும் பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மெலிந்து சுருங்கிய தோற்றமும், வெள்ளைக் கைத்தறி ஆடையும், ஆதரவற்றோர் சேவையும் தெரசாவை மதச்சார்பு கடந்த ஒரு புனிதத் திரு உருவாக ஏகாதிபத்தியங்கள் முன்நிறுத்துவதற்குப் பயன்பட்டன.

ஆனால் உலகமே கொண்டாடிய அவரது சேவையோ, விருதுகளோ, பணிந்து வணங்கிய பல நாட்டு அதிபர்களோ, இவையனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய மனநிறைவோ தன்னிடம் இல்லை என்கின்றன தெரசாவின் கடிதங்கள். தெரசாவின் இறைநம்பிக்கை ஏன் தகரவேண்டும்? விசுவாசமில்லாத நிலையிலும் அவர் காட்டிய மன உறுதியை வியக்கிறார் கலோடிஜெக். அவருடைய விசுவாசத்தைப் பறித்தது எது? விசுவாசம் தளர்ந்த பின்னரும் அவருடைய மன உறுதியைத் தாங்கி நின்றது எது?

மாபெரும் தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும்கூட "கடவுள்' தோற்றுவிக்கும் இத்தகைய மனத்துயருக்கு ஆட்படுவதுண்டு. அது அறிவுத்தேடல் தோற்றுவிக்கும் மனத்துயர். அத்தகைய அறிவுத்தேடலின் சாயல் கூட தெரசாவின் கடிதங்களில் இல்லை. அவர் அறிவின் சாயல் கூட எஞ்சியிராத வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபையின் உலைக்களத்தில் உருக்கி அடிக்கப்பட்ட அடிமை.

நீதியற்ற உலகின் நீதியாய், இரக்கமற்ற உலகின் இதயமாய் கடவுளைச் சரணடையும் மக்களின் மத உணர்வு கூட ""கடவுளே உனக்குக் கண்ணில்லையா'' என்று குமுறி நம்பிக்கை இழக்கும். தெரசாவைச் சூழ்ந்திருந்த ஏழைகளும் நோயுற்றவர்களும் அநாதைகளும் வடித்த கண்ணீர் "தேவன் இருக்கிறானா' என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பவில்லை.

""ஏழ்மையைச் சகித்துக்கொள்வதும் கிறிஸ்துவின் துயரத்தோடு அதனைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அழகானது. ஏழை மக்களின் துயரம் இந்த உலகுக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் கருதுகிறேன்'' என்று 1981இல் ஒரு பேட்டியில் குறிப்பட்டார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் சகோதரி நிர்மலா இதை மேலும் தெளிவுபடுத்துகிறார், ""ஏழ்மை என்பது இருக்கத்தான் செய்யும். தங்களுடைய ஏழ்மையை சரியான கோணத்தில் ஏழைகள் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்''. வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு புற்றுநோயாளியிடம் தெரசா பேசுவது படமாகப் பதிவாகியிருக்கிறது, ""சிலுவையில் இயேசு துன்புற்றதைப் போல நீ துன்புறுகிறாய். இயேசு உன்னை முத்தமிடுகிறார் என்று நினைக்கிறேன்'' என்கிறார் தெரசா. ஆனால், தான் நோய்வாய்ப்படும்போது இயேசுவால் முத்தமிடப்படுவதை தெரசா விரும்பவில்லை. மன உறுத்தல் ஏதுமின்றி அமெரிக்காவில் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.

தெரசாவின் இல்லத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக உலகெங்கும் ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வடிகட்டிய பொய். அங்கே வலியால் துடிப்பவர்களுக்கு வலி நிவாரணி மருந்து கூடத் தரப்படுவதில்லை என்ற உண்மையை பல மருத்துவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கல்கத்தா இல்லத்தைக் காட்டி தெரசா உலகெங்கும் வசூலித்த பல நூறு கோடி ரூபாய்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கே கட்டப்படவில்லை. மாறாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒயினும் கறியும் புழங்கும் 500 செமினரிகளை அமைத்திருக்கிறார் தெரசா.

இந்த இரக்கமின்மை அவரது தனிப்பட்ட குணாதிசயம் அல்ல. இதுவே ஒரு சித்தாந்தமாக, மதக் கோட்பாடாக அவர் சிந்தனையில் பதிந்திருக்கிறது. இத்தகைய சிந்தனையின் மீதான விசுவாசமின்மை எதையும் அவரது கடிதங்கள் எழுப்பவில்லை என்பதும் கவனத்துக்குரியது.

தெரசாவை அம்பலப்படுத்தும் "நரகத்தின் தேவதை' என்ற செய்திப்படத்தைத் தயாரித்த கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் கூறுகிறார்: ""தெரசா ஒரு வெகுளி என்றோ புத்திசாலி என்றோ நான் நினைக்கவில்லை. சிக்கலான மனப்பாங்கும் அவருக்குக் கிடையாது. ஆனால் ஒரு வகையான சூழ்ச்சித் தன்மை அவரிடம் இருந்தது. அவர் கத்தோலிக்க வெறி பிடித்த ஒரு கடுங்கோட்பாட்டுவாதி, ஒரு மோசடிப் பேர்வழியும் கூட'' என்கிறார். தெரசாவின் மீது மதிப்புக் கொண்டவர்கள் இதனைப் படித்ததும் ஆத்திரப் படலாம். ஆனால் இக்கூற்று ஆதாரமற்றதல்ல.

ஹெய்தி நாட்டின் சர்வாதிகாரியும், அமெரிக்கக் கைக்கூலியுமான டுவாலியரை ""அற்புதமானவர். ஏழைகள் என்னமாய் அவரை நேசிக்கிறார்கள்'' என்று வியந்தார் தெரசா. போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ""இது ஒரு விபத்தாக இருக்கலாம். மன்னித்து விடுங்கள்'' என்று உபதேசித்தார். பங்குச் சந்தை மோசடி மூலம் அமெரிக்க சிறுமுதலீட்டாளர்களிடமிருந்து 250 மில்லியன் டாலர் பணத்தைச் சூறையாடிய கீட்டிங் என்பவனிடமிருந்து நன்கொடை வாங்கினார் தெரசா. ""பாவப்பட்ட மக்களிடம் திருடிய பணம் தன்னிடம் தரப்பட்டால் கிறிஸ்து என்ன செய்திருப்பாரோ அதைச் செய்யுங்கள். பணத்தை மக்களிடம் திருப்பிவிடுங்கள்'' என்று அமெரிக்காவிலிருந்து தெரசாவுக்குக் கடிதம் எழுதினார் அரசு வக்கீல். தெரசா பதிலளிக்கவில்லை. மாறாக, ""கீட்டிங்கின் தண்டனையை ரத்து செய்யுங்கள்'' என்று நீதிபதிக்குக் கடிதமெழுதினார் தெரசா. பெண்களுக்கு மணவிலக்கு உரிமை இல்லாத அயர்லாந்தில் அது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது ""மணவிலக்குக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு தேவனிடம் மன்னிப்பே கிடையாது'' என்று பிரச்சாரம் செய்தார்; அடுத்த 2 மாதங்களில் டயானாவின் மணவிலக்கை ஆதரித்து கருத்து வெளியிட்டார்.

அரசியல் அறிவற்ற பரிதாபத்துக்குரிய ஒரு கன்னியாஸ்திரீயாக தோற்றம் தந்தாலும், திருச்சபையின் ஆதரவு பெற்ற கொடுங்கோலர்களின் பக்கம்தான் தெரசா எப்போதுமே நின்றார். போராடும் மக்களின் பக்கம் தவறிக்கூட அவர் நின்றதில்லை. அறமோ நேர்மையோ இல்லாத இந்த நடவடிக்கைகள் அவரது விசுவாசிகளையே துணுக்குறச் செய்தன. ஆனால் இவையெதுவும் தெரசாவிடம் மனப்போராட்டத்தைக் கூடத் தோற்றுவிக்கவில்லை.

தெரசாவின் இதயத்தில் தேவன் இல்லையேயொழிய, ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியான "திருச்சபை' உறுதியாகவே அமர்ந்திருந்தது. எனவே, திருச்சபையின் ஊழல்கள், ஒழுக்கக் கேடுகள், அறம் வழுவிய செயல்கள் எதுவும் அவருடைய இந்த ஆன்மீக நெருக்கடிக்குக் காரணமாக அமையவில்லை. பிழைப்பதற்குரிய தொழிலாக தேவ ஊழியத்தைத் தெரிவு செய்து கொண்டிருக்கும் விசுவாசமற்ற பாதிரியார்களிடமிருந்து இந்த விசயத்தில் தெரசா எந்த வகையிலும் வேறுபட்டவராக இல்லை.

தனக்கே விசுவாசமில்லாத ஒன்றின்மீது மற்றவர்களை விசுவாசம் கொள்ளச் செய்யும் மோசடியில் தெரசாவும் ஈடுபட்டிருக்கிறார். தான் இறந்த பிறகும் தன்னிடம் நிலவிய விசுவாசமின்மையை வெளியிட வேண்டாமென்ற அவரது கோரிக்கை, அவரது சிந்தனையில் ஊறியிருந்த கூச்சமற்ற போலித்தனத்தையே காட்டுகிறது.

ஆதரவற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்காக அவர் தொடங்கிய சேவையே அவரது இதயத்திலிருந்து அன்பை உறிஞ்சி எடுத்துவிட்டது. ஏழ்மையை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை ஒழிக்கத் துடிப்பவர்களிடம் மட்டுமே ஏழைகள் மீதான அன்பு இடையறாமல் சுரக்க முடியும். ஏழ்மையின் துயரத்தில் கிறிஸ்துவைக் காண்பவர்களால் ஏழைகளை நேசிக்க முடியாது.

கிறிஸ்துவை நேசிக்கும் பொருட்டுத்தான் தெரசா ஏழைகளை நேசித்தார். எந்த அளவுக்கு ஏழ்மையும் துயரமும் அவருக்கு உணர்ச்சியற்றவையாக ஆகத்தொடங்கினவோ, அதே அளவுக்கு கிறிஸ்துவும் அவருக்கு உணர்ச்சியற்றவரானார். ஆனால், ""விசுவாசத்தை இழக்க இழக்க, மேலும் தீவிரமான விசுவாசியாகத் தன்னை அவர் காட்டிக்கொண்டார். தன்னைக் குணமாக்கிக் கொள்ள தெரசா செய்த இந்த முயற்சி, தனக்குத் தானே அவர் வெட்டிக் கொண்ட படுகுழியை மேலும் ஆழப்படுத்தியிருக்கும்'' என்கிறார் ஹிட்சென்ஸ்.

தன்னில் கிறிஸ்து இறங்கியதாக கருதிக்கொண்ட அந்த மாயக்காட்சி (Hallucination) அனுபவம் இன்னொரு முறை நிகழுமென்று தெரசா எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால் 1946இல் இருந்தது போல "திறமைகள் ஏதுமற்ற பரிதாபத்துக்குரிய முதிர்கன்னியாய்' தெரசா இல்லையே! நிர்வாகம், நன்கொடை, விருதுகள், விமானப்பயணங்கள், தொலைக்காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடனான சந்திப்புகள் என அவரது வாழ்க்கை விரிந்து விட்டது. பொய்மை, இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லாத் தீமைகளும் அவர் இயல்பில் சேர்ந்து விட்டன.

எனினும், தெரசாவுக்குள் மிச்சமிருந்த அந்த அல்பேனிய முட்டாள் பெண் அவ்வப்போது விழித்துக் கொண்டு ஏசுவைத் தேடியிருக்கிறாள். ஆனால், தேவனைக் கதறி அழைக்கத் தேவைப்படும் கையறு நிலை தெரசாவின் வாழ்க்கையிலிருந்து அகன்று விட்டது. எவ்வளவு முயன்றும் அந்த மாயக்காட்சியை இன்னொருமுறை அவரால் தன்னில் தருவிக்க முடியவில்லை.

· மருதையன்

புதிய கலாச்சாரம்

நன்றி: தமிழரங்கம்

Thursday, December 20, 2007

பாமக பச்சோந்தியும் சில 'கூஜா'க்களும்!!

ஒரு பச்சோந்தியும் சில 'கூஜா'க்களும்

உருட்டல் - மிரட்டலால் உண்மையை மறைக்க முடியுமா?

""அடுத்த தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு'' என்ற தலைப்பில் ""புதிய ஜனநாயகம்'' ஆகஸ்டு இதழில் அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. ""பாரபட்சமின்றி'' அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி வரும் ""புதிய ஜனநாயகம்'', பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் இராமதாசின் சந்தர்ப்பவாத, மோசடி அரசியலை உரிய நேரத்தில் உரிய வகையில் அம்பலப்படுத்தியிருப்பதாகப் பலரும் வரவேற்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற ஊரில் இருந்து முரளி என்ற வாசகர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக ஆட்சியாளரின் பச்சோந்தித்தனத்தை அம்பலப்படுத்தி வருவதற்கு மனமார்ந்த பாராட்டுதலைத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இக்கருத்துக்கு நேர்மாறாக சென்னை வடபழனியில் இருந்து கி.ராம் (செட்டியார்) என்பவர், தன்னை ஒரு புதிய ஜனநாயகம் வாசகர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டு மிகவும் கீழ்த்தரமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பு.ஜ. வாசகர் என்றும், ம.க.இ.க. காரன் என்று புளுகிக் கொண்டு வடபழனி கி.ராம் எழுதிய இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஒரு பழைய நினைவுதான் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், பண்ருட்டி இராமச்சந்திரன் பா.ம.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவரை விமர்சித்து எழுதியதற்காக, அப்போது இராமதாசு கட்சி நடத்தி வந்த ""தினப்புரட்சி'' நாளேட்டிலும், கடிதம் மூலமாகவும் ""புதிய ஜனநாயகம்'' பத்திரிக்கையாளரைக் கேவலமாக திட்டி எழுதியிருந்தனர். பு.ஜ. அதற்குப் பதிலடியும் எழுதியிருந்தது. பா.ம.க.வினரால் அன்று தாங்கிப் பிடிக்கப்பட்ட ""பண்ருட்டியார்'' பின்னர் என்ன ஆனார், பா.ம.க.வினராலேயே எவ்வளவு தூரம் வசைபாடப்பட்டார் என்பதும், அக்கட்சியினர் இப்போது மறந்து போன சங்கதி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் பு.ஜ. விற்றுக் கொண்டிருந்த இரண்டு தோழர்களை சூழ்ந்து கொண்ட பா.ம.க.காரர்கள் சிலர் இதழ்களைப் பிடுங்கி கிழித்து வீசினர். வேறு சிலரோ தோழர்களின் விளக்கத்துக்குப் பிறகு இதழ்களை வாங்கிச் சென்றனர்.

இப்போது, பா.ம.க. "பசுமைத் தாயக'த்தின் நிர்வாகிகள் என்று கூறிக் கொண்டு ""புதிய ஜனநாயகம்'' தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு உருட்டுவதும், புலம்புவதும், மிரட்டுவதும் வசவுபாடுவதுமாக உள்ளனர்.

""எங்க அய்யாவைப் பத்தி என்னய்யா இப்படி அநாகரிகமாக எழுதியிருக்கீங்க? பத்திரிகைன்னா என்ன வேணாலும் எழுதறதா? மத்த கட்சிக்காரனெல்லாம் பண்ணாததையா எங்கய்யா பண்ணிட்டாரு? எங்க அய்யாவை மட்டும் ஏன் எழுதற? எல்லா விசயத்திலும் மக்களுக்காக எங்கய்யாதான் போராடிக்கிட்டு இருக்காரு, முன்மாதிரியா தொலைக்காட்சி கூட எப்படி நடத்தலாம்னு நடத்திக் காண்பிக்கிறாரு, அவரப்பத்தி இப்படி இழிவுபடுத்தி எழுதலாமா?''

இவர்களில் யாருமே அரசியலுக்காக பா.ம.க.வில் உள்ளவர்கள் அல்ல; பிழைப்புக்காக அக்கட்சியில் இருப்பவர்கள் என்பது அவர்கள் எழுப்பும் கேள்விகளில் இருந்தே தெரிகிறது. ""எங்கய்யாவைப் பச்சோந்தின்னு எப்படி எழுதலாம்? மத்த கட்சிக்காரனெல்லாம் யோக்கியமா? ஏன் எங்கய்யாவை மட்டும் எழுதற? பொன்முடிகிட்ட தி.மு.க. கிட்ட "சூட்கேசு' வாங்கிக் கிட்டுதானே இப்படி எழுதறே? நேத்து வந்த விஜயகாந்த் எல்லாம் கனவு காண்றப்ப மக்களுக்காக உயிரைக் கொடுத்துப் போராடுற எங்கய்யா கனவு காணக்கூடாதா?'' என்றவாறான இந்தக் கேள்விகளில் எங்காவது அரசியல் இருக்கிறதா? எல்லா ஓட்டுக் கட்சிகளைப் போலத்தான் பா.ம.க.வும் என்று இவர்களின் வாக்குமூலமே அக்கட்சி மற்றும் தலைமையின் யோக்கியதையை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது.

இவர்களில் ""புதிய ஜனநாயகம்'' எழுதியுள்ள அரசியல் மீது எந்தக் கேள்வியும் எழுப்புவதற்கு யோக்கியதை உண்டா? நாடாளுமன்றத்துக்கு பா.ம.க. அனுப்பியுள்ள புதுவை எம்.பி.யான இராமதாசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஆதரித்து, வரவேற்று அங்கே பேசுகிறார். இங்கே இந்த "ஐயா' இராமதாசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்துப் பேசுகிறார். எது பா.ம.க.வின் நிலை? இதைப் புரிந்து கொள்ளும், கேள்வி கேட்கும் பா.ம.க.காரர்களைத்தாம் அரசியலுக்காக அக்கட்சியில் இருப்பவர்களாகக் கருதமுடியும். அப்படி இல்லாமல் வெறுமனே இராமதாசுக்குத் துதிபாடும் பிழைப்புவாதிகள்தாம் ""புதிய ஜனநாயகம்'' பத்திரிகையை உருட்டி, மிரட்டிப் பார்க்கிறார்கள்.

யார் இந்த இராமதாசு? பா.ம.க.வில் அவருக்கு என்ன பொறுப்பு? தனக்குக் கட்சியில் பதவி வேண்டாம் என்று தியாகியைப் போல நாடகமாடிக் கொண்டே, ஜெயலலிதாவைப் போல யாரோ எழுதித்தரும் அறிக்கைகளுக்கு கையெழுத்துப் போட்டு வெளியிடுவதைத் தவிர கட்சியில் எந்தப் பொறுப்பும் ஏற்காது, அடிமுதல் முடி வரை கட்சிப் பொறுப்பாளர்களை நியமிக்கவும், அவர்களின் விசுவாசத்தை சந்தேகித்தால் தூக்கியடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தால் அன்பு மகன், மனைவி, மருமகள், பேத்தி எல்லோருக்கும் ""பதவி'' வழங்குவதை யும் இவர்கள் கேள்வி கேட்கிறார்களா? ""பத்து நாட்களில் ரிலையன்சு கடைகளை மூடாவிட்டால் இழுத்துப் பூட்டுவோம்'' என்று இராமதாசால் எச்சரிக்கை விடப்பட்ட ரிலையன்சு ஃபிரெஷ் கடைகள் இன்னமும் திறந்தே கிடக்கிறது பா.ம.க வீரர்கள் அங்கே போவார்களா?

— ஆசிரியர் குழு

Friday, December 07, 2007

பொதுவுடமை சமூகமும், அல்பவாத தவளையின் கிணற்று விட்டமும்!!

மிழ்மணி என்பவர் பொதுவுடமை சமூகம் குறித்து அசுரனில் வந்த கட்டுரை ஒன்றுக்கு பதில் என்ற பெயரில் ஒரு எதிர்வினை எழுதியுள்ளார். அவரது இன்னபிற உளறல்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த கட்டுரையில் ஓரளவு முயற்சி செய்துள்ள அதே வேளையில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் வேலையையும் செய்துள்ளார் என்பதால் இந்த வாய்ப்பை பய்ன்படுத்திக் கொள்ளும் முகமாக இந்த எதிர் கட்டுரை. அவரது சேறடிக்கும் கயமையான முயற்சி குறித்து நாம் வைத்த அனைத்து விமர்சனங்களையும் உண்மையாக்கும் வகையில் அவரது இந்த கட்டுரை இருப்பதுடன். பொதுவுடமை குறித்து அவர் எழுப்பிய அல்பத்தனமான கேள்விகளின் அடிப்படையில் ஒரு உருப்படியான சுற்றுலா செல்லும் வகையிலும் இருப்பதால இந்த கட்டுரை. மற்றபடி விவாதம் செய்யும் நோக்கம் அவருக்கு கிஞ்சித்தும் கிடையாது. அப்படி ஒரு நேர்மையான அணுகுமுறையில் இருப்பவர் என்றால் ஸ்திரமாக நின்று விசயங்களில் விவாதம் செய்ய வேண்டும். அப்படி ஒரு நடைமுறையை அவர் இது வரை காட்டவில்லை. இந்த கட்டுரையில் எழுப்பியுள்ள அடிப்படை கேள்விகளில் விவாதம் செய்ய இங்கேயே வரலாம். பிறரது பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது. அவர் வரலாம். ஏனேனில் அவரது எதிர்வினைகளைப் போலவே அவரது அனானி ஆட்டங்களும் நேர்மையின்றி உள்ளன.

தமிழ்மணியின் கட்டுரை: http://thamizmani.blogspot.com/2007/12/blog-post.html

எனது பழைய கட்டுரை: டோண்டுவின் போலித்தனம் - கம்யுனிசம்

மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பதை ரொம்ப மேலோட்டமாக புரிந்து கொண்டு அவர் முதலில் பதில் சொல்கிறார். அவர் எதிர்வினை புரிந்த அசுரன் கட்டுரையின் கீழேயே கம்யுனிச சமூகத்தில் மனிதர்களிடையே எந்த அம்சங்களில் வேறுபாடு இருந்தது என்பதும் எந்த அம்சத்தில் இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்(இதற்க்கும் தமிழ்மணி எதிர்வினை புரிந்துள்ளார்). குறிப்பாக ஏற்றத்தாழ்வு என்ற சொல்லாடலே தவறு.

முதல் விசயம், மனிதர்களிடையே வேறுபாடு இருந்திருக்குமா? இருந்திருக்கலாம். ஆனால் இங்கு புரதான கம்யுனிச சமூகம் என்ற அம்சத்தில் நாம் குறிப்பிடும் விசயம் இவர்கள் சொல்கின்ற வேறுபாடுகள் அல்ல. ஒரு புரதான பொதுவுடைமை சமூக கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினனும் கிட்டத்தட்ட ஒரே விதமான உடல், அறிவு பலமே கொண்டிருப்பர். பெரிய வேறுபாடெல்லாம் வெளி தெரிந்திருக்கக் கூடிய அளவு அங்கு நவீனமான உற்பத்தியோ வேறு நடவடிக்கைகளோ கிடையாது என்கிற போது இவர்கள் குறிப்பிடுகிற வேறுபாடுகள் குறித்த கேள்விக்கே இடமில்லை. இதே விசயம் நவீன விஞ்ஞான பொதுவுடைமை சமுதாயத்தில் எப்படி இருக்கும் என்பதை தனியாக பார்க்கலாம். புரதான பொதுவுடைமை சமுதாயத்தில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை அப்படியே பயன்படுத்திக் கொள்வதும், வேட்டைத் திறன், இயற்கை குறித்த அறிவு உள்ளிட்டதும் மட்டுமே அங்கு அ செவர்களிநயே ஏற்படுத்தும் வேறுபாடு. இதுவும் பிரதானமாக அனுபவம் சார்ந்தது.

அதாவது வளங்களின் மீதான பகிர்வு, பொது அறிவு இவை குறித்தானதாக இருக்கீறது சம்த்துவம் என்ற வார்த்தைப் பயன்பாடு. தமிழ்மணியோ அவற்றை பாத்ரூம் போவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தி அதனை வாதம் என்ற பெயரில் வைக்கீறார். இந்த அம்சத்தில்தான்(வளங்களின் மீதான பகிர்வு, பொதுஅறிவு) மனிதர்களிடையேயான வேறுபாடு தனியுடைமை சமூகத்தில் ஏற்படுகீறது. இந்த வேறுபாடு பொதுவுடைமை சமூகத்தில் இருக்காது. பொது அறிவு விசயத்தில் இன்றைய சமூக அளவுகோல் கொண்டே அவரும் பேசுகிறார். அதாவது மனிதர்களிடையே அறிவு ஓப்பீடை வைத்து புத்திசாலி, முட்டாள் என்று பிரிக்கும் தனியுடைமை சமூக ஒப்பீடு அவரது சிந்தனைக்கு அடிப்படை. உண்மையில் இந்த ஒப்பீடு மனிதர்களிடையே முரன்பாடு இருப்பதானேலேயே உருவாகிறது. பொதுவுடைமை சமூகத்தில் இயற்கையுடனே முரன்பாடு இருக்கும். அங்கு புத்திசாலி, முட்டாள் என்று மனித்ர்களை த்ரம் பிரிக்கும் அவசியம் இருக்காது. ஏனேனில் அங்கு தனிமனிதன் என்று ஒருவனை அடையாளப்படுத்துவதற்க்கான் சமூக பொருளாதார அடிப்படைகள் தகர்க்கப் பட்டிருக்கும். அந்தளவில் அந்த சமூகத்தினுடைய பண்பாட்டு வளர்ச்சியிருக்கும்(ஒரு ஆண்டான் அடிமை சமூக பண்பாடுகள் எப்படி நமக்கு ஒவ்வாத பண்பாடோ அப்படி).

ஒரு குரங்கு நெருப்பில் விழுந்த கறியின் சுவை அறிந்து அதனை விரும்பி உண்ணும் அறிவை கற்றுக் கொள்ளலாம் ஆனால் நெருப்பில் வெந்த கறியை சுவைத்த பிற்பாடு அது ஏன் அவ்வாறு சுவைக்கீறது என்று ஆய்வு செய்து நெருப்பை உருவாக்க குரங்கால் முடியுமா? மிருகங்கள் இயற்கையுடன் முரன்படுவதும் அதனை தமது தேவைக்காக வளைப்பதும் முற்றிலும் வெளி சூழ்நிலைகளால் அவற்றின் ஜீன்களில் திணிக்கப்பட்டவை. ஆனால் மனிதன் அவ்வாறல்ல வெளிச் சூழ்நிலையின் பல்வேறு அனுபவங்களை தொகுத்து ஒரு கலெக்டிவ் அனுபவத்தை வந்தடையும் ஆறாவது அறிவு பெற்றவன். இதுதான் இய்ற்கையுடன் அவன் முரன்படுவது என்ற சொற்றொடரின் அர்த்தம். இயற்கையுடன் மனிதன் முரன்படுவது என்ற இந்த கேள்வி குழந்தைகளுக்கான அறிவியல் பாடங்களில் கூட விரிவாக எளிமையாக விவரிக்கப்படும் விசயம்தான். இவையெல்லாம் தமிழ்மணிக்கு தெரியுமா என்றால், பதில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவருககு இல்லை. ஏனேனில் நேர்மையாக விவாதம் செய்பவனுக்குத்தான் அது அவசியம். சும்மா வார்த்தைகளின் மீது தமது கருத்துக்களை திணித்து அழிவு வேலை செய்ய உத்தேசித்தவர்களுக்கு அது தேவையில்லை.

குடும்பம் என்கிற விசயத்தில் அந்த கட்டுரையிலிருந்த மைய்யமான ஒரு விசயத்தை வெகு வசதியாக மறைத்துவிட்டே அவர் பேசுகிறார். இதற்க்கு குரங்குகளிடையே கட்டற்ற பாலுறவு கிடையாது என்று வாதம் வைக்கிறார். ஆனால் அசுரன் கட்டுரை எந்த அம்சத்தில் பேசுகிறது என்பதை வார்த்தைகளை பிய்த்து போட்டு மறைக்கிறார். மிருகங்கள் இயற்கை தேர்வின் அடிப்படையில் பல்வேறு வடிவங்களில் தமது சமூக அமைப்புகளையும் உட்பிரிவுகளையும் வைத்துக் கொள்கின்றன. ஆனால் உடலுறவு விசயத்தில் தாயை புணர்வது தவறு, தந்தையை புண்ரக் கூடாது, தங்கை தம்பியை புணரக்கூடாது என்று விதிகள் வகுத்துக் கொண்ட வளர்ச்சி என்பதே இன்றைய குடும்பம் என்ற வடிவத்தின் ஆதி வடிவம். இந்த வடிவம் மனிதனையும் மிருகங்களையும் பிரித்துக் காட்டும் முக்கிய அம்சம் என்ற அடிப்படையில் அந்த வாதத்தை வைத்திருந்தேன். ஆனால் அதனை தனது திரிபுக்காக பயன்படுத்திக் கொண்டார் தமிழ்மணீ. எதையும் ஆழமாக படிக்காமல் சேறடிக்கும் நோக்கத்துடன் அவர் பேசுகிறார் என்று அவர் மீது வைத்த விமர்சனத்தை மேலும் மேலும் உண்மையாக்கி வருகிறார் தமிழ்மணி. கட்டற்ற பாலுறவு என்கிற அம்சத்தை எந்த விதத்தில் அசுரன் கட்டுரை அணுகுகிறது. அதை எப்படி மிருகங்களுக்கும் மனிதனுக்கும் பொருத்தி வேறுபடுத்துகிறது என்பதையெல்லாம் உள்வாங்காமலேயே வார்த்தைகளை பார்த்தவுடன் சேறடிக்க வாய்ப்பு கிடைத்த பரவசத்தில் எழுதி இப்படி அசிங்கப்படுகீறார் தமிழ்மணி. ஆக, இந்த உடலுறவு கட்டுப்பாடுகளில் மனிதன் அது வரையில் இயற்கையிலிருந்த வழக்கத்துக்கு மாறாக சென்றான் என்பதை குறித்தே இந்த பகுதி வருகிறது.

//பூகோளம், நிறம், உடலியல் ரீதியான சிறுசிறு மாற்றங்களே, ஏற்றத்தாழ்வுகளே, மிகப்பெரிதாக ஆம்ப்ளிபை ஆகி பெரிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். //

ஆம் உண்மை இது ஆதிகால இயற்கைக்கு உட்பட்டு வாழ்ந்த மனிதனிடம் இன்றைய மனிதன் இயற்கையை ஆளுமை செய்யும் அளவு வலிமை பெற்றவன். எனவே இந்த அம்சம் அவனிடம் ஏற்படுத்தும் பாதிப்பு ஓப்பிட்டளவில் குறைவே. இத்தனைக்கும் இன்றைய சமூகத்தில் மனிதன் இயற்கையுடன் முரன்படுவது தனது அறிவியல் பலத்திலும் ஓரளவு அமைப்பாக திரண்ட சமூக பலத்திலுமே. விஞ்ஞான பொதுவுடைமை சமூகத்தில் இந்த இரண்டு அம்சத்திலும் மனிதன் ஒரு சமூகமாக இன்னும் அதீதமான பலம் பெற்றிருப்பான் எனும் பொழுது இந்த அவரது எதிர் வாதத்தின் பொருத்தப்பாடு இல்லாமல் போகிறது. அவர் வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் குறித்து படித்தால் ஆய்வு செய்யும் முறை குறித்த அறிவு ஓரளவு கிட்டும். மற்றபடி பொதுவுடமை சமூகம் என்பதே இயற்கையுடனான முரன்பாட்டை மட்டுமே கொண்ட ஒரு சமூகம் என்ற அடிப்படையிலேயே இந்த கட்டுரை முழுவதும் உள்ளது. இதன் அர்த்தம் இயற்கையின் நேச்சுரல் செலக்ஸனுக்கும் மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் அவனது அறிவு பலத்திற்க்குமான முரன்பாடே கம்யுனிச சமூக வளர்சிக்கான அடிப்படை இயங்கியல் என்பதே ஆகும்.

இங்கு தனியுடைமை என்பதை மனிதன் ஒரு சமூகம் என்ற அளவில் பொருத்திக் காட்டியே குறிப்பிடுகிறேன். ஒரு சமூக கூட்டம் என்ற அளவில் மனிதன் தனது சமூகத்துக்கு உட்பட்ட எல்லா வளங்களையும் பொதுவிலேயே வைத்துக் கொண்டான். யாரும் எதற்க்கும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆக இந்த அம்சத்திலும் பரவசத் திலகம் தமிழ்மணி அவுட் ஆப் கண்டக்ஸ்டிலேயே பேசுகிறார். இதனை குறிப்பிட்டு டார்வினுடைய கட்டுரை பகுதி ஒன்றையும் குறிப்பிட்டுருந்தேன். அதிலுள்ள கருத்தை விமர்சிக்க பயந்த தமிழ்மணி அதனை முன்னிட்டு முதலாளித்துவம் என்று நான் குறிப்பிட்டிருந்ததை மட்டும் சுட்டி செல்கிறார். ஒருவேளை டார்வின் அசுரனைப் போல அனானி அல்ல என்ற பயமாக இருக்கலாம். அதாவது அசுரனைப் பேசினால் அசுரன் சார்ந்த ஆட்கள் மட்டுமே வாதாடுவார்கள் டார்வினை விம்ர்சிப்பது என்பது அப்படிப்பட்டதல்ல அல்லவா?

கடைசிவரை அசுரன் கட்டுரை எந்த அம்சங்களில் பேசுகீறதோ அது எதையும் பேசாமல் வெறுமே வார்த்தைகளை பிய்த்துப் போட்டு கம்யுனிசத்துக்கு எதிரான தனது மன அரிப்பை சொறிந்து தீர்த்து கொள்ளும் ஒரு மனநோயாளியாகவே தெரிகிறார் தமிழ்மணி.


அசுரன்

Related Posts with Thumbnails